Home /News /technology /

இன்று முதல் முடிவுக்கு வரும் பிளாக்பெர்ரி போன்கள்!

இன்று முதல் முடிவுக்கு வரும் பிளாக்பெர்ரி போன்கள்!

பிளாக்பெர்ரி

பிளாக்பெர்ரி

சிலர் பிளாக்பெர்ரி போன்களை பயன்படுத்தி வருக்கின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த பயன்பாட்டை நிறுத்த போவதாக கூறிய நிலையில் சில யூசர்களுக்காக நிறுத்தும் நாட்களை நீட்டித்தது.

பிளாக்பெர்ரி (Blackberry ) os போன்கள் இன்று முதல் (ஜனவரி மாதம் 4-ம் தேதி முதல்) நம்பகத்தன்மையுடன் இயங்காது என அதன் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் அறிவித்துள்ளது. அதில் தற்போதைய பிளாக்பெர்ரி போன்களில் குறிப்பிடத்தக்க சேவைகளை 2022ம் ஆண்டு முதல் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. எனவே இன்று முதல் ( ஜனவரி 4 ) மொபைல் போன் நெட்வொர்க்குகளுடன் இணைக்க முடியாது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கீபோர்டை மையமாகக் கொண்ட வடிவமைக்கப்பட்ட பிளாக்பெர்ரியின் போன்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் பிளாக்பெர்ரி போன்கள் சரிவை சந்தித்தது.

2013ம் ஆண்டில் ஆண்ட்ராய்டு மற்றும் iOS கவரும் வகையில் BlackBerry 10 போனை அறிமுகப்படுத்தியது. பின்னர் இறுதியாக இந்த நிறுவனம் 2015ல் புதிய ஸ்லைடர் போனாக BlackBerry Priv வெளியிட்டது. 2016-ல் BlackBerry உலக சந்தையில் தனது பெயரை நிலைநாட்ட TCL கம்யூனிகேஷன் மற்றும் இந்தியாவில் Optiemus Infracom உள்ளிட்டவைகளுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் இந்த முயற்சிகளும் தோல்வியை தழுவியது.

ALSO READ |  பிரதமரின் பாதுகாப்பிற்காக ரூ.12 கோடியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Mercedes-Maybach S650 Guard-ன் சிறப்பம்சங்கள்!

இதனால் Android.BlackBerry தன்னால் தொழில்துறையை பராமரிக்க முடியாது என்பதை உணர்ந்து இந்த துறையில் இருந்து வெளியேறியது. மேலும் பிளாக்பெர்ரி-பிராண்டு உரிமத்தை ஒரு சில உற்பத்தியாளர்களுக்கு விற்றது ஆனால் கார்ப்பரேட் பாதுகாப்பு சேவைகளை பராமரித்தது.

Mashable-ன் கூற்றுப்படி, கார்ப்பரேட் பாதுகாப்பு சேவைகளை பராமரிப்பது பழைய பிளாக்பெர்ரிகளை தொடர்ந்து ஆதரிக்கும் என்பதாகும்.ஆனால் தற்போது வெளியான அறிவிப்பில் பிளாக்பெர்ரி போனில் செல்லுலார் (cellular) அல்லது wifi உதவியுடன் அடுத்த வாரத்திலிருந்து பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளது. ஒருசிலர் இன்னும் பிளாக்பெர்ரி போன்களை பயன்படுத்தி கொண்டு இருக்கின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த பயன்பாட்டை நிறுத்த போவதாக கூறிய நிலையில் ஒரு சில யூசர்களுக்காக நாட்களை நீட்டித்தது.

ALSO READ |  செகண்ட் ஹேண்ட் வாகன விற்பனையில் இறங்கிய Ashok Leyland!

மேலும், இந்த அறிவிப்பு ஆண்ட்ராய்டை அடிப்படையாக கொண்டு இயங்கும் பிளாக்பெர்ரி போன்களுக்கு பொருந்தாது என்றும் கூறியுள்ளது. வரும் ஜனவரி 4 முதல் பிளாக்பெர்ரி 7.1 OS, பிளாக்பெர்ரி 10, பிளாக்பெர்ரி OS 2.1 உள்ளிட்ட வெர்ஷன்கள் இனிமேல் நம்பகத்தன்மையுடன் செயல்படாது என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் அறிவித்துள்ளது.

அதாவது செல்லுலார்(cellular) அல்லது wifi உதவியுடன் இயங்கும் பிளாக்பெர்ரி போன்களில் அழைப்புகள், குறுஞ்செய்தி அனுப்புதல், அவசர அழைப்பு எண்ணான 911 ஆகியவற்றை கூட கால் செய்யமுடியாது, கேஜெட்டுகள் இறுதியில் வேலை செய்வதை நிறுத்திவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இணையதளத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், போன்களில் அப்டேட்டுகள் வழங்குவது குறித்தும் இனி பதிலளிக்காது என்று கூறியுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Smartphone

அடுத்த செய்தி