Home /News /technology /

Big Smartphone Launches : இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியல்..

Big Smartphone Launches : இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியல்..

ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியல்

ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியல்

Oppo And Realme : பிப்ரவரி மாதம் துவங்கி சில நாட்கள் ஆகிவிட்ட நிலையில் 2022-ஆம் ஆண்டின் இந்த இரண்டாவது மாதத்தில், பல ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் பிற கேஜெட்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.


  • பிப்ரவரி மாதம் துவங்கி சில நாட்கள் ஆகிவிட்ட நிலையில் 2022-ஆம் ஆண்டின் இந்த இரண்டாவது மாதத்தில், பல ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் பிற கேஜெட்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. சாம்சங்கின் நெக்ஸ்ட் ஜென்ரேஷன் Galaxy S-s-series ஃபிளாக்ஷிப் முதல் Oppo-வின் Reno 7 சீரிஸ் மற்றும் Xiaomi-யின் Redmi Note 11S உள்ளிட்டவை வரை இந்த பிப்ரவரி மாதத்தில் பல புதிய வெளியீடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.


  • ஒப்போ ரெனோ 7 சீரிஸ் (Oppo Reno 7 Series):



    ஒப்போ ரெனோ 7 மற்றும் ஒப்போ ரெனோ 7 ப்ரோ ஆகிய 2 ஸ்மார்ட் ஃபோன்கள் நேற்று அறிமுகமாகியுள்ளது.
    இந்த 2 ஸ்மார்ட் ஃபோன்களுடன் சேர்த்து ஒப்போ நிறுவனம் ஒப்போ வாட்ச் ஃபரீ ஸ்மார்ட்வாட்ச்சையும் (Oppo Watch Free smartwatch) அறிமுகப்படுத்தி உள்ளது. முன்னதாக Oppo Reno 7 Series கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்தியாவிற்கு வந்துள்ளது. சீரிஸின் 2 ஸ்மார்ட் ஃபோன்களும் MediaTek ப்ராசஸருடன் வெளியாகி உள்ளது. பின்புறத்தில் டிரிபிள் கேமரா செட்டப்புடன் வெளியாகி உள்ளது.

    சாம்சங் கேலக்ஸி S22 சீரிஸ் (Samsung Galaxy S22 Series):



    இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீடுகளில் ஒன்றான சாம்சங் கேலக்ஸி S22 சீரிஸ் வரும்பிப்ரவரி 9-ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும். Samsung Galaxy S22, Galaxy S22+ மற்றும் Galaxy S22 Ultra ஆகியவை சாம்சங்கின் லேட்டஸ்ட் ஃபிளாஷிப் மொபைல்களாக வெளியாக உள்ளன.

    இதையும் படியுங்கள் : முதன் முறையாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன் வாங்கியிருப்போர் தெரிந்துக்கொள்ள வேண்டியது என்ன.?

    மேற்காணும் ஸ்மார்ட் ஃபோன்கள் சாம்சங்கின் எக்ஸினோஸ் 2200 அல்லது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 ப்ராசஸரை கொண்டிருக்கும். மேற்சொன்ன 3 மொபைல்களில் Samsung Galaxy S22 மற்றும் Galaxy S22+ ஆகியவை ஸ்கிரீன் சைஸை தவிர ஸ்பெசிஃபிகேஷன்களின் அடிப்படையில் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மறுபுறம் Galaxy S22 Ultra இந்த ஆண்டு கேலக்ஸி நோட் சீரிஸை மாற்றும் வகையில் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ரெட்மி நோட் 11 & ரெட்மி நோட் 11 எஸ் (Redmi Note 11 & Redmi Note 11S):



    மீபத்தில் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட சியோமியின் Redmi Note 11 மற்றும் Redmi Note 11S உள்ளிட்ட மொபைல்கள் வரும் 9-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. Redmi Note 11 மொபைல் 90Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 6.43-இன்ச் ஃபுல்-HD LCD டிஸ்ப்ளேவுடன் வரலாம்.

    இதையும் படியுங்கள் : உங்கள் மொபைலின் செயல்திறனை அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டியவை

    இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் மூலம் 6GB வரை ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கலாம். Redmi Note 11S மொபைலும் 6.43-இன்ச் டிஸ்ப்ளே, 90Hz ரெஃப்ரஷ் ரேட்டை கொண்டு வரலாம். இந்த ஸ்மார்ட்போன் 8GB ரேம் மற்றும் 128GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்ட மீடியா டெக் ஹீலியோ ஜி96 சிப்செட்டை கொண்டிருக்க கூடும்.

    விவோ டி1 5ஜி (Vivo T1 5G):



    விவோ நிறுவனம் தனது புதிய Vivo T1 5G மொபைலை வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி அறிமுகப்படுத்தும் என தெரிகிறது. மேலும் இது Flipkart மூலம் விற்பனைக்கு வரும். Vivo T1 5G ஒரு ஸ்லிம் ப்ரொஃபைலுடன் ரூ.20,000 என்ற விலையில் கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    ரியல்மி 9 ப்ரோ / ரியல்மி 9 ப்ரோ+ (Realme 9 Pro/ Realme 9 Pro+):



    ரியல்மியின் இந்த புதிய மொபைல்கள் வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி இந்தியாவிற்கு வரும். மேலும் இவை கேமராவை மையமாக கொண்ட ஸ்மார்ட் ஃபோன்கள் என்று கூறப்படுகிறது. தவிர Realme 9 Pro+ மொபைல் ஹார்ட் ரேட் சென்சாருடன் வரும் என்று கூறப்படுகிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: RealMe, Smartphone, Xiaomi

அடுத்த செய்தி