ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

கூகுள் விளம்பரங்களை ஜாக்கிரதையாக கையாளவும்; உங்களை அறியாமல் உங்கள் கணினிகள் ஹேக் செய்யப்படும் என எச்சரிக்கை!

கூகுள் விளம்பரங்களை ஜாக்கிரதையாக கையாளவும்; உங்களை அறியாமல் உங்கள் கணினிகள் ஹேக் செய்யப்படும் என எச்சரிக்கை!

கூகுள்

கூகுள்

Google | நாம் கிளிக் செய்தாலே நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் அனைத்து தகவல்களும் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  உலகெங்கும் இணையப் பயன்பாடு என்பது மக்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப காலங்களாக என்ன சமைக்கலாம்? எங்கெல்லாம் விடுமுறை நாள்களுக்கு டூர் செல்லலாம்? என்ன தலைப்புச்செய்திகள் இன்று? என மக்களிடம் அன்றாட விஷயங்களை கிராமம் முதல் நகரம் வரை உள்ள இணைய வாசிகள் கூகுளின் வாயிலாக தேடுகின்றனர். இவ்வாறு இணையத்தில் வெளியாகும் விளம்பரங்களை நம்மை அறியாமலே கிளிக் செய்வதன் மூலம் அதிக வருவாய் கூகுள் நிறுவனத்திற்கு கிடைக்கிறது.

  இவ்வாறு இணையவாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதையடுத்து தற்போது அதிக கூகுள் விளம்பரங்கள் அதிகளவில் டாப் அப் செய்யப்படுகிறது. இவற்றைக் கிளிக் செய்வதன் மூலம் கூகுள் விற்கும் ஷாப்பிங் இணையதளம் அல்லது தயாரிப்பு பக்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும். ஆனால் இன்றைக்கு கூகுளில் வரக்கூடிய பல விளம்பரங்கள் பயனர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைகிறதாம்.

  தற்போது ஹேக்கர்கள் போலி இணையதளம் மூலமாக கூகுள் விளம்பரங்கள் என்று மால்வேர் மற்றும் ransomware யைப் பயன்படுத்தி பயனர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக மைக்ரோசாப்டின் பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது ராயல் (DEV-0569) எனப்படும் ransomware என்பது Microsoft Teams, Zoom, TeamViewer போன்ற பயன்பாடுகளுக்கான நிறுவிகள் மற்றும் புதுப்பிப்புகளாக வரக்கூடும். இவற்றை நாம் கிளிக் செய்தாலே நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் அனைத்து தகவல்களும் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  மேலும் இந்நிறுவனம் தனது மைக்ரோசாப்ட் 365 தொகுப்பை இது போன்ற அச்சுறுத்தல்களைப் பற்றி பயனர்களை எச்சரிக்கும் திறன் கொண்டதாகவும், அவற்றை கணினியில் இருந்து அகற்றவும் கூட செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அச்சுறுத்தும் ஹேக்கர்ஸ் என்றால் அது மால்வேர் தான். சமீப காலத்தில் டிஜிட்டல் உலகம் பெரிதும் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாகவும் உள்ளது. இ- மெயில் மூலமாகப் பரவக்கூடியதாக இந்த மால்வேர் வடிவமைகக்கப்பட்டுள்ளது.

  ஆன்லைன் சூதாட்ட கேமிற்கு பெரும்பலான மக்கள் எதிர்ப்பு - கருத்துகணிப்பில் வெளியான தகவல்

  இணையத்தில் நாம் பிரவுஸ் செய்யும் போது நபருக்கு invoice, order போன்ற சப்ஜெக்ட் கொண்ட மெயில் உங்களுக்கு வரும். இந்த இணைப்பை டவுன்லோடு செய்து திறக்கும் வரை உங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. அதே சமயம் அந்த இணைப்பில் லோடிங், ப்ளீஸ் வெயிட் என் ஆப்ஷன் வந்தாலே வைரஸ் உங்களது கணினியில் தானாக தொடங்கிவிடும்.

  இதோடு ஹேக்கர்கள் உங்களது system ன் உரிமைகளைப் பெற்றுவிடும். இது கணினி மற்றும் அதில் சேமிக்கப்பட்டுள்ள எந்த தரவையும் முழுமையாக அணுக உதவுகிறது. இருந்தப் போதும் ஏற்கனவே ஏற்பட்ட சிக்கலைக் கருத்தில் கொண்டு விண்டோஸ் சாதனங்களில் ransomware ஐ எதிர்த்துப் போராட உதவும் வகையில் அதன் மைக்ரோசாஃப்ட் டிஃபென்டர் பாதுகாப்புத் தீர்வைப் புதுப்பித்துள்ளது. எனவே இதுபோன்ற கூகுள் விளம்பரங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், உங்களது சாதனங்களைப் பாதுகாப்பாக வைத்து கொள்ளும் வகையில், ‘network protection’ விருப்பத்தை நீங்கள் இயக்கிக்கொள்ளலாம்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Google