• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ரூ.5,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த பிராண்ட் வயர்லெஸ் இயர்பட்ஸ்கள்

ரூ.5,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த பிராண்ட் வயர்லெஸ் இயர்பட்ஸ்கள்

வயர்லெஸ் இயர்பட்ஸ்கள்

வயர்லெஸ் இயர்பட்ஸ்கள்

5,000 ரூபாய்க்கு கீழ் நீங்கள் வாங்கக்கூடிய சில சிறந்த TWS இயர்போன்களைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

  • Share this:
இன்றைய தலைமுறையினர் மிகவும் விரும்பி வாங்கும் ஆடியோ தயாரிப்புகளில் வயர்லெஸ் இயர்போன்கள் மிகவும் விரும்பப்படும் வகைகளில் ஒன்றாக மாறியுள்ளது.

இவை பயன்படுத்துவதற்கு மிகவும் வசதியானதாக இருக்கும் என்பதால் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த TWS இயர்போன்ஸ் முதலில் மிகவும் விலையுயர்ந்த ஆடியோ ஆக்சிஸரிசாக வெளியானது. ஆனால் இப்போது நிலை அவ்வாறு இல்லை.

பல ஆண்டுகளாக, இந்த வயர்லெஸ் இயர்போன்கள் பல வரவு செலவுத் திட்டங்கள் மற்றும் விலை வரம்புகளுக்குள் இணங்கியதோடு கூடுதல் விருப்பங்களை வழங்கும் பிராண்டுகள் மூலம் பட்ஜெட் விலையில் அணுகக்கூடியதாகிவிட்டன.

ALSO READ |  ஆடி இ-டிரான் கார் ஜூலை 22ல் அறிமுகம் - பிரமிக்க வைக்கும் அம்சங்கள்!

அதிலும் ரூ. 5,000 விலை கொண்ட பட்ஜெட்டுக்குள் ஒரு நல்ல இயர்போன்களைத் தேடுவோருக்கு ஜாப்ராவின் எலைட் ஆக்டிவ் 65t, ஒன்பிளஸ் பட்ஸ் இசட், ரியல்மி பட்ஸ் ஏர் 2 மற்றும் பல விருப்பங்கள் உள்ளன. 5,000 ரூபாய்க்கு கீழ் நீங்கள் வாங்கக்கூடிய சில சிறந்த TWS இயர்போன்களைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

1. ஜாப்ரா எலைட் ஆக்டிவ் 65 டி (Jabra Elite Active 65t):டேனிஷ் ஹெட்போன் தயாரிப்பாளரிடமிருந்து வெளியான முதல் TWS இயர்போன்களில் ஜாப்ரா எலைட் ஆக்டிவ் 65 டி-யும் ஒன்று. ஆரம்பத்தில் ஆப்பிள் ஏர்பாட்களின் போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்ட ஜாப்ரா எலைட் ஆக்டிவ் 65 டி இப்போது அமேசானில் ரூ.4,999 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த இயர்போன்கள் IP56 நீர் எதிர்ப்பைக் கொண்டுள்ளன. இது சார்ஜிங் கேஸ் உட்பட 15 மணிநேர ஒருங்கிணைந்த பேட்டரி ஆயுளை கொண்டுள்ளன. மேலும் இந்த இயர்போனில் 6 x 5.1 மிமீ ஸ்பீக்கர் மற்றும் 4 MEMS மைக்ரோஃபோன்கள் 100Hz முதல் 10KHz வரை அதிர்வெண் வரம்பைக் கொண்டுள்ளன.

