இந்தியாவில் ரூ.30,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியல்!

கோப்புப் படம்

ஒன்பிளஸ் நோர்ட் 2 ஃபோனுக்கு அடுத்தபடியாக நீங்கள் கேமிங் சார்ந்த ஸ்மார்ட் ஃபோன் ஒன்றை வாங்க விரும்பினால் அதற்கான சிறந்த தேர்வாக இருக்கும் ஸ்மார்ட் ஃபோன் போக்கோ F3 ஜிடி ஆகும்.

 • Share this:
  ஸ்மார்ட் ஃபோன்கள் இல்லாமல் நம் வாழ்க்கை இல்லை என்ற நிலை இருக்கிறது. பொதுவாக ஸ்மார்ட் ஃபோன்களை மூன்று முக்கிய வகைகளாக பிரிக்கலாம். என்ட்ரி லெவல், மிட் ரேஞ்ச், ப்ரீமியம் ஸ்மார்ட் ஃபோன்கள் மார்க்கெட்டில் விற்பனைக்கு இருக்கின்றன. இதில் என்ட்ரி லெவல் ஃபோன்கள் குறைந்த விலை மற்றும் சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேரின் அடிப்படை செயல்பாட்டை வழங்குகின்றன. மறுபுறம் ப்ரீமியம் ஃபோன்கள் ஈடு இணையற்ற ஸ்மார்ட் ஃபோன் அனுபவத்தை வழங்குகின்றன. இதன் துவக்க விலையே ரூ.45,000-த்திற்கும் மேல் இருக்கும். மிட் ரேஞ்ச் ஃபோன்கள் மலிவு விலையில் ப்ரீமியம் அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதனிடையே ஆகஸ்ட் 2021-ல் இந்தியாவில் ரூ.30,000 விலைக்கும் குறைவாக கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

  ஒன்பிளஸ் நோர்ட் 2 (OnePlus Nord 2):

  இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 ஃபோனானது 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே ,1080x2400 பிக்செல்ஸ் ஸ்கிரீன் ரெசல்யூஷன் மற்றும் 20: 9 விகிதத்துடன் வருகிறது. மீடியாடெக் சிப்செட் கொண்ட முதல் ஒன்பிளஸ் டிவைஸ் இதுவாகும். இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 11.3 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட் ஃபோன் குறைந்தபட்சம் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி பேஸ் ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் வருகிறது. இதில் Warp சார்ஜ் 65 சப்போர்ட்டுடன் கூடிய 4500mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 9 சீரிஸை போலவே, நோர்ட் 2 ஸ்மார்ட் ஃபோனின் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் இருக்கிறது. ரூ.30,000 பட்ஜெட்டிற்குள் ஒரு சிறந்த தொகுப்பை கொண்டுள்ளதாக இருக்கிறது இந்த ஸ்மார்ட் ஃபோன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  போக்கோ F3 ஜிடி (Poco F3 GT):

  ஒன்பிளஸ் நோர்ட் 2 ஃபோனுக்கு அடுத்தபடியாக நீங்கள் கேமிங் சார்ந்த ஸ்மார்ட் ஃபோன் ஒன்றை வாங்க விரும்பினால் அதற்கான சிறந்த தேர்வாக இருக்கும் ஸ்மார்ட் ஃபோன் போக்கோ F3 ஜிடி ஆகும். இது கேமிங் சென்ட்ரிக் ஸ்லிப்ஸ்ட்ரீம் வடிவமைப்பை Maglev தூண்டுதல்களுடன்உருவாக்குகிறது. இது 1080x2400 பிக்சல் ரெசல்யூஷனுடன் 6.67 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்டது. போகோ F3 ஜிடி ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 1200 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது proprietary fast charging-ஐ சப்போர்ட் செய்கிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11-ல் இயங்கும் இது 5065 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. கேமராவை பொறுத்த வரையில், பின்புறத்தில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது. பின்புற கேமரா அமைப்பில் ஆட்டோஃபோகஸ் உள்ளது. செல்ஃபிக்காக முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

  ஒன்பிளஸ் நோர்ட் சிஇ (OnePlus Nord CE):

  ரூ. 22,999 ஆரம்ப விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் ஃபோன், 6.43-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஃபோன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி மொபைல் பிளாட்ஃபார்ம் மற்றும் 6 ஜிபி ரேம் கொண்டு இயக்கப்படுகிறது. மேலும் இது 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் ஆப்ஷன்களுடன் வடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. இது Warp Charge 30 டி பிளஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4500 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இது 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் கொண்டுள்ளது மற்றும் 5 ஜி கனெக்டிவிட்டியை சப்போர்ட் செய்கிறது.

  சியோமி மி11 லைட் (Xiaomi Mi 11 Lite):

  இந்த ஸ்மார்ட் ஃபோன் ரூ.30,000-த்திற்கும் கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட் ஃபோன்களுக்கு ஒரு புதிய என்ட்ரி ஆகும். ரூ.21,999 விலையில் துவங்குகிறது. மேலும் இது இந்த விலை பிரிவுக்கு அல்ட்ரா-லைட் மற்றும் அல்ட்ரா-ஸ்லீக் வடிவமைப்பை வாடிக்கையாளர்க்குக்கு கொண்டு வருகிறது. இந்த விலை பிரிவில் உள்ள பல ஸ்மார்ட் ஃபோன்கள் 5 ஜி சப்போர்ட்டை வழங்குகின்றன. ஆனால் இதில் 5ஜி கனெக்டிவிட்டிக்கான சப்போர்ட் இல்லை. 6.55 இன்ச் 90 ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ள இது, 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் கொண்ட ட்ரிபிள் கேமரா வரிசையை கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 732 ஜி ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 4250 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.

  Also read... ரூ.5,000 பட்ஜெட்டிற்குள் நல்ல ஸ்மார்ட் வாட்ச் வாங்க வேண்டுமா? விவரங்கள் இங்கே!

  ரியல்மி X7 மேக்ஸ் 5ஜி (Realme X7 Max 5G):

  இந்த ஸ்மார்ட் ஃபோன் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ரூ.30,000 க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. ரூ.26,999 என்ற விலையில் விற்கப்பட்டு வரும் ரியல்மி X7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட் ஃபோன், டி டைமென்சிட்டி 1200 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 120 ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 64 மெகாபிக்சல் ட்ரிபிள் கேமரா மற்றும் 50W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.
  Published by:Vinothini Aandisamy
  First published: