• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்தும் கூகுள், பேஸ்புக்: ஆஸ்திரேலியா போன்று இந்தியாவிலும் சட்டம் தேவை - சுஷில் மோடி

செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்தும் கூகுள், பேஸ்புக்: ஆஸ்திரேலியா போன்று இந்தியாவிலும் சட்டம் தேவை - சுஷில் மோடி

சுஷில் மோடி

சுஷில் மோடி

மீடியா துறையினர் செய்தி சேகரிப்பதற்காக நிருபர்கள், ஊழியர்கள், பல்வேறு உபகரணங்களில் பெரும் பணத்தை முதலீடு செய்து நம்பகமான செய்திகளை தருகின்றனர். ஆனால் லாபம் முழுதும் கூகுள் நிறுவனத்துக்கு செல்கிறது.

  • Share this:
ஆஸ்திரேலியாவில் செய்தி நிறுவனங்களுக்கு கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களை பணம் செலுத்தச் செய்யும் வகையில் சட்டம் இயற்றியதை போல இந்தியாவிலும் சட்டம் இயற்ற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும் பீகார் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.

சிஎன்என் - நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி அளித்துள்ள பேட்டியில், “செய்தி நிறுவனங்களின் தரவுகளை பயன்படுத்துவதற்காக டெக் ஜெயண்ட்களான கூகுள், ஃபேஸ்புக், யூடியூப் நிறுவனங்கள் தங்களின் வருவாயை செய்தி நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஆஸ்திரேலியாவில் சட்டம் இயற்றியதை போல மத்திய அரசும் சட்டம் இயற்ற வேண்டும் ” என தெரிவித்தார்.

மீடியா துறையினர் செய்தி சேகரிப்பதற்காக நிருபர்கள், ஊழியர்கள், பல்வேறு உபகரணங்களில் பெரும் பணத்தை முதலீடு செய்து நம்பகமான செய்திகளை தருகின்றனர். ஆனால் லாபம் முழுதும் கூகுள் நிறுவனத்துக்கு செல்கிறது.

ஆஸ்திரேலியாவில் இந்த நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்தும் தரவுகளுக்காக கட்டணம் செலுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதற்கு முன்பு வரை அவை இலவசமாகவே பயன்படுத்தப்பட்டு வந்தது. அவை அனைத்தும் மிகப்பெரிய நிறுவனங்கள், ஏகபோகமாக பயன்படுத்தி வந்தனர். இருப்பினும் ஆஸ்திரேலியா அதனை செய்து முடித்துள்ளது.

இந்தியாவிலும் ஆஸ்திரேலியா போன்று சட்டம் தேவை. இந்த விவகாரத்தை நான் பாராளுமன்றத்தில் எழுப்பியுள்ளேன். கூகுள் நிறுவனம் அதனுடைய வருவாயை செய்தி நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும். இது தொடர்பாக செய்தி மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு கடிதம் எழுத இருப்பதாகவும் சுஷில் மோடி தெரிவித்தார்.

இந்தியாவில் பிரிண்ட், தொலைக்காட்சி நிறுவனங்கள் கொரோனா பெருந்தொற்று பரவலால் பண நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றன, வருவாய் இழப்பையும் சந்தித்து வரும் நேரத்தில் இவற்றின் செய்திகளை இலவசமாக பயன்படுத்தி கூகுள், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற பெரும் நிறுவனங்கள் சம்பாதித்துக்கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் விளம்பரங்களும் இந்த நிறுவனங்களுக்கே சென்று கொண்டிருக்கின்றன. ஆஸ்திரேலியா போன்று இந்தியாவிலும் சட்டம் இயற்றி இந்த நிறுவனங்கள் இந்திய செய்தி நிறுவனங்களுக்கு வருவாயை பகிர வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என சுஷில் மோடி தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: