10 ஆயிரம் ரூபாய்க்குள் ஸ்மார்ட்போன் வாங்க ப்ளான் இருக்கா? ரெட்மியில் எது பெஸ்ட்..?

48 மெகாபிக்சல் உடனான ரியர் கேமிரா மற்றும் 13 மெகாபிக்சல் உடனான செல்ஃபி கேமிரா ரெட்மி நோட் 8-க்கு உள்ளது.

10 ஆயிரம் ரூபாய்க்குள் ஸ்மார்ட்போன் வாங்க ப்ளான் இருக்கா? ரெட்மியில் எது பெஸ்ட்..?
ரெட்மி
  • News18
  • Last Updated: October 18, 2019, 3:28 PM IST
  • Share this:
ஸ்மார்ட்போன் பிரியர்களின் முதல் சாய்ஸ் ஆக ஜியோமியின் ரெட்மி போன்கள் உள்ளன. ஆனால், ரெட்மி போன்களுக்குள் சிறந்தது எது என்ற குழப்பம் இருக்கலாம். 10 ரூபாய்க்குள் பட்ஜெட் வைத்திருப்போருக்கு ரெட்மி போன்களில் சிறந்தது எது?

ரெட்மியின் சமீபத்திய பட்ஜெட் ரக போன்கள் இந்திய சந்தையில் நல்ல விரவேற்பைப் பெற்று வருகிறது. ஜியோமியின் சமீபத்திய வரவுகளான ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 7S போன்களுள் உங்களுக்கு ஏற்ற போன் எது என்பதை இங்கு மதிப்பீடு செய்துகொள்ளுங்கள்.

ரெட்மி நோட் 8 வருகிற அக்டோபர் 21-ம் தேதி விற்பனைக்கு வருகிறது. இதனது விலை 9,999 ரூபாய். இதற்குப் போட்டியாக ரெட்மி நோட் 7S உள்ளது. 48 மெகாபிக்சல் கேமிரா திறன் உடன் மிகவும் குறைந்த விலையில் அறிமுகமாகி உள்ள முதல் ரெட்மி ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 7S.


விலை:

ரெட்மி நோட் 8, 4ஜிபி+64 ஜிபி மாடல் 9,999 ரூபாயும் 6ஜிப்பி + 128 ஜிபி மாடல் 12,999 ரூபாயும் விலை நிர்னயம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 7S 3ஜிபி+ 32 ஜிபி மாடல் 8,999 ரூபாயும் 4ஜிபி + 64 ஜிபி மாடல் 9,999 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.டிசைன் மற்றும் டிஸ்ப்ளே:

இரண்டு போன்களுமே 6.3 இன்ச் முழு ஹெச்டி + டிஸ்ப்ளே கொண்டது. ரெட்மி நோட் 8 நான்கு ரியர் கேமிராக்கள் கொண்டது. ரெட்மி நோட் 7S டூயல் கேமிரா கொண்டது. இரண்டு போன்களுக்கும் நாட்ச் டிஸ்ப்ளே சிறப்பம்சம்.

கேமிரா மற்றும் பெர்ஃபார்மன்ஸ்:

48 மெகாபிக்சல் உடனான ரியர் கேமிரா மற்றும் 13 மெகாபிக்சல் உடனான செல்ஃபி கேமிரா ரெட்மி நோட் 8-க்கு உள்ளது. 18W அதிவேக சார்ஜிங் திறன் கொண்ட 4,000mAh பேட்டரி சிறப்பம்சமாகும்.

ரெட்மி நோட் 7S 4,000mAh பேட்டரி, க்வால்காம் ஸ்நாப்ட்ராகன் 660 ப்ராசஸர், 256 ஜிபி ஸ்டோரேஜ் வரையிலான அம்சங்கள் சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது.

மேலும் பார்க்க: அசத்தல் அம்சங்களுடன் வெளியானது ரெட்மி நோட் 8, நோட் 8 ப்ரோ..!

ஏர்டெல், வோடஃபோன், பிஎஸ்என்எல் மீது ஜியோ புகார்!
First published: October 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading