மைக்ரோசாப்ட் இயக்குநர்கள் குழுவில் இருந்து பில்கேட்ஸ் விலகல்...!

”65 வயதான பில்கேட்ஸ் இந்திய மதிப்பில் 7 ,62,000 கோடி ரூபாய் சொத்துடன் உலகக் பணக்காரர்கள் வரிசையில் 2-வது இடத்தில் உள்ளார்”

மைக்ரோசாப்ட் இயக்குநர்கள் குழுவில் இருந்து பில்கேட்ஸ் விலகல்...!
”65 வயதான பில்கேட்ஸ் இந்திய மதிப்பில் 7 ,62,000 கோடி ரூபாய் சொத்துடன் உலகக் பணக்காரர்கள் வரிசையில் 2-வது இடத்தில் உள்ளார்”
  • Share this:
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இருந்து அதன் நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ் விலகியுள்ளார்.

அறக்கட்டளை பணிகளில் கூடுதல் நேரத்தை செலவிடும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளாவின் தொழில்நட்ப ஆலோசகராக அவர் தொடர்ந்து பணியாற்றுவார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் சுகாதாரம், கல்வி, காலநிலை மாற்றம் ஆகியவை தொடர்பான பணிகளில் ஈடுபட உள்ளதாக அவர் கூறியுள்ளார். 1975-ல் பால் ஆலனுடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பில்கேட்ஸ் தொடங்கினார். 2000மாவது ஆண்டு வரை சிஇஓவாக இருந்த அவர், 2008-ல் நிறுவனத்தின் அன்றாடப் பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.


65 வயதான பில்கேட்ஸ் இந்திய மதிப்பில் 7 ,62,000 கோடி ரூபாய் சொத்துடன் உலகக் பணக்காரர்கள் வரிசையில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசுக்கு அடுத்த படியாக இரண்டாம் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...
First published: March 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading