பிட் காயினில் ரூ.10,000 கோடி முதலீடு செய்த எலான் மஸ்க்: இனி டெஸ்லாவின் சேவைகளை பிட்காயின் செலுத்தி வாங்கலாம் என அறிவிப்பு!

எலான் மஸ்க்!

பொருளாதார நிபுணரான எட்வர்ட் மோயா கூறுகையில், பிற முதலீட்டாளர்கள் பிட் காயினில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்தால் ஒரு பிட் காயினின் விலை 45,000 டாலர்களை தாண்டும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.a

  • Share this:
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் கிரிப்டோ கரன்சியான பிட் காயினில் சுமார் 10,000 கோடி ரூபாயை முதலீடு செய்திருப்பதாகவும், இனி தங்கள் நிறுவனங்களில் பொருட்கள், சேவைகளை பிட் காயின் மூலம் செலுத்தி பெறலாம் என அறிவித்துள்ளார். இதன் மூலம் பிட் காயினின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது.

கிரிப்டோ கரன்சியான பிட் காயின் என்பது blockchain எனப்படும் கணினி முறையில் உருவாக்கப்பட்ட மின்னணி பணமாகும். இவை ஆன்லைன் முறையில் இயங்குவதால் எந்த நாட்டுடனும் தொடர்பற்றதாக இருக்கிறது. இவற்றை பயன்படுத்தி எந்த நாட்டின் பணத்தையும், பொருட்களையும் வாங்க முடியும் என சொல்லப்படுகிறது.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இவை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை, மாறாக இவற்றை பயன்படுத்துவது முறையற்ற ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.

எலான் மஸ்க்!


இந்நிலையில் அதிரடிக்கு பெயர் போன உலகின் முதல் பணக்காரர் எலான் மஸ்க் பிட் காயினில் 1.5 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,000 கோடி) முதலீடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இனி தங்கள் நிறுவனங்களிடமிருந்து வாங்கும் பொருட்கள், பெறக்கூடிய சேவைகளை பிட் காயின் செலுத்தி பெறலாம் என கூறியுள்ளார்.

சமீபத்தில் தான் எலான் மஸ்க் தனது ட்வீட் ஒன்றில் பிட் காயினின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

எலான் மஸ்க் பிட் காயினில் முதலீடு செய்ததால் அதன் மதிப்பு பன்மடங்காக உயர்ந்துள்ளது. ஒரு பிட்காயினின் விலை 40,000 டாலர்களை கடந்துள்ளது. எலான் மஸ்க் பிட் காயினில் முதலீடு செய்திருப்பது பிற தொழிலதிபர்களுக்கு உந்துதலை அளித்துள்ளது.

இது தொடர்பாக பொருளாதார நிபுணரான எட்வர்ட் மோயா கூறுகையில், பிற முதலீட்டாளர்கள் பிட் காயினில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்தால் ஒரு பிட் காயினின் விலை 45,000 டாலர்களை தாண்டும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
Published by:Arun
First published: