800 மில்லியன் பெண்களுக்காக... அறிமுகமானது ’பீரியட்ஸ் ஈமோஜி’!

இதுவரையில் சோகம் ஈமோஜி, அழும் ஈமோஜிக்களையே பெண்கள் வழக்கமாக பீரியட்ஸ் காலங்களில் அதை வெளிப்படுத்தப் பயன்படுத்தி வந்தனர்.

Web Desk | news18
Updated: February 8, 2019, 3:19 PM IST
800 மில்லியன் பெண்களுக்காக... அறிமுகமானது ’பீரியட்ஸ் ஈமோஜி’!
பீரியட்ஸ் ஈமோஜி
Web Desk | news18
Updated: February 8, 2019, 3:19 PM IST
பீரியட்ஸ் குறித்து இனி ஒரு ஈமோஜியில் விளக்கிவிடும் அளவுக்கு அறிமுகமாகியுள்ளது ‘பீரியட்ஸ் ஈமோஜி’.

வரியாக வரியாக டைப் செய்வதைக் குறைக்கப் பல ஈமோஜிக்கள் இன்றைய ஆண்ட்ராய்டு உலகில் முக்கிய இடம்பிடித்துள்ளன. அத்தனை விஷயங்களையும் ஒரேயொரு ஈமோஜி மூலம் விளக்கவிட முடியும். வாட்ஸ்அப் ட்ரெண்ட் இதை சாத்தியமாக்கியது.

ஆனால், இத்தனைக் காலம் இல்லாமல் தற்போது அறிமுகமாகியுள்ள ஒரு புது ஈமோஜி சர்வதேச அளவில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுவரையில் சோகம் ஈமோஜி, அழும் ஈமோஜிக்களையே பெண்கள் வழக்கமாக பீரியட்ஸ் காலங்களில் அதை வெளிப்படுத்தப் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், கமர்ஷியல் விளம்பரங்களில் மூடிமறைக்கப்பட்ட குறியீடான நீல நிற பீரியட்ஸ், தற்போது வெளிப்படையாக முற்றிலும் சிவப்பு நிறத்தில் ‘பீரியட்ஸ்’ ஈமோஜியாக ஆண்ட்ராய்டு உலகில் நுழைந்துள்ளது. 59 புதிய ஈமோஜிக்கள், 171 பாலின வேறுபாடுகள் உடன் என மொத்தம் 230 ஈமோஜிக்கள் நிறைந்த ஈமோஜி 12.0 வெளியாகி உள்ளது.

Plan International UK என்ற நிறுவனம் இப்புதிய ஈமோஜியை வடிவமைத்து சர்வதேச இணையப் பயனாளர்களிடம் ஒப்புதலும் வாங்கியுள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஃபோன்களில் இந்தப் புதிய ஈமோஜிக்கள் இடம்பெறும்.

மேலும் பார்க்க: திமுக VS கமல்ஹாசன்... வலுக்கும் மோதல்
First published: February 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...