விபத்து எதிரொலி...! போயிங் 737 மேக்ஸ் விமான சாப்ட்வேர் விரைவில் மாற்றம்!

விமான விபத்துக்கு அதில் உள்ள தொழில்நுட்ப கோளாறே காரணம், விமானத்தை இயக்குவதற்கு விமானிகள் சிரமப்படுகின்றனர் என்று கூறிவந்தனர்.

விபத்து எதிரொலி...! போயிங் 737 மேக்ஸ் விமான சாப்ட்வேர் விரைவில் மாற்றம்!
போயிங்
  • News18
  • Last Updated: March 16, 2019, 1:20 PM IST
  • Share this:
எத்தியோப்பியாவுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் விமான விபத்திற்குப் பிறகு, அந்த வகை விமானத்தின் சாப்ட்வேர் 10 நாட்களுக்குள் புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து 149 பயணிகள் 8 பணியாளர்களுடன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட விமானத்தில் சென்ற அனைவரும் உயிரிழந்தனர்.

விமான விபத்துக்கு அதில் உள்ள தொழில்நுட்ப கோளாறே காரணம், விமானத்தை இயக்குவதற்கு விமானிகள் சிரமப்படுகின்றனர் என்று கூறிவந்தனர்.

இதுவரையில் விமானத்தின் மென்பொருளால் தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று எங்கும் கூறவில்லை. ஆனால் போயிங் விமான நிறுவனம் 737 மேக்ஸ் விமானத்தின் சாப்ட்வேர் பேட்ச் 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

புதிய சாப்ட்வேர் பேட்ச் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து போயிங் 737 மேக்ஸ் விமானங்களிலும் விரைவில் மாற்றப்படும் என்றும் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

மேலும் பார்க்க:
First published: March 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்