HOME»NEWS»TECHNOLOGY»best smartphones under rs 15000 in india february 2021 aru

ரூ.15,000க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் போன்கள்!

இந்தியாவின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் பெரும்பான்மையானவர்கள் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துபவர்களாக உள்ளனர்.

ரூ.15,000க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் போன்கள்!
ஸ்மார்ட் போன்கள்
  • Share this:

இந்தியாவின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் பெரும்பான்மையானவர்கள் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துபவர்களாக உள்ளனர். விலை உணர்திறன் கொண்ட சந்தையாக இருப்பதால், நுகர்வோர், அதிக செலவு செய்யாமல் சிறந்த அம்சங்களை ஸ்மார்ட்போனில் இருக்கும்படி விரும்புகிறார்கள். எனவே பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் சந்தை இந்தியாவில் மிகவும் முக்கியமானதாக பார்கப்படுகிறது.

இந்தியாவில் 2021 பிப்ரவரி மாத நிலவரப்படி ரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் போன்கள் எவை, அவற்றில் உள்ள கேமரா, பேட்டரி உள்ளிட்ட சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்து இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்.

Poco M3:



டிசைனுக்காக தொழில்நுட்ப விமர்சகர்களால் மிகவும் பாராட்டப்பட்ட Poco M3 ஸ்மார்ட் போனின் விலை ரூ.10,999 ஆக உள்ளது. 6 ஜிபி ரேம், Qualcomm Snapdragon 662 SoC பிராசசர், 6.5-inch Full HD+ display, 48MP triple-camera setup போன்றவை இதன் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகிறது.

Cool Blue, Poco Yellow, and Power Black என 3 அட்டகாசமான வண்ணங்களில் கிடைக்கிறது. 18W fast charger மூலமாக பேட்டரி 100% சார்ஜினை 2 மணி நேரங்களுக்குள் எட்டிவிடுகிறது. இதன் 6,000 mAh பேட்டரி நல்ல செயல்திறனை வழங்குகிறது.

Redmi Note 9

பட்ஜெட் போன்கள் பிரிவில் ரெட்மி மொபைல்கள் சிறந்தவையாக உள்ளன. இதன் அடிப்படை மாடலான 4GB + 64GB வேரியண்ட் ரூ.11,999 என்ற விலையில் கிடைக்கிறது. MediaTek Helio G85 SoC பிராசசர், 48 MP primary sensor, 8 MP ultrawide shooter, 2 MP depth sensor, 2 MP macro ரியர் கேமரா யூனிட், 13MP முன்புற கேமரா, 5,020 mAh with 22.5W fast charging support போன்றவை இதன் சிறப்பு அம்சங்களாக உள்ளன.

Moto G9 Power

Moto G9 Power போனின் விலை ரூ.11,999 ஆகும். மோட்டோவின் ஜி சீரிஸ் வரிசையில் வந்துள்ள இந்த போன் சற்று பெரியதாக உள்ளது. 4GB/64GB என்ற ஒரே வேரியண்டில் மட்டுமே இது கிடைக்கிறது. IP 52 ரேட்டிங் பெற்றுள்ளதால் தண்ணீரில் விழுந்தாலும் பெரிதாக பாதிப்புக்கு ஆளாகாது. 6.8-inch HD+ IPS டிஸ்பிளே, Snapdragon 662 SoC பிராசசர், 64 MP கேமரா, 16 MP செல்ஃபி கேமரா போன்றவை இதன் சிறப்பம்சங்களாகும்.

குறிப்பிடத்தக்க வகையிலான 6,000 mAh battery, 20W adapter உடன் கிடைக்கிறது. இதன் மூலம் 60 மணி நேர பேட்டரி பயன்பாடு கிடைக்கும் என மோட்டோ தெரிவித்துள்ளது.

Realme Narzo 20 Pro

ரூ.14,999 என்ற ஆரம்ப விலையில் Realme Narzo 20 Pro ஸ்மார்ட் போன் கிடைக்கிறது. 6.5-inch Full HD+ IPS LCD டிஸ்பிளே, MediaTek Helio G95 பிராசசர், 16MP front camera மற்றும் 48MP ரியர் கேமரா, 65W fast charger for the 4,500 mAh battery போன்றவை இதன் சிறப்பம்சங்களாக உள்ளன.

Realme 7

15,000 ரூபாய்க்குள் கிடைக்கும் மற்றொரு சிறப்பான ஸ்மார்ட் போன் தான் Realme 7. MediaTek Helio G95 processor. 48 MP + 16 எம்பி கேமரா செட்டப் உடம் கிடைக்கிறது. 5000 mAh பேட்டரியுடன், 30W Fast charging வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. 6.5-inch Full HD+ LCD போன்றவை இதன் சிறப்பம்சமாகும். ரூ.14,999 என்ற ஆரம்ப விலையில், 3 வேரியண்ட்களில் இந்த போன் கிடைக்கிறது.

Samsung Galaxy M21

ரூ.13,999 என்ற தொடக்க விலையில் Samsung Galaxy M21 போன் வெளிவந்துள்ளது. 6,000 mAh battery, 6.4-inch Full HD+ Infinity-U display, 15W fast charging support, Exynos 9611 SoC பிராசசர் போன்றவை இதன் சிறப்பம்சங்களாகும்.

Samsung Galaxy A12

ரூ.12,999 என்ற தொடக்க விலையில் Samsung Galaxy A12
போன் வெளிவந்துள்ளது. Mediatek Helio P35 processor, 5000mAh battery with 15W charging, 48 quad-camera setup போன்றவை இதன் சிறப்பம்சங்களாகும்.
Published by:Arun
First published: