Home /News /technology /

இனி வாட்ஸ் அப் மூலம், Uber app பயன்படுத்தாமலேயே Cab-ஐ புக் செய்யலாம் - புதிய வசதி

இனி வாட்ஸ் அப் மூலம், Uber app பயன்படுத்தாமலேயே Cab-ஐ புக் செய்யலாம் - புதிய வசதி

Uber - Whatsapp

Uber - Whatsapp

Uber மற்றும் WhatsApp நிறுவனங்கள் இந்தியாவில் புதிய பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளன.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
கடந்த 8 ஆண்டுகளாக இந்தியாவில் இயங்கி வரும் Uber-ன் வாகன சேவை இந்தியாவில் சுமார் 70 நகரங்களில் கிடைக்கிறது. இப்போது Uber App-ஐ பயன்படுத்தாமலேயே ஒரு வாடிக்கையாளர் Cab-ஐ புக்கிங் செய்து கொள்ளலாம். அது எப்படி என்பதை பார்ப்போம்.

விரைவில் இந்திய வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி உபர் (Uber) சவாரிகளை புக் செய்ய முடியும். இதற்காக Uber மற்றும் WhatsApp நிறுவனங்கள் இந்தியாவில் புதிய பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளன. இரு நிறுவனங்களின் இந்த பார்ட்னர்ஷிப் காரணமாக Uber-ன் அதிகாரப்பூர்வ WhatsApp chatbot மூலம் கேப் சவாரியை (Cab Ride) வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்து கொள்ளலாம்.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள Uber நிறுவனம், வாட்ஸ்அப் உடனான தங்கள் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பு உலகளவில் முதன்மையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. WhatsApp உடன் அமைத்துள்ள புதிய பார்ட்னர்ஷிப் வாடிக்கையாளர்கள் ஒரு WhatsApp மெசேஜை அனுப்புவது போல எங்கள் நிறுவனத்தின் வாகன சவாரிக்கு புக்கிங் செய்யலாம். இதன் மூலம் Uber Cab-ஐ புக் செய்வது முன்பை விட இன்னும் எளிதாக இருக்கும் என்று Uber கூறி இருக்கிறது.

Also read:  திடீரென குறைந்த ட்விட்டர் ஃபாலோயர்ஸ்... குழம்பிய யூஸர்கள்.. காரணம் இதுதான்!

இந்த புதிய வசதி இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் கிடைக்குமா?

தற்போதைக்கு இந்த புதிய வசதி லக்னோ நகரில் மட்டும் சோதனை அடிப்படையில் வெளியிடப்படுகிறது. வெகு விரைவில் மற்ற இந்திய நகரங்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என Uber நிறுவனம் தெரிவித்துள்ளது.

இனி Uber app தேவைப்படாதா?

ஆம். வாட்ஸ்அப்புடனான இந்த பார்ட்னர்ஷிப் மூலம், ரைடர்ஸ் இனி Uber app-ஐ டவுன்லோட் செய்யவோ அல்லது பயன்படுத்தவோ தேவையில்லை என்று நிறுவனம் கூறியுள்ளது. யூஸர் ரிஜிஸ்ட்ரேஷன், புக்கிங் ரைட், ட்ரிப் ரிசிப்ட் உள்ளிட்ட அனைத்தும் WhatsApp chat interface-ல் நிர்வகிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. WhatsApp-ஐ பயன்படுத்தி ஒரு Uber Cab-ஐ எப்படி புக்கிங் செய்வது என்பதை தற்போது பார்க்கலாம்.

Also read:  சொந்த நாட்டு பிரதமரையே அசிங்கப்படுத்திய பாகிஸ்தான் தூதர் - இம்ரான் கானுக்கு தலைகுனிவு

* முதலில் WhatsApp-ற்கு செல்ல வேண்டும்

* +91 792000002 என்ற நம்பருக்கு “Hi” மெசேஜை அனுப்ப வேண்டும்

* பிக்அப் மற்றும் டிராப்-ஆஃப் (drop-off) லொக்கேஷன்களை வழங்குமாறு குறிப்பிட்ட chatbot உங்களிடம் கேட்கும்

* இதனை தொடர்ந்து நீங்கள் upfront fare தொடர்பான தகவலையும் டிரைவரின் எதிர்பார்க்கப்படும் வருகை நேரம் ( driver’s expected time of arrival) தொடர்பான தகவலையும் பெறுவீர்கள்.

WhatsApp மூலம் ரைடை புக் செய்தாலும் Uber app மூலம் நேரடியாக தங்கள் சவாரியை புக்கிங் செய்பவர்களுக்கு வழங்கப்படும் அதே பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் காப்பீட்டு பாதுகாப்புகளை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள் என்று Uber நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே போல தற்போது WhatsApp மூலம் சவாரி செய்வதற்கான இந்த விருப்பம் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும். இருப்பினும், விரைவில் மற்ற இந்திய மொழிகளுக்கும் இந்த அம்சம் விரிவுபடுத்தப்படும். அடுத்த ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் இந்த வசதியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் Uber கூறி இருக்கிறது.
Published by:Arun
First published:

Tags: Uber, WhatsApp

அடுத்த செய்தி