ஜனவரி 15 முதல் தொடங்கும் Honor View 20 புக்கிங்!

புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு Honor Sport BT இயர்ஃபோன் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

ஜனவரி 15 முதல் தொடங்கும் Honor View 20 புக்கிங்!
ஹானர் ஸ்மார்ட்ஃபோன்
  • News18
  • Last Updated: January 10, 2019, 1:22 PM IST
  • Share this:
ஹூவே நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் ஸ்மார்ட்ஃபோன் நிறுவனம் Honor View 20-க்கான புக்கிங் இந்தியாவில் ஜனவரி 15-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Honor View 20 இந்தியாவில் வருகிற ஜனவரி 29-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனைத் தளங்களில் மட்டுமல்லாது HiHonor இந்தியா ஸ்டோர்களிலும் புக்கிங் நடைபெற உள்ளது.

கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட Honor View 20 தற்போது இந்தியாவிலும் களம் இறங்குகிறது. செல்ஃபி கேமிரா, டூயல் கேமிரா மற்றும் 48 மெகா பிக்சல் சென்சார் உடன் உள்ளது இப்புதிய ஸ்மார்ட்ஃபோன்.


அமேசானிலும் ஜனவரி 15-ம் தேதி முதல் 29-ம் தேதி வரையில் புக்கிங் நடைபெறுகிறது. புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு Honor Sport BT இயர்ஃபோன் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

ஆன்லைனில் புக் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் Honor View 20 வழங்கும் 1,000 ரூபாய் மதிப்புள்ள கிஃப்ட் கார்டு உடன் வழங்கப்படுகிறது. இந்த கிஃப்ட் கார்டை வாடிக்கையாளர்கள் ஜனவரி 30-ம் தேதி அமேசானில் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதன் பின்னர் இயர்ஃபோன்ஸ்-க்கான கூப்பனை பிப்ரவரி 15-ம் தேதி அமேசான் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.

மேலும் பார்க்க: ‘பேட்ட’ முதல் நாள்... முதல் காட்சி... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
First published: January 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்