முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / இந்தியாவில் கிடைக்க கூடிய சிறந்த மீடியா ஸ்ட்ரீமிங் சாதனங்களின் பட்டியல்!

இந்தியாவில் கிடைக்க கூடிய சிறந்த மீடியா ஸ்ட்ரீமிங் சாதனங்களின் பட்டியல்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

சாஃப்ட்வேர் மாற்றங்கள் மூலம் மேம்பட்ட ஆடியோ மற்றும் வீடியோ அனுபவத்தை பெற முடியும்.

  • Last Updated :

உங்கள் வீட்டிலிருக்கும் சாதாரண மற்றும் ஸ்மார்ட் டிவி இல்லாத டிவி-க்களை, ஸ்மார்ட் டிவி-களாக மாற்ற உதவும் மீடியா ஸ்ட்ரீமிங் டிவைஸ்கள் மிகவும் சிறந்த கேஜெட்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மொபைல்களை போல மார்க்கெட்டில் ரகரகமான ஏராளமான ஸ்மார்ட் டிவி-க்கள் களமிறக்கப்பட்டு கொண்டே இருகின்றன. எனினும் உங்களிடம் ஸ்மார்ட் டிவி இல்லை என்ற ஏக்கத்தை போக்குவதற்கான ஒரு சிறந்த ஆப்ஷனாக இருப்பவை தான் மீடியா ஸ்ட்ரீமிங் டிவைஸ்கள். இந்த கேஜெட்களை கொண்டு உங்கள் வீட்டிலிருக்கும் சாதாரண டிவி-யை கூட ஸ்மார்ட் டிவி-யாக மாற்றி என்ஜாய் செய்ய முடியும் என்றாலும் மார்க்கெட்டில் ஏராளமான சிறந்த ஸ்ட்ரீமிங் டிவைஸ்கள் விற்கப்பட்டு வருகின்றன.

இவற்றை வாங்கி பயன்படுத்துவதால் சாதாரண டிவி வைத்திருக்கும் யூஸர்கள் தங்களது டிவி-யிலேயே, ஸ்மார்ட் டிவியில் இருப்பது போன்றே நெட்ஃபிலிக்ஸ், யூடியூப் போன்ற பல என்டர்டெயின்மெண்ட் பிளாட்ஃபார்ம்களை மிக எளிதாக அணுக முடியும். மீடியா ஸ்ட்ரீமிங் டிவைஸுடன் இன்டர்நெட் கனெக்ஷனும் (வைஃபை) இருக்க வேண்டும். மீடியா ஸ்ட்ரீமிங் சாதனங்களை வீட்டிலிருக்கும் நார்மல் டிவியுடன் இணைத்து இலவச மற்றும் கட்டண ஸ்ட்ரீமிங் சர்வீஸிலிருந்து ஆன்லைன் கன்டன்ட்டிற்கான அக்ஸஸை பெறலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்ட்ரீமிங் டிவைஸ்கள் OTT சேவைகளை யூஸர்களுக்கு வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் சாஃப்ட்வேர் மாற்றங்கள் மூலம் மேம்பட்ட ஆடியோ மற்றும் வீடியோ அனுபவத்தை பெற முடியும். இந்தியாவில் அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் சியோமி ஆகியவற்றிலிருந்து ரூ.5,000-க்கும் குறைவான விலையில் கிடைக்க கூடிய ஸ்ட்ரீமிங் டிவைஸ்கள் உள்ளன. அதே போல் மிகவும் ஒருங்கிணைந்த அனுபவத்திற்கு ஆப்பிள் யூஸர்கள், ஆப்பிள் டிவியை பயன்படுத்தலாம். ஜூலை 2021-ல் இந்தியாவில் நீங்கள் வாங்க கூடிய சிறந்த மீடியா ஸ்ட்ரீமிங் டிவைஸ்கள் பட்டியலை கீழே பார்க்கலாம்.

அமேசான் ஃபயர் டிவி க்யூப் (Amazon Fire TV Cube):

நாட்டின் சிறந்த மீடியா ஸ்ட்ரீமிங் டிவைஸ்கள் பட்டியலில் அமேசான் ஃபயர் டிவி க்யூப் ((2nd Gen) முதலிடத்தில் உள்ளது. இதன் விலை ரூ.12,999. டிவி ரிமோட் இல்லாமல் வாய்ஸ் கமாண்ட்ஸ் மூலம் டிவியை ஆப்ரேட் செய்ய யூஸர்களை இது அனுமதிக்கிறது. இதன் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் ப்ளூடூத் v5.0, MIMO உடன் கூடிய டூயல்-பேன்ட் வைஃபை, ஹெச்டிஎம்ஐ, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் வொயர்டு இன்ஃப்ராரெட் சப்போர்ட் ஆகியவை அடக்கம்.

