Home /News /technology /

மலிவான மின்னுற்பத்தித் தொழில்நுட்பம் - பீகார் பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு

மலிவான மின்னுற்பத்தித் தொழில்நுட்பம் - பீகார் பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு

மின்சாரம்

மின்சாரம்

Cheap electricity technology : உலகின் மிக மலிவான ஹைட்ரோ லிஃப்டிங் தொழில்நுட்பம் இதுதான் என்று பள்ளி மாணவன் ரோஹித் கூறுகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Bihar |
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர், உலகிலேயே மலிவான மின்சாரம் தயாரிக்க கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்.

பீகாரை சேர்ந்த 15 வயது ரோஹித் குமார் ஏழு வருட கடுமையான ஆராய்ச்சிக்குப் பிறகு குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்க ஹைட்ரோ லிஃப்டிங் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். பாட்னாவின் சந்திரகுப்த் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (சிஐஎம்பி) இன்குபேஷன் பவுண்டேஷன் அவரது இந்தத் தொழில்நுட்பத்தை பாதுகாத்து வருகிறது. இந்த ஹைட்ரோ லிஃப்டிங் தொழில்நுட்பம் கொல்கத்தாவில் உள்ள அறிவுசார் சொத்து உரிமைகள் (IPR) மையத்தில் இருந்து தற்காலிக காப்புரிமையைப் பெற்றுள்ளது.

மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படும்?
இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படைத் திறன்  என்னவென்றால், மற்ற ஹைட்ரோ மின்சார உற்பத்தி போல் அல்லாது இந்த முறையின் மூலம் மின்சாரம் தயாரிக்க, அணைக்கு ஒரு முறை மட்டும் தண்ணீர் வரவழைக்கப்பட்டால் போதும். மின்சாரம் தயாரிக்க பட்ட பிறகு, மிகக் குறைந்த ஆற்றலைச் செலவழித்து, கீழ் அணையிலிருந்து மேல் அணைக்கு தண்ணீரை எளிதாகக் கொண்டு செல்ல முடியும்.

நீங்க கோபப்பட்டா பேசமாட்டான்.. உணர்வுகளை புரிந்துக்கொள்ளும் ரோபோ..! - சென்னை மாணவனின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் செலவு எப்படி குறைக்கப்படும்?

கீழ் அணையில் இருந்து மேல் அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல, உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 15 சதவீதம் மட்டுமே செலவிடப்படும். மீதமுள்ள 85 சதவீதத்தை மற்ற தேவைகளுக்கு பயன்படுத்தலாம். இப்போது இருக்கும் நடைமுறைப்படி கீழணையில் இருந்து உயரமான அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல மிகவும் செலவாகும். அதனால் உற்பத்தி பலன் என்பது குறைவாகவே இருக்கும்.

இதுவரை இல்லாத அளவு உலகின் மிக மலிவான ஹைட்ரோ லிஃப்டிங் தொழில்நுட்பம் இதுதான் என்று ரோஹித் கூறுகிறார். தற்போது இந்தத் தொழில்நுட்பத்திற்கு தற்காலிக காப்புரிமை பெறப்பட்டுள்ளது. விரைவில் நிரந்தர காப்புரிமை பெறப்படும். அதற்கும் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

இத்தொழில்நுட்பத்தின் மூலம், மூன்று ஏக்கர் பரப்பளவில், 11 கோடி ரூபாய் செலவில், ஒரு மெகாவாட் வரை மின்சாரம் தயாரிக்க முடியும். அதேபோல் இதன் மூலம் ஆண்டு முழுவதும் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று ரோஹித் தெரிவித்தார்
Published by:Ilakkiya GP
First published:

Tags: Bihar, Electricity, New invention, Technology

அடுத்த செய்தி