Home /News /technology /

ரூ.5,000 விலைக்குள் மார்க்கெட்டில் கிடைக்கும் போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள்

ரூ.5,000 விலைக்குள் மார்க்கெட்டில் கிடைக்கும் போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள்

போர்ட்டபிள் ஸ்பீக்கர்

போர்ட்டபிள் ஸ்பீக்கர்

ரூ.5,000க்கு கீழ் உள்ள சிறந்த போர்ட்டபிள் ஸ்பீக்கர்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லும் வசதி மற்றும் சிறந்த தரமான ஒலியை போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் வழங்குகின்றன. பெரும்பாலான போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள் அல்லது ப்ளூடூத்-ஆக்டிவேட்டட் ஸ்பீக்கர்கள் உங்கள் பாக்கெட்டிலேயே வைத்து கொள்ளும் அளவிற்கு கையடக்கமாக இருக்கின்றன.

மேலும் சிறந்த ஒலி அனுபவத்தைப் பெற, டேப்லெட், ஃபோன் அல்லது லேப்டாப்பில் புதிய ஷோ அல்லது திரைப்படங்களை பார்க்கும் போது, பயணங்களின் போது சிறந்த ஒலி அனுபவத்தை பெற உதவுகிறது. இவற்றுள் சில அலுவலக வேலையின் போதும் கால்ஸ்களை எடுக்க இன்பில்ட் மைக்ரோஃபோனுடன் வருகிறது. ரூ.5,000க்கு கீழ் உள்ள சிறந்த போர்ட்டபிள் ஸ்பீக்கர்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

இன்ஃபினிட்டி (ஜேபிஎல்) க்ளப்ஸ் 750 (Infinity (JBL) Clubz 750):



இதன் விலை சுமார் ரூ.4,800 ஆக உள்ளது. JBL வழங்கும் Infinity Clubx 750 போர்ட்டபிள் ஸ்பீக்கரின் விலை ரிலையன்ஸ் டிஜிட்டலில் ரூ.4,790 ஆகும். இந்த போர்ட்டபிள் ஸ்பீக்கர் டூயல் ஈக்வலைஸர்ஸ் (dual equalisers) உடன் வருகிறது மற்றும் 20W அவுட்புட்டை வழங்குகிறது. மேலும் இந்த ஸ்பீக்கர் IPX7 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் 10 மணிநேர பேட்டரி பேக்கப்புடன் வருகிறது. இது கனெக்டிவிட்டிக்காக ப்ளூடூத் 5.0 உடன் வருகிறது.

ஜெப்-மியூசிக் பாம் (Zeb-Music Bomb)..



ஜீப்ரானிக்ஸ் வழங்கும் Zeb-Music Bomb போர்ட்டபிள் ஸ்பீக்கரானது UE Wonderboom போன்றே தோற்றமளிக்கிறது மற்றும் IPX5 வாட்டர் ப்ரூஃப் ரேட்டிங்கை கொண்டுள்ளது. இந்த ஸ்பீக்கர் ப்ளூடூத், USB, AUX போன்ற பல கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை வழங்குகிறது மற்றும் 2 கலர் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 10 மணி நேர ப்ளேபேக் டைமை வழங்க கூடிய இந்த ஸ்பீக்கர் ரூ.3,199 என்ற விலையில் கிடைக்கிறது.

சோனி எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி13 (Sony SRS-XB13):



சோனி நிறுவனத்தின் இந்த ஸ்பீக்கரின் விலை சுமார் ரூ.3,990. இதன் முக்கிய அம்சங்களில் ஒன்று தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP67 ரேட்டிங். எனவே இந்த ஸ்பீக்கரை இன்டோரில் மட்டுமின்றி அவுட்டோரிலும் தயக்கமின்றி பயன்படுத்தலாம். தவிர இது 20,000 ஹெர்ட்ஸ் வரை ஃப்ரீக்குவன்ஸி ரெஸ்பான்ஸ் ரேஞ்சையும், ஒரு முழு சார்ஜுக்கு 16 மணிநேர பேட்டரி பேக்அப்பையும் வழங்குகிறது. மேலும் கால்ஸ்களை எடுக்க இன்பில்ட் மைக்ரோஃபோன் உள்ளது.

ஆங்கர் சவுண்ட்கோர் ஸ்போர்ட் எக்ஸ்எல் (Anker SoundCore Sport XL):



இந்த பட்டியலில் அடுத்து இருக்கும் இந்த ஸ்பீக்கர் முரட்டுத்தனமான மற்றும் ஸ்டைலிஷான லுக்கை கொண்டது. 6W ஆடியோ அவுட்புட்டை தரும் இந்த ஸ்பீக்கரின் விலை சுமார் ரூ.4,729 ஆக உள்ளது. ஷாக் ரெசிஸ்டென்ட் கொண்டுள்ள இது ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 15 மணிநேரம் வரை இயங்கும். மேற்கண்ட சோனி ஸ்பீக்கரை போலவே இந்த ஸ்பீக்கரும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP67 ரேட்டிங்கை பெற்றுள்ளது.

போட் ஸ்டோன் 1400 (Boat Stone 1400):



ரூ.5,000 என்ற பட்ஜெட்டில் வாங்க கூடிய சிறந்த அவுட்புட்டை கொண்ட ஸ்பீக்கர் இது. ஏனென்றால் 30W சவுண்ட் அவுட்புட்டை தருகிறது. இதன் விலை சுமார் ரூ. 4,999. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 7 மணிநேரம் வரை ப்ளே ஆகும். இது Aux போர்ட் மற்றும் USB போர்ட் ஆகியவற்றுடன் கனெக்டிவிட்டிக்காக ப்ளூடூத் 4.2- ஐ பயன்படுத்துகிறது. IPX5 வாட்டர் ப்ரூஃப் ரேட்டிங்கை கொண்டுள்ளது.

யுஇ வொண்டர்பூம் (UE Wonderboom):



இந்த ஸ்பீக்கர் 20,000KHz ஃப்ரீக்வன்ஸி ரேஞ்சை 10 மணிநேர பேட்டரி பேக்கப்புடன் வழங்குகிறது. மைக்ரோஃபோன் இன்றி டூயல் ஸ்பீக்கர் செட்டிங்கை கொண்டுள்ளது. அவுட்டோர் சூழல்களுக்கு மிகவும் பொருத்தமான வகையில் முற்றிலும் வாட்டர் ப்ரூஃப்-வுடன் வரும் இந்த ஸ்பீக்கரின் விலை சுமார் ரூ.3,995 ஆகும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Sony, Sony music

அடுத்த செய்தி