ஆப்பிள் டிவி 4 கே (Apple TV 4K):

நீங்கள் பல ஆப்பிள் டிவைஸ்களை பயன்படுத்துபவர் என்றால் ஆப்பிள் டிவி 4கே டிவைஸை வாங்கி பயன்படுத்தி பார்க்கலாம், இது ஏ 12 பயோனிக் சிப்செட்டை கொண்டது. இதன் விலை ரூ.18,900. இதை பயன்படுத்தும் யூஸர்கள் டோல்பி விஷன் மற்றும் டோல்பி அட்மோஸ் உடன் 4கே கன்டென்ட்டை ரசித்து அனுபவிக்க முடியும். 32ஜிபி மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுடன் இந்த டிவைஸ் வருகிறது. இடையூறு இல்லாத நெட் கனக்டிவிட்டிக்காக ஈத்தர்நெட் போர்ட் இதில் உள்ளது.

சியோமி மி டிவி பாக்ஸ் 4கே (Xiaomi Mi TV Box 4K):

இதன் விலை ரூ.3,699. இந்த டிவைஸ் டேபிள் மீது வைக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் இதனுடன் கொடுக்கப்படும் HDMI கேபிளை பயன்படுத்தி இந்த டிவைஸை உங்கள் டிவியுடன் கனெக்ட் செய்யலாம். இந்த டிவைஸ் சாதனம் குவாட் கோர் அம்லோஜிக் ப்ராசஸர் (quad-core Amlogic processor) மூலம் இயக்கப்படுகிறது. ஆப்களை பயன்படுத்த ஏதுவாக 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இதில் இருக்கிறது. ஆப்பிள் டிவி 4கே போன்று இது அல்ட்ரா-எச்டி (ultra-HD) ஸ்ட்ரீமிங்கை ஆதரிக்கிறது. இந்த டிவைஸ் நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்றவற்றை சப்போர்ட் செய்யும். ஸ்ட்ரீமிங் தளங்களில் இருந்து 4K மற்றும் HDR கன்டென்டை ப்ளே செய்யும் திறன் கொண்டது.

டாடா ஸ்கை பிஞ்ச்+ (Tata Sky Binge+):

உங்கள் டிடிஎச் கேபிள் இணைப்பை கட் செய்யாமலேயே இன்னும் சில OTT தளங்களின் சேவைகளை அனுபவிக்க விரும்பினால் அதற்கு டாடா ஸ்கை பிஞ்ச்+ டிவைஸ் பொருத்தமானதாக இருக்கும். இந்த டிவைஸின் விலை ரூ.2,999. இந்த Android செட்-டாப் பாக்ஸ் கன்டென்டை தடையின்றி ஸ்ட்ரீமிங் செய்யும் திறன் கொண்டது. அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் உட்பட. பலவற்றை 4K ரெசல்யூஷனில் ஸ்ட்ரீமிங் செய்து பார்க்க இந்த டிவைஸ் சப்போர்ட் செய்கிறது.

Also read... ஏர்டெல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளானில் மாற்றம் - இன்று முதல் அமல்!

ஃபிளிப்கார்ட் டர்போஸ்ட்ரீமின் மார்க் (MarQ):

top videos

    இந்த பட்டியலில் கடைசியாக இருப்பது ஃபிளிப்கார்ட் டர்போஸ்ட்ரீமின் MarQ டிவைஸ் இருக்கிறது. இதன் விலை ரூ.3,299. இந்த ஸ்ட்ரீமிங் டிவைஸை HDMI போர்ட் வழியே உங்கள் டிவியுடன் இணைக்க முடியும். மேலும் யூஸர்கள் HD ரெசல்யூஷனில் ஸ்ட்ரீமிங்கை அனுபவிக்க முடியும். தவிர ஹெட்ஃபோன்கள் அல்லது ஸ்பீக்கர்கள் போன்ற ஆடியோ சாதனங்களை நேரடியாக MarQ டர்போ ஸ்ட்ரீமுடன் இணைக்க யூஸர்கள் இதிலிருக்கும் ப்ளூடூத் 4.0-ஐ பயன்படுத்தலாம்.

    First published:

    Tags: Technology