Home /News /technology /

ரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட் வாட்ச்கள்

ரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட் வாட்ச்கள்

ஸ்மார்ட் வாட்ச்

ஸ்மார்ட் வாட்ச்

உங்கள் பட்ஜெட் ரூ.5,000-ஆக இருந்தாலும் கூட இந்த விலைக்குள் சிறந்த சில ஸ்மார்ட் வாட்ச்கள் மார்க்கெட்டில் விற்கப்பட்டு வருகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஸ்மார்ட் வாட்சுகள் பணக்காரர்கள் மட்டுமே வாங்க கூடிய விலையுயர்ந்த ஒரு பொருளாக இருந்தன. ஏனென்றால் மிக குறைவான பிராண்டுகள் குறிப்பாக பிரபல முன்னணி பிராண்டுகள் மட்டுமே ஸ்மார்ட் வாட்சுகளை விற்றன. ஆப்பிள், ஃபிட்பிட், கார்மின் மற்றும் சாம்சங் உள்ளிட்ட சில பிராண்டுகள் மட்டுமே ஸ்மார்ட் வாட்ச்களை விற்க கூடிய நிறுவனங்களாக இருந்தன. வழக்கம் போலவே இவற்றின் விலையில் ஏதும் பெரிய அளவில் சலுகைகள் இல்லை என்றாலும் நீங்கள் ஒரு ஸ்மார்ட் வாட்சை வாங்க விரும்பினால் அதற்காக ரூ.20,000 அல்லது ரூ.30,000 செலவழிக்க தேவையில்லை.

உங்கள் பட்ஜெட் ரூ.5,000-ஆக இருந்தாலும் கூட இந்த விலைக்குள் சிறந்த சில ஸ்மார்ட் வாட்ச்கள் மார்க்கெட்டில் விற்கப்பட்டு வருகின்றன. 5,000 ரூபாய்க்கு கீழ் உள்ள ஸ்மார்ட் வாட்சுகளும் விலை உயர்ந்த ஸ்மார்ட் வாட்சுகளை போலவே வாடிக்கையாளருக்கு பல்வேறு சிறப்பம்சங்களை வழங்குகின்றன. மலிவான விலையில் ஸ்மார்ட் போன்களை விற்று வரும் ரியல்மி, சியோமி உள்ளிட்ட நிறுவனங்களும் ரூ.10,000-க்கு கீழ் நல்ல சிறப்பம்சம் வாய்ந்த ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. ரூ.5,000 கீழ் கிடைக்கும் சில சிறந்த ஸ்மார்ட் வாட்சுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாய்ஸ் கலர்ஃபிட் அல்ட்ரா (Noise ColorFit Ultra):

ரூ.4,999 விலையில் விற்கப்படும் இந்த ஸ்மார்ட் வாட்ச் ஒரு பிரம்மாண்ட திரையுடன் வருகிறது, இது 1.75 இன்ச் 2.5D கர்வுடு கிளாஸ் புரொடெக்ஷன் அம்சத்துடன் வந்துள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆப்பிள் வாட்சைப் போன்ற டிசைனை கொண்டுள்ளது. மேலும் இது மென்மையான சிலிக்கான் பட்டைகளுடன் (soft silicon straps) இணைக்கப்பட்ட அலுமினிய அலாய் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வாட்ச் பெரிய மணிக்கட்டு கொண்டவர்களுக்கே சரியாக பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஸ்மார்ட் வாட்ச் ஹார்ட் ரேட் சென்சார், ரத்த ஆக்ஸிஜன் அளவு மற்றும் பல அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இது காய் கழுவுதல் மற்றும் தண்ணீர் குடித்தலை நினைவூட்டும் ரிமைண்டர்களையும் கொண்டுள்ளது. ஸ்டாக் மார்க்கெட் நிலவங்களையும் இந்த வாட்சின் மூலம் நீங்கள் பார்த்து கொள்ளலாம்.

போட் எக்ஸ்டெண்ட் ஸ்மார்ட்வாட்ச் (Boat Xtend smartwatch):

மலிவான விலையில் (ரூ.2,999) நேர்த்தியான மற்றும் கவர்ச்சிகரமான ஸ்மார்ட் வாட்ச் வேண்டுமென்றால் இந்த ஸ்மார்ட் வாட்ச் வாங்குவதை பற்றி நீங்கள் யோசிக்கலாம். இந்த ஸ்மார்ட் வாட்ச் அனைத்து அளவு மணிக்கட்டுகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு நல்ல ஸ்கிரீன் சைஸுடன் வருகிறது. இதில் ஹார்ட் ரேட் சென்சார், ரத்த ஆக்ஸிஜன் மானிட்டர் மற்றும் பல சுகாதார அம்சங்களை உள்ளடக்கியது. இதன் பேட்டரி ஒரு வாரத்திற்கு மேல் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also read... தூங்கும்போது எத்தனை முறை சுவாசிக்கிறீங்கனு தெரிஞ்சுக்கணுமா? இதோ ஆப்பிள் வாட்ச் ஸ்பெஷல்!

ரியல்மி வாட்ச் 2 ப்ரோ (Realme Watch 2 Pro):

ரியல்மி வாட்ச் 2 ப்ரோவும் ஆப்பிள் வாட்சைப் போன்ற டிசைனை கொண்டுள்ளது என்றாலும் இது ஆப்பிள் வாட்சை விட சிறியதாக உள்ளது. இந்த வாட்ச் 320x385 பிக்சல் ரெசல்யூஷனுடன் 1.75 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்சின் வலது பக்கத்தில் மேனி மற்றும் பிற ஆப்ஷனைகளை அணுக பட்டன் ஒன்று கொடுக்கப்பட்டுளது. . ஒரு முறை சார்ஜ் செய்தால் கிட்டத்தட்ட 14 நாட்கள் நீடிக்கும் பெரிய பேட்டரியை கொண்டுள்ளது. பிறவற்றை போலவே இதுவும் ஹார்ட் ரேட் ட்ராக்கர் கொண்டுள்ளது. மேலும் மிக துல்லியமா ரத்த ஆக்ஸிஜன் லெவல் ட்ராக்கரும் இருக்கிறது. இதன் விலை ரூ.4,999.

ஃபயர் போல்ட் 360 (Fire Boltt 360) :

ஃபயர் போல்ட் 360 ஸ்மார்ட் வாட்சின் விலை ரூபாய் 3,999 ஆகும். ரவுண்ட் டயலுடன் வரும் ரூ.5000-க்கு கீழ் உள்ள ஒரு அழகிய ஸ்மார்ட்வாட்சாக இருக்கிறது. மெட்டல் பாடியுடன் வரும் இந்த வாட்சை ஒரு முறை சார்ஜ் செய்தால் இதன் பேட்டரி லைஃப் 1 வாரம் வரை நீடிக்கும். தவிர இது SpO2, ஹார்ட் ரேட் ட்ராக்கர் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய சென்சர்களுடன் வருகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Smart watch

அடுத்த செய்தி