• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ₹ 50,000-க்கும் குறைவான தரமான, சிறந்த லேப்டாப்கள்... உங்களுக்கான லிஸ்ட்...

₹ 50,000-க்கும் குறைவான தரமான, சிறந்த லேப்டாப்கள்... உங்களுக்கான லிஸ்ட்...

லேப்டாப்

லேப்டாப்

கடந்த ஓராண்டுக்கு மேலாக கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக, ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், எலக்ட்ரானிக் கேட்ஜட்கள் தேவையும் பயன்பாடும் அதிகரித்துள்ளன.

  • Share this:
இந்தியாவில் தற்போது ரூ. 50000 க்கு குறைவாக வாங்கக்கூடிய சிறந்த லேப்டாப்கள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு ஸ்பெசிஃபிகேஷன்ஸ் வழங்குகின்றன. ஒவ்வொன்றும் SSD ஸ்டோரேஜ், 11th ஜென் இன்டெல் கோர் i3 மற்றும் அதற்கும் மேற்பட்ட அட்வான்ஸ்டு பிராச்சர்கள், முழு HD காட்சிகள் மற்றும் பல அற்புதமான அம்சங்களை கொண்டுள்ளன.

கடந்த ஓராண்டுக்கு மேலாக கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக, ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், எலக்ட்ரானிக் கேட்ஜட்கள் தேவையும் பயன்பாடும் அதிகரித்துள்ளன. பள்ளிக்கூடமும் அலுவகமும் வீடே என்று ஆகி விட்டது. ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட்கள் என்பதைக் கடந்து, லேப்டாப்கள் தேவையும் அதிகரித்துள்ளன. எனவே, மடிக்கணினிகள் எனப்படும் லேப்டாப்களின் தேவை பள்ளி மாணவர்கள் முதல் அலுவலக ஊழியர்கள் வரை அதிகரித்து விட்டது. கல்வி, வேலைக்கான உபயோகம், ஆகியவற்றை அடுத்து, கேமிங், விளையாட்டு, திரைப்படங்கள் என்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் லேப்டாப்களின் தேவை அதிகரித்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னொரு காலத்தில், நல்ல தரத்தில், மலிவு மடிக்கணினிகள் வாங்குவது கனவாக இருந்தது. தொடர்ச்சியாக தொழில்நுட்பம் முன்னேறி வரும் நிலையில், ஸ்கைப் அல்லது கூகிள் மீட் போன்ற பயன்பாடுகளை இயக்குவதற்கும் இணையத்தில் பிற தினசரி பணிகளைச் செய்வதற்கும் நீங்கள் ஒரு சிறிய கணினியைத் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கான தகவலை நாங்கள் வழங்குகிறோம்.

லேட்டஸ்ட் ஜெனரேஷன் ப்ராசசர்ஸ், முழு HD காட்சிகள், முழு அளவு கீபோர்டுகள் மற்றும் வேகமான SSD ஸ்டோரேஜ் ஆகிய மேம்பட்ட அம்சங்களுடன், இந்தியாவில் சிறந்த பட்ஜெட் மடிக்கணினிகள் அனைத்தையும் வழங்குகின்றன. கொஞ்சம் குறைந்த விலையில், அதே நேரத்தில் நல்ல தரமான, சமீபத்திய அம்சங்களுடன் என்ன லேப்டாப்கள் இந்தியாவில் இருக்கின்றன என்பது உங்களின் தேடலாக இருந்தால், அதற்கான தேர்வுகளை உங்களுக்கு வழங்குகிறோம். இந்தியாவில், ரூ. 50000 க்கு குறைவாக, நல்ல தரத்தில் கிடைக்கும் லேப்டாப்கள் பட்டியல் இங்கே.

ASUS VivoBook அல்ட்ரா 15 (விலை தோராயமாக ரூ.47,800): இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது, ASUS விவோபுக் அல்ட்ரா 15 (2020). இது ஸ்லிம் பெசல்ஸ் (bezels) உடன் 15.6 அங்குல முழு HD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த லேப்டாப், இன்டெல் UHD கிராபிக்ஸ், 8 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி NVMe SSD ஸ்டோரேஜுடன், 11th ஜெனரல் இன்டெல் கோர் i3-1115G4 ப்ராசசரைக் கொண்டுள்ளது. மேலும், இது விண்டோஸ் 10 இல் இயங்குகிறது. நம்பர்-பேடைப் (num-pad) பயன்படுத்த விரும்பும் யூசர்கள், சிக்லெட்-ஸ்டைல் ​​பேக்லிட் கீபோர்டு பயன்படுத்தலாம். இதை அமேசானில் வாங்கலாம்.

HP 15s (விலை தோராயமாக ரூ .45,490): பளபளக்கும் சில்வர் நிற ஃபினிஷ் மற்றும் 1.69 கிலோ எடையுள்ள HP 15s குறைந்த விலையில் மடிக்கணினிகள் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இதனை தேர்வு செய்யலாம். இது 15.6 அங்குல முழு HD டிஸ்ப்ளே, கண்களுக்கு கூசாத வண்ணம் ஆன்டி-கிளேர் பூச்சுடன், அடர்த்தியான சின் ஆகிய அம்சங்களுடன் வருகிறது. இந்த HP லேப்டாப், இன்டெல் UHD GPU உடன் 4.1 Gz வரை கிளாக் செய்யப்பட்ட 11th ஜெனரேஷன் இன்டெல் கோர் i3-1115G 4 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த பிராசசர் 8ஜிபி RAM மற்றும் 512 ஜிபி SSD ஸ்டாரேஜூடன் இணைக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்குக்கு ரீதியான பயன்பாட்டை விரும்புபவர்களுக்கு, இந்த லேட்டாப் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று HP நிறுவனம் கூறுகிறது. இந்த லேப்டாப் அமேசான் இந்தியாவில் கிடைக்கிறது.

MSI மாடர்ன் 14 (விலை தோராயமாக ரூ .49,990): அடுத்ததாக, நம் பட்டியலில் இருப்பது MSI மாடர்ன் 14. ஒரு நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்ட மடிக்கணினியின் எடை 3 கிலோ மட்டுமே. இது முழு-HD ரிசல்யூஷன், 14 அங்குல திரை மற்றும் ஒருங்கிணைந்த இன்டெல் UHD GPU உடன் 10th ஜென் கோர் i5-10210U பிராசசர் உடன் வருகிறது. இந்த மடிக்கணினியின் மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்களில் 8 ஜிபி RAM, 512 ஜிபி SSD ஸ்டோரேஜ், HD வெப்கேம் மற்றும் பேக்லைட் கீபோர்டு ஆகியவை உள்ளன. இந்த மடிக்கணினி ஃபிளிப்கார்ட்டில் சாம்பல் நிறங்களில் கிடைக்கிறது.லெனோவா திங்க்பேட் E15 (Lenovo Thinkpad) (விலை தோராயமாக ரூ .44,490): லெனோவா திங்க்பேட் E15 (2021) லேப்டாப், கிளாசிக் லெனோவா திங்க்பேட் வடிவமைப்பின், கூர்மையான விளிம்புகள் மற்றும் நோ-ஃப்ரில் அலுவலக தோற்றத்தையும் கொண்டுள்ளது. இது 15.6 அங்குல முழு HD டிஸ்ப்ளே மற்றும் 11th ஜெனரேஷன் இன்டெல் கோர் i3-1115G4 பிராச்சர் 4 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி SSD ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் பாதுகாப்பிற்காக ஒருங்கிணைந்த கைரேகை ஸ்கேனரையும் வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர். பிரைவசியை உறுதிப்படுத்த, வெப்கேமை ஒரு ஷட்டருடன் மூடலாம். லெனோவா திங்க்பேட் E15 (2021) தற்போது அமேசானில் கிடைக்கிறது.

Also read... ரியல்மி 8 5ஜி மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு போட்டியாக இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 10T!

Twitter: ட்விட்டர் கணக்கிற்கு நீல நிற வெரிஃபைட் பேட்ஜ் வாங்குவது எப்படி? யாரெல்லாம் தகுதியுடையவர்கள்? வழிமுறை என்ன?

சியோமி Mi நோட்புக் 14 (Xiaomi Mi) (விலை தோராயமாக ரூ. 44,999): நம்முடைய ரூ.50,000 க்கும் குறைவான இந்தியாவில் கிடைக்கும் லேப்டாப்கள் பட்டியலில் கடைசியாக இருப்பது, சியோமி சியோமி Mi நோட்புக் 14. இது 14 அங்குல முழு HD LED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதே நேரத்தில், கணிசமான சின் (Chin) கொண்டது. ஹூட்டின் கீழ், இது இன்டெல் UHD GPU, 8 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி இன்டர்னல் SSD ஸ்டாரேஜூடன், 10th ஜெனரேஷன் இன்டெல் கோர் i5-10210U CPU உடன் இணைந்துள்ளது. அலுவலக வேலையில் அதிக நேரம் மடிக்கணினியில் ஈடுபடுபவர்களுக்கு மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக லேப்டாப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த மடிக்கணினி மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று சியோமி கூறுகிறது. இந்த லேப்ட்டாப் தற்போது ஃபிளிப்கார்ட்டில் கிடைக்கிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: