• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • செப்டம்பர் மாதத்தில் ரூ.20,000-க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் டிவிகள் விவரம்!

செப்டம்பர் மாதத்தில் ரூ.20,000-க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் டிவிகள் விவரம்!

ஸ்மார்ட் டிவி

ஸ்மார்ட் டிவி

எல்இடி பேனலுடன் வரும், சாம்சங்கின் இந்த எச்டி ரெடி டிவி 1336x768 ரெசல்யூசன் கொண்டது. இது அதிக டைனமிக் ரேஞ்ச்சுடன் பிக்சர் தரத்தை வழங்குகிறது.

  • Share this:
இந்த செப்டம்பர் மாதத்தில் 20 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள சிறந்த ஸ்மார்ட் டிவிகளை தேடிக் கொண்டுள்ளீர்களா? இதோ உங்களுக்காக, இன்டர்நெட் வசதியுடன் கூடிய சிறந்த ஸ்மார்ட் டிவிகளின் பட்டியல். இவையனைத்தும் ஸ்மார்ட் டிவி உற்பத்தியில் புகழ்பெற்ற எம்ஐ, சாம்சங், ஒனிடா நிறுவனங்களைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் ஸ்மார்ட் டிவி வாங்கும் திட்டத்தில் இருந்தால், சாம்சங், சோனி, எல்ஜி, எம்ஐ போன்ற பல முன்னணி நிறுவனங்களின் டிவிகளைத் தேர்ந்தெடுங்கள். இவற்றின் விலைகள் மிகவும் குறைவு, தவிர தரமும் நிறைவு. ஆனால் ஸ்மார்ட் டிவி வாங்கும் போது, நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம், அவைகள் 720 பிக்சல் கொண்டவையா? என பார்த்து வாங்க வேண்டும்.

இந்தியாவில் 20 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள சிறந்த ஸ்மார்ட் டிவிகளின் பட்டியல்.,

Mi 4A Pro 32-inch ஸ்மார்ட் எல்இடி டிவி :

சியோமியின் Mi 4A ப்ரோ 32 இன்ச் எச்டி ஸ்மார்ட் டிவி 1336x768 ரெசல்யூசன் கொண்டதாகும். மேலும் 20W டால்பி+ DTS-HD ஆடியோ, மூன்று HDMI போர்ட்கள் மற்றும் இரண்டு USB போர்ட்கள் கொண்ட இந்த டிவி, 60 ஹெர்ட்ஸ் ரெஃபிரஷ் ரேட்களையும் கொண்டது. வழக்கமான ஆண்ட்ராய்டு டிவிகளைப் போலவே உள்ள இந்த ஸ்மார்ட் டிவி, சியோமியின் தனியுரிம சாப்ட்வேர்களுடன் கூடுதலாக வருகிறது. இதனை யூஸர்கள் பயன்படுத்தி டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ என பலவற்றை டிவியிலேயே கண்டுக்களிக்கலாம். இதன் விலை ரூ.16,999 ஆகும்.

சாம்சங் 32 இன்ச் எல்இடி டிவி :

எல்இடி பேனலுடன் வரும், சாம்சங்கின் இந்த எச்டி ரெடி டிவி 1336x768 ரெசல்யூசன் கொண்டது. இது அதிக டைனமிக் ரேஞ்ச்சுடன் பிக்சர் தரத்தை வழங்குகிறது. இதில் யூஸர்கள் டால்பி டிஜிட்டல் பிளஸ் வசதியுடன் கூடிய 20W ஸ்பீக்கர்களையும் பெறுவார்கள். மேலும் அவர்கள் USB போர்ட்கள் அல்லது ஸ்கேன் செய்தும், இந்த ஸ்மார்ட் டிவியில் நிகழ்ச்சிகளைக் காணலாம். இதன் விலை ரூ. 18,290.

மைக்ரோமேக்ஸ் 32 இன்ச் எல்இடி டிவி :

மைக்ரோமேக்ஸ் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி, A+ தர LED பேனலைக் கொண்டு, 1336x768 என ரெசல்யூசனை வழங்குகிறது. இச்சாதனம் 22W ஸ்பீக்கர்களுடன், HDMI, USB மற்றும் டிவிக்குள் கட்டமைக்கப்பட்ட Chromecast வழியாகவும் பலவற்றை பார்க்க அனுமதிக்கிறது. தவிர யூசர்கள் தங்களின் ஸ்மார்ட்போன் அல்லது புளுடூத் வழியாகவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. இதன் விலை ரூ.17,999.

Also read... ரூ. 1000-க்குள் முன்னணி நிறுவனங்கள் வழங்கும் பிராட்பேண்ட் இன்டர்நெட் பிளான்கள்!

ஒனிடா 32 இன்ச் எல்இடி ஃபயர் டிவி :

ஒனிடாவின் இந்த ஸ்மார்ட் டிவி, ஃபயர் டிவி ஓஎஸ் மற்றும் அலெக்சாவின் வாய்ஸ் கண்ட்ரோல் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் யூடியூப், பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜீ 5 மற்றும் சோனி லைவ் போன்றவற்றையும் பயன்படுத்தி நிகழ்ச்சிகளைக் காணலாம். தவிர இந்த ஸ்மார்ட் டிவி 3 HDMI போர்ட்கள் மற்றும் 1 USB போர்ட், மற்றும் டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் DTS ஆடியோவுடன் 20W ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.18,999.

எல்ஜி 32 இன்ச் எல்இடி எச்டி ரெடி டிவி :

எல்ஜியின் ஸ்மார்ட் எல்இடி டிவி 1336x768 ரெசல்யூசன் மற்றும் 50 ஹெர்ட்ஸ் ரெஃபிரஷ் ரேட்களுடன் வருகிறது. மேலும் இது இரண்டு HDMI போர்ட்கள் வெளிப்புற சேமிப்பு, கேமிங் போன்ற பிற சாதனங்களையும் இணைக்க அனுமதிக்கிறது. தொடர்ந்து இது அதிக டைனமிக் ரேஞ்ச்சுகளைக் கொண்டுள்ளது. இது 10W அவுட்புட் டிடிஎஸ் விருச்சுவல், இரண்டு ஃபயரிங் ஸ்பீக்கர்கள் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது. இது வெப் ஓஎஸ்சை ஸ்மார்ட் டிவியில் இயக்குகிறது.கூடவே இது திரை பிரதிபலிப்பு, மல்டி டாஸ்கிங் மற்றும் மினி டிவி பிரவுசர் ஆகியவற்றையும் அனுமதிக்கிறது. இதன் விலை ரூ.17,999.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: