ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவரா நீங்கள்... உங்கள் பணம் காணாமல் போகலாம்.. பகீர் எச்சரிக்கை...

ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவரா நீங்கள்... உங்கள் பணம் காணாமல் போகலாம்.. பகீர் எச்சரிக்கை...

 ஆக்டோ தீம்பொருள் ஒவ்வொரு நொடியும் புதுப்பிக்கப்படும் லைவ் ஸ்கிரீன் ஸ்ட்ரீமிங் மாட்யூல்

ஆக்டோ தீம்பொருள் ஒவ்வொரு நொடியும் புதுப்பிக்கப்படும் லைவ் ஸ்கிரீன் ஸ்ட்ரீமிங் மாட்யூல்

ஹேக்கர்கள் சாதனத்தில் ஏமாற்றுவது எளிது. அதாவது மால்வேர் எதிர்ப்பு இயந்திரங்களை, சாதனம் உரிமையாளரால் இயக்கப்படுகிறது என ஏமாற்றும் அளவிற்கு திறமையாக செயல்படுகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஆண்ட்ராய்டு யூஸர்களை எச்சரிக்கும் விதமாக புதிய வகை மால்வேர் வைரஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்ட்ராய்டு போன்களில் புதிய மால்வேர் தாக்கியுள்ளதாக அதிர்ச்சி தரக்கூடிய தகவல் வெளியாகியுள்ளது. என்னதான் ஆண்ட்ராய்டு போன் தயாரிப்பாளர்கள் ஹேக்கர்களிடம் இருந்து தனது யூஸர்களை காக்க பலவகையான பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கினாலும், ஹேக்கர்கள் புதிது புதிதாக மால்வேர்களை உருவாக்கி திருட்டு மற்றும் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது எல்லாவற்றையும் விட அட்வான்ஸாக தொலைவில் இருந்து கட்டுப்படுத்தக்கூடிய வகையிலான குறிப்பிட்ட தன்மையை கொண்ட, மிகவும் ஆபத்தான மால்வேர் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

அக்டோ எனப்படும் இந்த மால்வேர், சாதனத்தை கட்டுப்பாட்டில் எடுத்து, ஹேக்கர் தரும் வழிமுறைகளை ரிமோட் மூலம் செயல்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. த்ரெட் ஃபேப்ரிக்கில் உள்ள சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்களால் அக்டோ மால்வேரைக் கண்டறிந்துள்ளனர். இந்த ட்ரோஜனின் உதவியுடன் ஹேக்கர்கள் சாதனத்தை ரிமோட் முறையில் இயக்கி வங்கி விவரங்கள் உள்ளிட்டவற்றை திருட முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் கசிந்த எக்ஸோபோட் மால்வேரின் சோர்ஸ் கோடில் இருந்து அக்டோ ஆண்ட்ராய்டு மால்வேர் உருவானதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அக்டோ மால்வேர் எவ்வாறு ஹேக்கர்களுக்கு உதவுகிறது?

சைபர் தாக்குபவர்கள் அல்லது ஹேக்கர்கள் ஒரு யூஸரின் ஆண்ட்ராய்டு சாதனத்தை அவர்களுக்கு தெரியாமல் ரிமோட் ஆக்சஸ் மூலமாக அணுகவும், ரகசியமாக பணம் மற்றும் தகவல் பரிமாற்றங்களை செய்யவும் அக்டோ மால்வேர் உதவுகிறது. ஹேக்கர் பாதிக்கப்பட்டவரின் சாதனத்தின் திரையை ஸ்ட்ரீம் செய்வதன் மூலமாக, ரிமோட் ஆக்சஸ் கிடைக்கிறது.

also read : இனி இந்த பரிசோதனை கட்டாயம்... வாகன உரிமையாளர்களுக்கு அதிரடி உத்தரவு..

ஆக்டோ தீம்பொருள் ஒவ்வொரு நொடியும் புதுப்பிக்கப்படும் லைவ் ஸ்கிரீன் ஸ்ட்ரீமிங் மாட்யூல் மூலம் ஊடுருவி, ஆண்ட்ராய்டு சாதனத்தை ரிமோட் மூலம் கட்டுப்படுத்த ஹேக்கர்களை அனுமதிக்கிறது. எனவே, ஹேக்கர்கள் சாதனத்தில் ஏமாற்றுவது எளிது. அதாவது மால்வேர் எதிர்ப்பு இயந்திரங்களை, சாதனம் உரிமையாளரால் இயக்கப்படுகிறது என ஏமாற்றும் அளவிற்கு திறமையாக செயல்படுகிறது. இந்த ரிமோட் செயல்பாடுகளை மறைக்க கருப்பு திரை மேலடுக்கு அக்டோவால் பயன்படுத்தப்படுகிறது.

அறிக்கையின்படி 'ஸ்க்ரீன் டாப்ஸ், டெக்ஸ்ட் ரைட்டிங், கிளிப் போர்டு திருத்தம், டேட்டா பேஸ்டிங், மேலும் கீழும் ஸ்க்ரோல்' ஆகியவை மால்வேருக்கு செய்யக்கூடிய சில டாஸ்க்குகள் என குறிப்பிடப்பட்டுள்ளன. ரிமோட் ஆக்ஸஸ் சிஸ்டத்திற்குத் தவிர, மால்வேர் பாதிக்கப்பட்ட சாதனங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்க முடியும். தடை செய்யப்பட்ட புஷ் அறிவிப்புகள், எஸ்எம்எஸ் இடையூறுகள், தற்காலிக திரைப்பூட்டு, சவுண்ட் டிசபிள், ரிமாட் அப்ளிகேஷன் லாஞ்ச், குறிப்பிட்ட URL ஐத் திறப்பது, மேலும் ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவது உள்ளிட்டவையும் இந்த மால்வேர் மூலம் சாத்தியமாகும்.

இந்த மால்வேர் யூஸர்களின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்கவும் பதிவுசெய்யவும் பயன்படுகிறது. இதில் உள்ள கீலாக் மூலம், ஒரு ஹேக்கருக்கு யூஸர் சாதனைத்தை திறந்த PIN-கள் அல்லது திறந்த இணையதளங்கள் அல்லது கணினியில் கிளிக் செய்து பார்த்தவை ஆகியவற்றை பதிவு செய்ய முடியும்.

First published:

Tags: Android, Smartphone