Home /News /technology /

மின் கட்டணம் செலுத்த சொல்லி வாட்ஸ்அப் மெசேஜ் வந்தால் உஷார் - புது மோசடி குறித்து எச்சரிக்கை.! 

மின் கட்டணம் செலுத்த சொல்லி வாட்ஸ்அப் மெசேஜ் வந்தால் உஷார் - புது மோசடி குறித்து எச்சரிக்கை.! 

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

WhatsApp EB Bill Scam Alert | பல்வேறு நகரங்களில் உள்ள மின்சார வாரியம் மக்கள் தங்கள் மின் கட்டணத்தை சரியான நேரத்தில் செலுத்த நினைவூட்டும் செய்தியை வாட்ஸ்அப் மற்றும் குறுச்செய்திகள் மூலமாக அனுப்பிவருகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
வாட்ஸ்அப் மூலமாக நடைபெறும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஹேக்கர்கள் மக்களை ஏமாற்ற தினந்தோறும் புதுப்புது யுக்தியைக் கண்டுபிடித்துள்ளனர், இந்த முறை வாட்ஸ்அப் யூஸர்களிடம் மின் கட்டணத்தை மையமாக வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

பொதுவாக, பல்வேறு நகரங்களில் உள்ள மின்சார வாரியம் மக்கள் தங்கள் மின் கட்டணத்தை சரியான நேரத்தில் செலுத்த நினைவூட்டும் செய்தியை வாட்ஸ்அப் மற்றும் குறுச்செய்திகள் மூலமாக அனுப்பிவருகின்றன. இத்தகைய செய்திகள் முன்னதாகவே மக்களுக்கு அனுப்பப்படும் நிலையில், மின்கட்டணம் செலுத்த கடைசி தேதிக்கு மிக நெருக்கமாக குறுச்செய்திகள் அனுப்பப்படுவது தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. அப்படி வாட்ஸ்அப்பில் வந்த ஒரு எச்சரிக்கை மெசெஜ், தொழில்நுட்பம் பற்றி நன்றாக அறிந்த ஒருநபரையே அலறியடித்துக் கொண்டு போலி கணக்கிற்கு பணம் செலுத்த வைத்துள்ளது.

வாட்ஸ்அப் மூலம் நூதன முறையில் நடந்து வரும் இந்த மோசடியானது, தற்போது யூஸர் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்த தகவல்கள் மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் மக்களுக்கு மின் கட்டணத்தை செலுத்தும் படி வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் அனுப்பப்படும் மெசேஜில் மின்சார அலுவலகத்திற்கு தொடர்பில்லாத மோசடி நபர்களின் தொடர்பு எண்கள் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளும் மக்களிடம் உடனடியாக பணம் செலுத்தாவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டும் என அச்சுறுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.



கடந்த சில நாட்களாக குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் ஒடிசா உள்ளிட்ட நகரங்களில் மின் கட்டணம் தொடர்பான மோசடிகளில் ஹேக்கர்கள் ஈடுபடுவதாக புகார்கள் பதிவாகியுள்ளது. மோசடி கும்பல் வாட்ஸ்அப் மூலமாக “அன்புள்ள நுகர்வோரே உங்கள் மின் இணைப்பு விரைவில் துண்டிக்கப்படும். இன்று இரவு 9.30 மணிக்கு மின்வாரிய அலுவலகத்திற்கு உங்களுடைய முந்தைய மாத நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்றால், உடனடியாக எங்கள் மின்வாரிய அதிகாரி 8260303942 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்” என்ற மெசெஜை மக்களுக்கு அனுப்பி வருகின்றனர். மேலும் மக்களை எளிதாக நம்ப வைக்கும் வகையில் மின்வாரியத்தின் பெயர்களையும் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

Also Read : பாதுகாப்பை பலப்படுத்திய வாட்ஸ்அப்... இனி இதை செய்ய முடியாது.!

நிலுவைத் தொகையைச் செலுத்தாவிட்டால் திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்படும் என வரும் வாட்ஸ்அப் மெசெஜ்களை நம்ப வேண்டாம் என மக்களை எச்சரித்து மகாராஷ்டிரா சைபர் க்ரைம் போலீசார், எளிதில் ஏமாற்றக்கூடிய, ஆன்லைன் பற்றி பெரிதாக அறியாத நபர்களை குறிவைத்தே இதுபோன்ற மோசடிகளில் ஹேக்கர்கள் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர். மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக வாட்ஸ்அப்பில் மெசேஜ் கிடைக்கப் பெற்றால், அதில் கொடுத்துள்ள எண்ணை தொடர்பு கொள்ளாமல் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நம்பகத்தன்மையை சோதிக்கும் படி சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Published by:Selvi M
First published:

Tags: Technology, WhatsApp

அடுத்த செய்தி