முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / மூன்றாவது விண்வெளி சுற்றுலா விமானத்தை ஏவும் ப்ளூ ஆரிஜின்!

மூன்றாவது விண்வெளி சுற்றுலா விமானத்தை ஏவும் ப்ளூ ஆரிஜின்!

மூன்றாவது விண்வெளி சுற்றுலா விமானத்தை ஏவும் ப்ளூ ஆரிஜின்!

மூன்றாவது விண்வெளி சுற்றுலா விமானத்தை ஏவும் ப்ளூ ஆரிஜின்!

நியூ ஷெப்பர்ட் விண்கலம் பூமிக்கும் விண்வெளிக்கும் இடையிலான எல்லையான கர்மான் லைன் எனப்படும் பூமியின் மேற்பரப்பில் இருந்து கிட்டத்தட்ட 100 கிமீ, அதாவது சுமார் 3,50,000 அடி உயரத்தை எட்டும்.

  • Last Updated :

இரண்டு விண்வெளிப் பயணங்களை வெற்றிகரமாக முடித்த பிறகு, ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் இந்த ஆண்டின் மூன்றாவது ‘விண்வெளி சுற்றுலா’ விமானத்தை ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது. நியூ ஷெப்பர்ட் விண்கலம் ஆறு பயணிகளை விண்வெளிக்கு அழைத்து செல்ல உள்ளது.

ப்ளூ ஆரிஜின்:

ப்ளூ ஆரிஜின் தனது விண்வெளி சுற்றுலா சேவைகளை 2021 இல் தொடங்கியது, அதன் நிறுவனர் ஜெஃப் பெசோஸை தொடக்க விமானத்தில் முதலில் அறிமுகப்படுத்தியது. ஏரோஸ்பேஸ் நிறுவனமானது SpaceX உடன் நேரடி போட்டியில் உள்ளது. இதன் எதிர்கால பெரிய சுற்றுலா விமானம் Polaris Dawn திட்டமிடலில் உள்ளது. இருவரும் நிலவுக்கான பயணங்கள் உட்பட அரசாங்க ஒப்பந்தங்களுக்கு போட்டியிடுகின்றனர்.

செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறை மாதிரிகளை எடுக்க நாசா திட்டம்

நிறுவனத்திற்கான ஆறாவது ‘மனித விண்வெளிப் பயணம்’ ஆகஸ்ட் 4 அன்று காலை 8:30 CDT (மாலை 6:50 IST) மணிக்கு ஏவுதளத்தில் இருந்து புறப்படும். இதன் பயணம் 10 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும். பூமிக்கு அப்பால் இருக்கும் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் எடையற்ற தன்மையை அனுபவிக்க பயணிகளுக்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

இந்த நிறுவனத்தின் இந்த ஆண்டின் மூன்றாவது விமானமாகவும், கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால வளர்ச்சியில் 22 வது விமானமாகவும் இருக்கும். இந்த விமானத்தில் விண்வெளிக்கு செல்லும் முதல் எகிப்தியர், முதல் போர்ச்சுகீசியர் மற்றும் பிரிட்டிஷ்-அமெரிக்க மலையேறும் வனேசா ஓ'பிரைனைச் சேர்ந்த முதல் நபரம் அடங்குவர். இந்த பயணம் முடிந்தால், வனேசா நிலம், கடல் மற்றும் காற்றில் உச்சத்தை எட்டிய முதல் பெண்மணியாக இருப்பார் என்று ப்ளூ ஆரிஜின் நிர்வாகி கூறுகிறார். அதோடு, கின்னஸ் உலக சாதனையான எக்ஸ்ப்ளோரர்ஸ் எக்ஸ்ட்ரீம் ட்ரிஃபெக்டாவை வனேசா நிறைவு செய்வார்.

இந்த பயணத்தில், டியூட் பெர்பெக்ட் நிறுவன தலைவர் கோபி காட்டன், போர்த்துகீசிய தொழில்முனைவோர் மரியோ ஃபெரீரா, பிரிட்டிஷ்-அமெரிக்க மலையேறும் வீரர் வனேசா ஓ'பிரைன், தொழில்நுட்பத் தலைவர் கிளின்ட் கெல்லி III, எகிப்திய பொறியாளர் சாரா சப்ரி மற்றும் தொலைத்தொடர்பு நிர்வாகி ஸ்டீவ் யங் ஆகியோர் விண்வெளிக்குச் செல்வார்கள்.

நியூ ஷெப்பர்ட் விண்கலம் பூமிக்கும் விண்வெளிக்கும் இடையிலான எல்லையான கர்மான் லைன் எனப்படும் பூமியின் மேற்பரப்பில் இருந்து கிட்டத்தட்ட 100 கிமீ, அதாவது சுமார் 3,50,000 அடி உயரத்தை எட்டும். 1 நபருக்கே பல மில்லியன் டாலர்கள் கட்டணமாகும்.

விண்வெளிக்கு செல்லும் இந்த பயனாளிகள் குழு உடையில் பொறிக்கப்படும் குறியீட்டை ப்ளூ ஆரிஜின் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் எகிப்தின் சாரா சப்ரியின் பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமிடுகளைபொரித்துள்ளது. உலகின் ஆழமான மரியானா ட்ரெஞ்ச், சேலஞ்சர் டீப்பின் கீழ் உச்சங்களை எட்டும் வனேசா ஓ'பிரையனின் சாதனையை பிரதிபலிக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது, குழுவின் காப்ஸ்யூல் கூடைப்பந்து போல் அமைக்கப்பட்டுள்ளது.

top videos

    மரியோ ஃபெரீராவின் போர்த்துகீசிய பாரம்பரியத்தை பிரதிபலிக்க மாகெல்லனின் கப்பழும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மாகெல்லனின் கப்பலுக்கு கீழே மீன் நீந்துவது ஸ்டீவ் யங்கின் மீன்பிடித்தலின் ஆர்வத்தை குறிக்கிறது. ஸ்டேஜ்கோச் விண்வெளியின் புதிய எல்லைக்குள் மனிதகுலம் சென்றடைவதற்கான கிளின்ட் கெல்லி III இன் அபிலாஷைகளை குறிக்கிறது.

    First published:

    Tags: Space, Tourism