2. ஓப்போ என்கோ டபிள்யூ 51 (Oppo Enco W51):ஓப்போ என்கோ டபிள்யூ 51 என்பது ஆக்ட்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் செய்யப்பட்ட மற்றொரு மலிவு விலை TWS இயர்போன்கள் ஆகும். இந்த ஓப்போ என்கோ டபிள்யூ 31-ன் விலை 3,990 ரூபாயாக உள்ளது. மேலும் இவற்றை இரண்டு வண்ண விருப்பங்களில் வாங்கலாம். அதில் ஒன்று ஃப்ளோரல் ஒயிட் மற்றும் ஸ்டாரி ப்ளூ ஆகும். TWS இயர்போன்கள் ஓப்போவின் அம்சங்களை பொறுத்தவரை, நாய்ஸ் ரிடக்ஷன் தொழில்நுட்பம், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 24 மணிநேர ஒருங்கிணைந்த பேட்டரி ஆயுள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. ஓப்போ என்கோ W51 நீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாப்பதில் IP54 என மதிப்பிடப்பட்டுள்ளது.

3. ரியல்மி பட்ஸ் ஏர் 2 (Realme Buds Air 2) :ரியல்மி பட்ஸ் ஏர் 2 இந்தியாவில் ரூ.3,299 என்ற விலையில் விற்பனையாகிறது. இது ஆக்ட்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சத்துடன் சந்தையில் மலிவான விலையில் விற்பனை செய்யப்படும் பிராண்டுகளில் ஒன்றாகும். இந்த TWS இயர்பட்ஸை ரியல்மியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து இரண்டு வண்ண விருப்பங்களில் வாங்கலாம். ரியல்மி பட்ஸ் ஏர் 2, 10 மிமீ ஹை-ஃபை பாஸ் பூஸ்ட் டிரைவர், சார்ஜிங் கேஸ் உட்பட 25 மணிநேர ஒருங்கிணைந்த பேட்டரி ஆயுள் மற்றும் 88 எம்எஸ் சூப்பர் லோ லேட்டன்சி பயன்முறையுடன் வருகிறது. ரியல்மி பட்ஸ் ஏர் 2 கால்களுக்கான இரட்டை மைக் சத்தம் ரத்துசெய்தலுடனும் வருகிறது.

ALSO READ |  மஹிந்திரா தார் எஸ்யூவி-யின் விலை ரூ.92,000 உயர்வு: 3ம் முறையாக விலையை உயர்த்திய நிறுவனம்!

4. ஒன்பிளஸ் பட்ஸ் (OnePlus Buds):இந்தியாவில் இதன் விலை ரூ.4,990 ஆகும். ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிடும் TWS இயர்போன்களின் முதல் தொகுப்பு இதுவாகும். ஒன்பிளஸ் பட்ஸ் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோரில் வாங்கலாம். சார்ஜிங் கேஸ் உட்பட 30 மணிநேர ஒருங்கிணைந்த பேட்டரி ஆயுளுடன் இந்த இயர்பட்ஸ் வருகின்றன. ஒன்பிளஸ் பட்ஸ் மூன்று மைக்ரோஃபோன்களுடன் பொருத்தப்பட்டிருக்கும் மற்றும் 1.34 செ.மீ டைனமிக் டிரைவருடன் வருகிறது. மேலும் இந்த ஒன்பிளஸ் பட்ஸ் டால்பி அட்மோஸுடன் 3D ஸ்டீரியோவையும் ஆதரிக்கிறது.

5. ஸ்கல்கேண்டி சேஷ் ஈவோ (Skullcandy Sesh Evo):ஸ்கல்கேண்டி சேஷ் ஈவோ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் ரூ.4,299 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இது IP55 தூசி மற்றும் நீர் மின்தடை அமசத்துடன் வருகிறது. இயர்போன்கள் 24 மணிநேர ஒருங்கிணைந்த பேட்டரி ஆயுளுடன் வந்து 6 மிமீ டிரைவருடன் வருகின்றன. ஸ்கல்கேண்டி சேஷ் ஈவோ TWS இயர்போன்கள் இணைப்பிற்காக புளூடூத் வி 5.0 ஐப் பயன்படுத்துகின்றன மற்றும் மொத்தம் 63.5 கிராம் எடையைக் கொண்டுள்ளன.

ALSO READ |  இந்தியாவில் மாஸாக களமிறங்கியுள்ள BMW ஆர் 1250 ஜிஎஸ் மற்றும் ஆர் 1250 ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: