தரமான பேட்டரியில் ரூ.20,000-க்கு குறைவான ஸ்மார்ட்போன்கள் - இதோ பெஸ்ட் லிஸ்ட்!

smartphones

5,000mAh பேட்டரி வசதியுடன், ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய தரமான ஸ்மார்ட்போன்களின் லிஸ்டை இங்கு பார்க்கலாம்.

  • Share this:
ஸ்மார்ட்போன்கள் அழைப்புகள் மேற்கொள்வதைக் காட்டலும் மல்டி டாஸ்க்கிங் ஃபர்மாமென்ஸூக்காக மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மல்டி டாஸ்கிங்கிற்கு பயன்படுத்தும்போது ஃபோன்களின் பேட்டரி மற்றும் லைஃப் மிகவும் முக்கியம். அந்த வகையில் 5,000mAh பேட்டரி வசதியுடன், ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய தரமான ஸ்மார்ட்போன்களின் லிஸ்டை இங்கு பார்க்கலாம்.

ரியல்மீ 8 5 ஜி (Realme 8 5G - ரூ .14,499):

15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான ஸ்மார்ட்போன்களைத் தேடுபவராக இருந்தால் ரியல்மீ 8 5ஜி-யைத் தேர்ந்தெடுக்கலாம். ஸ்கிரீன் 6.5 இன்ச் புல் ஹெச்.டி+ தரத்தில் 20;9 விகிதத்தில் இருக்கும். போனின் ரெப்ரெஸ் ரேட் 90 ஹெர்ட்ஸ் உள்ளது. மீடியாடெக் டைமென்சிட்டி 700 SoC -ஐக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்க முதன்மை கேமரா 48 மெகா பிக்சலில் இருக்கும். 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தில், 5,000mAh பேட்டரி கொடுக்கப்படுகிறது

ரெட்மி நோட் 10டி 5 ஜி (Redmi Note 10T 5G)

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி+ திரையையும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்துடன் கொண்டுள்ளது. மீடியாடெக் டைமென்சிட்டி 700 SoC மற்றும் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. இது 5,000 எம்.ஏ.எச் பேட்டரியைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பயோ மெட்டிரிக் ஸ்கேனர் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் வரை பேட்டரி தாங்கும் என நிறுவனம் கூறியுள்ளது.

Also Read: இந்த போன்களில் இனி வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாது – 2021 தான் கடைசி!

மோட்டோ ஜி 60 (Moto G60)

மோட்டோ ஜி60 தோராயமாக 17,999 ரூபாய் விலையில் கிடைக்கும். 6.8 அங்குல முழு எச்டி+ ஐ.பி.எஸ் டிஸ்ப்ளேவுடன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. ஹூட்டின் கீழ், தொலைபேசி ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732G SoC ஐ கொண்டுள்ளது. பின்புற முதன்மை கேமரா 108 மெகாபிக்சலில் இருக்கும். மோட்டோ ஜி 60, டர்போ பவர் 20 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 6,000 எம்.ஏ.எச் பேட்டரியுடன் வருகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 54 மணி நேரம் வரை உபயோகப்படுத்த முடியும் என மோட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.

போகோ எம் 3 ப்ரோ 5 ஜி (Poco M3 Pro 5G )

போகோ எம்3 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போன் 13,999 ரூபாய் விலையில் கிடைக்கும். ரியல்மி 8 5ஜி மற்றும் ரெட்மி நோட் 10 டி 5ஜி போன்றே, போகோ எம் 3 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போனும் 6.53 இன்ச் ஃபுல்-எச்டி+ டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. 6 ஜிபி ரேம் மற்றும் 48 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இணைந்த அதே டைமென்சிட்டி 700 SoC ஐ கொண்டுள்ளது. பேட்டரி 5,000mAh. வழக்கமான பயன்பாடு என்றால் 12 மணி நேரம் பேட்டரி தாங்கும்.

Also Read: மனைவியை பிரிந்தார் ஷிகர் தவான் – ஆயிஷா முகர்ஜியின் எமோஷனல் பதிவு!

சாம்சங் கேலக்ஸி (Samsung Galaxy M32 5G)

அதிகபட்சமாக 21 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன், 6.5 இன்ச் எச்டி+ டிஎஃப்டி இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. ஐசிஐசிஐ கிரெடிட் கார்ட் மூலம் வாங்குபவர்களுக்கு ரூ.2,000 வரை விலை குறைப்பு கிடைக்கும். 8 ஜிபி ரேம் மற்றும் 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கும். 19 மணி நேரம் வரை பேட்டரி நீடிக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: