முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ-யில் ரூ.500-க்குள் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள்!

ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ-யில் ரூ.500-க்குள் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள்!

Recharge plans

Recharge plans

Best Recharge Plans | ரூ.500-க்கு குறைவில் எண்ணெற்ற ஆஃபர்களுடன் ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனங்களின் சில ப்ரீபெய்ட் பிளான்களை நாம் இங்கே பார்க்கலாம்...

  • Last Updated :

ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ உள்ளிட்ட முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் பல்வேறு விலைகளில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களை வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு வழங்கி வருகின்றன. உங்கள் பட்ஜெட் ரூ.500-க்கு குறைவு என்றால் வரம்பற்ற பலன்களை வழங்கும் ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனங்களின் சில ப்ரீபெய்ட் பிளான்களை நாம் இங்கே பார்க்கலாம்.

ரூ.-500-க்குள் கிடைக்கும் ஜியோவின் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள்:

ரிலையன்ஸ் ஜியோவின் மிகவும் பிரபலமான பிளான்களில் ரூ.499 பிளான் ஒன்றாகும். இது ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா, ஒரு நாளைக்கு 2GB டேட்டா, அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த பிளான் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. மேலும் அனைத்து ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களுடனும் யூஸர்கள் JioTV மற்றும் JioCinema ஆப்ஸ்களுக்கான காம்ப்ளிமென்டரி அக்சஸை பெறுகிறார்கள்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை நீங்கள் விரும்பவில்லை என்றால், ரூ.299 ப்ரீபெய்ட் ஜியோ பேக்கை பரிசீலிக்கலாம். டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா தவிர மேற்கண்ட பிளானில் வழங்கப்படுவதை போலவே இதிலும் ஒரே மாதிரியான பலன்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இந்த பேக்கின் மூலம் ஒரு நாளைக்கு 2GB டேட்டா, அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை 28 நாட்களுக்குப் பெறுவீர்கள்.

நீங்கள் குறைந்த டேட்டாவுடன் நாட்களை ஓட்ட கூடியவர் மற்றும் அதிக வேலிடிட்டி நாட்களை பெற விரும்பினால் ரூ.479 ப்ரீபெய்ட் ஜியோ பிளானை வாங்கலாம். இதில் தினசரி 1.5GB டேட்டா, ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் , மற்றும் 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த பேக்கில் OTT நன்மைகள் இல்லை.

Also Read : Gpay, Paytm, PhonePe பயன்படுத்துகிறீர்களா.? உங்களை பண மோசடியிலிருந்து தடுக்க உதவும் டிப்ஸ்கள் இதோ!

ரூ.500-க்குள் கிடைக்கும் ஏர்டெல்-லின் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள்:

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை கொண்டுள்ளது. இதில் தினசரி 2.5GB டேட்டா, அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 3 மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா ஆகியவை அடங்கும். மேலும் இந்த பிளான் 3 மாத அப்போலோ மெம்பரிஷ்ப், ரூ.100 ஃபாஸ்டேக் கேஷ்பேக் மற்றும் பிற நன்மைகளை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.

தவிர ரூ.500-க்குள் கிடைக்கும் மற்றொரு பிளான் ரூ.479 ப்ரீபெய்ட் பேக் ஆகும். இதில் தினசரி 1.5GB டேட்டா, அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 SMS, ரூ.100 ஃபாஸ்டேக் கேஷ்பேக், 3 மாத அப்பல்லோ மெம்பர்ஷிப் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. இந்த பிளான் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.

Also Read : அன்லிமிடெட் டேட்டா, கால்ஸ் இலவசம் - ஜியோ அதிரடி அறிவிப்பு

ரூ.500-க்குள் கிடைக்கும் விஐ-ன் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள்:

கிட்டத்தட்ட ஜியோவை போலவே ப்ரீபெய்ட் பிளான்களை Vi வழங்குகிறது. Vi-ன் ரூ.499 ப்ரீபெய்ட் பிளானில் ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா, தினசரி அடிப்படையில் 2GB டேட்டா, எல்லா நெட்வொர்க்குக்கும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 SMS உள்ளிட்டவை அடங்கும். முக்கியமாக வாடிக்கையாளர்கள் 12:00AM முதல் 6:00AM வரை இலவச டேட்டாவை பெறுகிறார்கள். வீக் எண்ட் டேட்டா ரோல்-ஓவர் வசதியும் உள்ளது. அதாவது நீங்கள் பயன்படுத்தாத டேட்டாவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்தி கொள்ளும் அம்சம் இது.

ரூ.299 Vi ப்ரீபெய்ட் பேக்கில்ல் தினசரி 1.5GB டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் உட்பட மீதமுள்ள பலன்கள் அனைத்தும் மற்ற பிளானில் இருப்பதை போல ஒரே மாதிரியானவை. இது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

First published:

Tags: Airtel, Jio, Recharge Plan, Technology, Vodafone