• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • 10,000 ரூபாய்க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியல்

10,000 ரூபாய்க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியல்

ஸ்மார்ட் ஃபோன்

ஸ்மார்ட் ஃபோன்

ரியல்மி, மோட்டோரோலா, மைக்ரோமேக்ஸ், நோக்கியா உள்ளிட்ட நிறுவனங்களோடு சுவாரசியமாக சாம்சங் நிறுவனமும் மலிவு விலை ஸ்மார்ட் ஃபோன்களை விறபனைக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
விலையுயர்ந்த ஸ்மார்ட் ஃபோன்களின் விற்பனை ஒருபக்கம் நன்றாக போய் கொண்டிருந்தாலும், விலை குறைந்த மலிவு விலை பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன்கள் மக்களின் வரவேற்பை அதிகம் பெற்று வருகின்றன. ஏனென்றால் விலை மலிவான ஸ்மார்ட் ஃபோன்கள் கூட இப்போது ஹை ரெசல்யூஷன் ஸ்கிரீன்ஸ், நல்ல கேமராக்கள், ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார், 4ஜி கனெக்டிவிட்டிஉள்ளிட்ட பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வரும் சூழலில், நாட்டில் ரூ.10,000 கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட் ஃபோன்கள் என்பது சந்தகத்திற்கிடமின்றி மிகவும் பிரபலமான தேடல் வகைகளில் ஒன்றாக இருக்கிறது. மார்க்கெட்டில் ரியல்மி, மோட்டோரோலா, மைக்ரோமேக்ஸ், நோக்கியா உள்ளிட்ட நிறுவனங்களோடு சுவாரசியமாக சாம்சங் நிறுவனமும் மலிவு விலை ஸ்மார்ட் ஃபோன்களை விறபனைக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

10,000 ரூபாய்க்கு கீழ் உள்ள சிறந்த மொபைல்களும் நல்ல ஆப்டிக்ஸை வழங்குகின்றன. ரூ.10,000-த்திற்கு கீழ் உள்ள சில சிறந்த ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியலை காணலாம். நீங்கள் ஒரு என்டரி லெவல் பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன் வாங்க திட்டமிட்டால், நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய ஸ்மார்ட் ஃபோன்கள் இங்கே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



ரியல்மி நார்சோ 30A (Realme Narzo 30A):

தோராயமாக ரூ.8,999-க்கு விற்கப்படும் இந்த ஸ்மார்ட் ஃபோன் 6.5 இன்ச் எச்டி+ டிஸ்பிளே கொண்டுள்ளது. 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 85 சிப்செட் மூலம் இந்த ஸ்மார்ட் ஃபோன் இயங்குகிறது. இது டூயல் சிம்மை சப்போர்ட் செய்கிறது. மேலும் இந்த ஃபோனில் டூயல் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா அடக்கம். இந்த ஸ்மார்ட் ஃபோன் USB டைப்-சி போர்ட் வழியாக 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் வகையில் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.



மைக்ரோமேக்ஸ் IN 1 (Micromax IN 1):

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் தோராயமாக ரூ.9,999-க்கு விற்கப்படும் இந்த ஸ்மார்ட் ஃபோன், மேட் இன் இந்தியாவாகும். இது ஒரு க்க்ளியர் ஆண்ட்ராய்டு 10 அனுபவத்தை வழங்குகிறது மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 ப்ராசஸரை கொண்டு இயங்குகிறது. இந்த ஃபோனின் பின்புறத்தில் இருக்கும் 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மேலும் இரண்டு சென்சார்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.



சாம்சங் கேலக்ஸி F02s (Samsung Galaxy F02s):

இந்த ஸ்மார்ட் ஃபோனின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் தோராயமாக ரூ.9,499-க்கு விற்கப்படுகிறது. இது 6.5 இன்ச் ஹெச்டி + இன்ஃபினிட்டி- வி டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 SoC உடன் வருகிறது. மேலும் இதன் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது. முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. மேலும் இது நீண்ட நேர இயக்கத்திற்காக ஒரு பெரிய 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

Also read... 2 டிஸ்பிளே, அசத்தல் கேமரா பியூச்சர்ஸ் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி Z போல்டு 3 ஸ்மார்ட்போன்!



மோட்டோரோலா மோட்டோ G10 பவர் (Motorola Moto G10 Power):

இதன் தோராய விலை ரூ .8,799. இந்த மோட்டோ G10 பவர் ஸ்மார்ட் ஃபோன் 6.5 இன்ச் எச்டி+ (720 × 1,600 பிக்செல்ஸ்) மேக்ஸ் விஷன் டிஸ்பிளே, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 25 சிஓசி மற்றும் டூயல் ரியர் கேமரா செட்டப் இருக்கிறது. ரியர் கேமராவில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது. மேலும் இது 5,000mAh பேட்டரியுடன் விற்பனைக்கு வருகிறது.



நோக்கியா C20 பிளஸ் (Nokia C20 Plus):

நோக்கியா சி 20 பிளஸ் 4,950 எம்ஏஎச் பேட்டரியுடன் இரண்டு நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்கும் என்று நோக்கியா கூறுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் ஃபோன், 6.5 இன்ச் எச்டி+ ஸ்கிரீன் மற்றும் ஆக்டா கோர் யுனிசாக் எஸ்சி 9863 ஏ சோசி உடன் 3 ஜிபி ரேம் கொண்டு வருகிறது. 8 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் இதில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: