ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

சார்ஜர் இல்லாமல் ஐபோன் விற்பனை... ஆப்பிள் நிறுவனத்துக்கு 20 மில்லியன் டாலர் அபராதம் விதித்த நீதிமன்றம்

சார்ஜர் இல்லாமல் ஐபோன் விற்பனை... ஆப்பிள் நிறுவனத்துக்கு 20 மில்லியன் டாலர் அபராதம் விதித்த நீதிமன்றம்

ஐபோன் சார்ஜர்

ஐபோன் சார்ஜர்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் சார்ஜர் இல்லாமல் விற்கப்பட்டதற்கு 20 மில்லியன் டாலர் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaBrazilBrazil

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில் சார்ஜர் இல்லாமல் விற்கப்பட்டதற்கு நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கில் பிரேசில் நீதிமன்றம் அதிரடியாக 20 மில்லியன் டாலர் அபராதம் விதித்ததுடன் இனி சார்ஜர் உடன் தான் ஐபோன் விற்பனை செய்ய வேண்டும் என்று அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.

பிரேசிலில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை விற்பனை செய்யும் போது அதனின் சார்ஜரை வழங்காமல் வெறும் போனை மட்டும் விற்பனை செய்துள்ளனர். இதனை எதிர்த்து ஜபோன் வாடிக்கையாளர்கள், வழிசெலுத்துபவர்கள் போன்றவர்கள் இணைந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கினர்.

பிரேசில் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் தற்போது அதிரடியாக இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது. முந்தைய காலங்களில் ஐபோன் சார்ஜர் ஆப்பிள் நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த நாட்களில் வரும் ஐபோன் மாடல்களில் சார்ஜர் வழங்கப்படுவது இல்லை.

ஆன்ராய்டு போன்கள் போல் ஐபோனுக்கு எளிதாகக் குறைந்த விலையில் சார்ஜர் கிடைப்பது கிடையாது. போனுடன் சார்ஜர் வராத நிலையில் அதற்காகத் தனியாக வெளியில் பெரும் தொகைக் கொடுத்து வாங்க வேண்டியதாக உள்ளது என்று வாடிக்கையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

போனை விற்பனை செய்யும் போது அதற்கான சார்ஜரையும் அதனுடன் வழங்குவது கட்டாயமாகவுள்ளது என்று பிரேசில் நீதிமன்றம் இனி பிரேசிலில் விற்பனை செய்யும் ஐபோனுடன் சார்ஜரை இணைந்து வழங்க வேண்டும் என்று தீர்ப்பை அளித்துள்ளனர். மேலும் கடந்த நாட்களில் வழங்காத காரணத்தினால் அபராதமும் விதித்துள்ளது.

Also Read : இந்தியாவில் ஐபோன்களில் 5ஜி சேவை எப்போது கிடைக்கும் தெரியுமா?

ஆப்பிள் நிறுவனம் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக சார்ஜர் வினியோகத்தை நிறுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த நிகழ்வு உலக அரங்கில் ஐபோன் பயனர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில வருடங்களாக ஐபோன் சார்ஜர் போனுடன் வழங்கப்படுவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Apple, Apple iphone, Brazil