அக்டோபர் 16 முதல் தொடங்கும் 'பிளிப்கார்ட்' பிக் பில்லியன் விற்பனை.. அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட்ஃபோன்களின் விலைப் பட்டியல்..

பிளிப்கார்ட் தனது ’பிக் பில்லியன் டேஸ்’ விற்பனையை அக்டோபர் 16 முதல் அக்டோபர் 21-ஆம் தேதி வரை நடத்த உள்ளது.

அக்டோபர் 16 முதல் தொடங்கும் 'பிளிப்கார்ட்' பிக் பில்லியன் விற்பனை.. அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட்ஃபோன்களின் விலைப் பட்டியல்..
அக்டோபர் 16 முதல் தொடங்கும் 'பிளிப்கார்ட்' பிக் பில்லியன் விற்பனை
  • Share this:
பிளிப்கார்ட் தனது ’பிக் பில்லியன் டேஸ்’ விற்பனையை அக்டோபர் 16 முதல் அக்டோபர் 21-ஆம் தேதி வரை நடத்த உள்ளது. பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்கள் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் சலுகைகளைப் பெறுவார்கள். வரவிருக்கும் இந்த விற்பனையின்போது எஸ்.பி.ஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடியை வழங்கும். மேலும், பிக் பில்லியன் டேஸ் விற்பனையின்போது வாங்குபவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், மின்னணு கேஜெட்டுகள், உடைகள் மற்றும் பலவற்றில் சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வழங்க உள்ளது.

இதற்கு இணையாக, அமேசான் ’கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ விற்பனையையும் அக்டோபர் 17 முதல் தொடங்க உள்ளது. மேலும், பிளிப்கார்ட்-ன் பிக் பில்லியன் விற்பனை தொடங்கும் நாளான அக்டோபர் 16-ஆம் தேதி அன்றே அமேசான் அவர்களின் பிரைம் உறுப்பினர்களுக்கான ஆரம்ப சலுகையை  வழங்க உள்ளனர்.பிளிப்கார்ட் விற்பனையின்போது குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில், போகோ எம் 2 அடங்கும். 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ரோம் கொண்ட போகோ எம் 2, அதன் அசல் விலையான ரூ.10,499-லிருந்து, ரூ.500 தள்ளுபடியில் விற்கப்படும். போகோ எம் 2 ப்ரோ அதன் ஆரம்ப விலையிருந்து ரூ.1,000 குறைந்து ரூ.12,999-க்கு விற்கப்படும். ரியல்மீ சி 11 ரூ.6,499 என்ற அதன் ஆரம்ப நிலையிலிருந்து ரூ.1,000 குறையும். மோட்டோ இ 7 பிளஸ் ரூ.500 தள்ளுபடி செய்து ரூ.8,499-க்கு விற்கப்படும். மேலும், மோட்டோ ஜி 9 ரூ.11,499-லிருந்து விற்பனையின்போது ரூ.9,999-க்கு கிடைக்கும். மோட்டோ ஃப்யூஷன் பிளஸ் ரூ.15,999-க்கு விற்கப்படும், வெளியீட்டு விலையிலிருந்து ரூ.1,000 குறையும்.


Also read: அமேசானின் எக்கோ ஸ்பீக்கர், கிண்டில் உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களுக்கு 50% வரை தள்ளுபடி!

ரூ.11,499-க்கு அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ ஜி 9 இந்த பிளிப்கார்ட் விற்பனையின்போது ரூ.9,999-க்கு விற்கப்படும். மோட்டோ எட்ஜ் பிளஸ் ரூ.10,000 தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும். இது ரூ.74,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் வரவிருக்கும் விற்பனையின்போது, உங்களுக்கு ரூ.64,999 என்ற விலையில் கிடைக்கும். iQOO 3 ரூ.29,990 தள்ளுபடி விலையில் விற்கப்படும்.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ், இந்தியாவில் ரூ.77, 900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிளிப்கார்ட் டீஸரைப் பொறுத்தவரை கேலக்ஸி எஸ் 20 பிளஸ் இப்போது ரூ.49,999 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும். வரவிருக்கும் இந்த பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின்போது, பல ஸ்மார்ட்போன்கள் அதன் பர்ஸ்ட் சேல்ஸ் தொடங்க உள்ளனர். மேலும் வரவிருக்கும் ஸ்மார்ட் போன்களில், கூகிள் பிக்சல் 4 ஏ, சாம்சங் கேலக்ஸி எஃப் 41, ரியல்மீ 7 ஐ மற்றும் சியோமியின் மீ 10டி சீரிஸ் ஆகியவை அக்டோபர் 15ம் தேதி அறிமுகமாகும் என கூறப்பட்டுள்ளது.
First published: October 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading