ஆன்லைனில் பணம் திருட்டு, ஏமாற்று வேலை என்று நடந்து வருவது அதிகரித்து தான் இருக்கிறது. எவ்வளவு பாதுகாப்பான வழிமுறைகளை மேற்கொண்டாலும், செக்யூரிட்டியை அதிகப்படுத்தி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வழிகளில் ஆன்லைன் திருட்டுகள் நடைபெற்று வருகின்றன. அதில் சமீபத்தில் டெல்லியை சேர்ந்த ஒரு பெண்மணி போலியான வாடிக்கையாளர் கஸ்டமர் கேர் மூலம் 16 லட்ச ரூபாயை இழந்துள்ளார். எவ்வளவு விவரமாக இருந்தாலும் மிகவும் தந்திரமாக ஏமாற்றுபவர்களும் உள்ளனர்.
AnyDesk என்பது வேறொரு இடத்தில் இருக்கும் கணினி அல்லது லேப்டாப் பை அணுகுவதற்கு லைவாக அணுகுவதற்கான ஒரு சாப்ட்வேர் ஆகும். உங்களுடைய கணினியில் AnyDesk என்ற சாப்ட்வேரை நீங்கள் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து, அதற்குரிய குறியீட்டு எண்ணை எனக்கு வேறொரு நபருக்கு கொடுத்தால் உங்கள் கணினியை மற்றொரு நபரால் எந்த இடத்திலிருந்தும் இயக்க முடியும்.
டெல்லியைச் சேர்ந்த பூர்ணிமா என்ற பெண்மணியை, வங்கியின் கஸ்டமர் கேரில் இருந்து அழைக்கிறோம் என்று நம்பும் படி பேசி, AnyDesk டவுன்லோடு செய்யவைத்து, ஏமாற்றி அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து முதல் முறை 13.15 லட்சத்தை பல்வேறு ஆன்லைன் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளனர். பணம் எடுக்கப்பட்டது தொடர்பாக வங்கியில் இருந்து எந்த செய்தியும் பூர்ணிமாவுக்கு கிடைக்கவில்லை என்பதால் பண பரிமாற்றம் நடந்தது பற்றிய விவரங்கள் அவருக்குத் தெரியவே இல்லை.
ALSO READ | உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனில் மால்வேர் அகற்றுவது எப்படி!
இது நடந்த சில நாட்களிலேயே மீண்டும் வங்கியின் பிரதிநிதி என்று வேறு ஒருவர் அழைத்து AnyDesk அக்சஸ் தகவல் பெற்றுள்ளார். ஏற்கனவே நடந்த ஏமாற்று வேலைய பற்றி அறியாததால் மறுபடியும் அந்த விவரங்களை அளித்த பூர்ணிமாவின் கணக்கில் இருந்து மேலும் ஒரு மூன்று லட்ச ரூபாய் பறிபோனது.
AnyDesk என்பது ஒரு மிகச்சிறந்த சாஃப்ட்வேர் ஆகும். இது தொலைவில் இருக்கும் பொழுது கணினியில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அல்லது உதவி தேவைப்பட்டால் அதை வேறொருவர் செய்து முடிப்பதற்கு உதவியாக சாஃப்ட்வேர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதை பயன்படுத்தி பணம் திருடப்படும் என்று யாரும் நினைத்திருக்க வாய்ப்பே இல்லை.
ALSO READ | நெட் இல்லாமல் Youtube வீடியோக்களை பார்ப்பது எப்படி?
இம்மாதிரியான இணைய திருட்டை எப்படி தவிர்க்கலாம் என்பதற்கான குறிப்புகள் இங்கே:
* தேவை இல்லாமல் AnyDesk போன்ற சாப்ட்வேரை உங்கள் கணினியில் பதிவிறக்க வேண்டாம்.
* தெரியாதவர் யார் கூறினாலும் AnyDesk ஐ உங்கள் கணினியிலோ அல்லது ஃபோனிலோ மற்றவர்களின் கோரிக்கையின் பேரில் நீங்கள் டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டாம்.
* அந்நியரிடம் இந்த சாஃப்ட்வேர் பற்றி எந்த விவரங்களையும் நீங்கள் பகிர கூடாது.
* தொலைபேசியில் வங்கி பிரதிநிதி அல்லது வங்கி நிர்வாகி என்று எந்த ஒரு அழைப்பு வந்தாலும் அவர்கள் அவர்களுக்கு உங்கள் வங்கிக் கணக்கு பற்றிய எந்த தகவலையும் எப்பொழுதுமே வழங்கக் கூடாது.
* உங்கள் கணக்குகளின் கடவுச்சொல் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்கவும். உங்கள் கணக்கு என்பது உங்களுக்கானது மட்டுமே நீங்கள் அதை யாரிடமும் பகிரவே கூடாது.
ALSO READ | ஜிமெயில் டிப்ஸ்: கம்பியூட்டர், ஸ்மார்ட்போன் வழியாக ரகசியமாக இமெயில் அனுப்புவது எப்படி?
* மின்னஞ்சலில் வங்கி பற்றி வரும் இணைப்புகளை அப்படியே கிளிக் செய்ய வேண்டாம். மின்னஞ்சல் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டால் நீங்கள் அதை வழங்கக்கூடாது.
* ஒவ்வொரு வங்கியும் அதிகாரபூர்வமான வலைத்தளம் மற்றும் செயலியை உருவாக்கி உள்ளது. எனவே நீங்கள் பிரவுசரில் அதிகாரபூர்வமான வங்கியின் வலைதளத்தை தட்டச்சு செய்து அதன் மூலம் இன்டர்நெட் பேங்கிங் லாகின் செய்யலாம் அல்லது நீங்கள் பயன்படுத்தும் வங்கியின் இன்டர்நெட் பேங்க் செயலியைப் பயன்படுத்தலாம்.
ALSO READ | கூகுளில் இருந்து உங்கள் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை அகற்றுவது எப்படி.!!
* குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்கு ஒருமுறை அல்லது அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்களுடைய வங்கிக் கணக்கிற்கான கடவுச்சொற்களை மாற்ற வேண்டும்.
* கடவுச்சொற்களை கணினியில் சேமிக்க அனுமதிக்காதீர்கள்.
* உங்கள் வங்கிக் கணக்கு அல்லது பேமெண்ட் ஆப்ஸ் என்று நீங்கள் எங்கு லாகின் செய்தாலும் பயன்படுத்திய பிறகு உடனடியாக லாக்-அவுட் செய்து விடவேண்டும்.
* பணப் பரிவர்த்தனை சம்பந்தமாக அல்லது வங்கிக் கணக்கு சம்பந்தமாக எந்த ஒரு அழைப்பு வந்தாலும் அவர்களிடம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, வங்கிக் கணக்கு தகவல் என்று எதைப் பற்றி நீங்கள் பகிர கூடாது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.