• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • 2021-ஆம் ஆண்டில் சிறந்த இலவச VPN சேவைகள்.. முழு விவரம்..

2021-ஆம் ஆண்டில் சிறந்த இலவச VPN சேவைகள்.. முழு விவரம்..

VPN

VPN

சில VPN வழங்குநர்கள் மோசமான நோக்கங்களைக் கொண்டுள்ளனர், அதாவது உங்கள் தகவல்களை திருடி விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

  • Share this:
சிறந்த VPN ஹோஸ்டிங் திட்டங்கள் பெரும்பாலும் யூசர்களுக்கு செயல்திறனின் சரியான சமநிலையை அளிக்கின்றன. இலவச VPN-ஐ தேர்ந்தெடுப்பது எப்போதும் சிறந்த யோசனையல்ல. இலவச VPN எவ்வாறு செயல்படுகிறது, வழங்குநர்கள் எவ்வாறு இலவச சேவையை முதலில் வழங்க முடியும் என்பதை புரிந்துகொள்வது முக்கியம். இலவசமாக வாங்க நீங்கள் சேமிக்கும் பணத்திற்காக உங்கள் தனியுரிமை விஷயங்களை தியாகம் செய்ய வேண்டியதிருக்கும். ஏனெனில் சில VPN வழங்குநர்கள் மோசமான நோக்கங்களைக் கொண்டுள்ளனர், அதாவது உங்கள் தகவல்களை திருடி விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

இதனால் சிறந்த VPN சேவையை பெற கட்டணம் செலுத்தி வாங்குவது சிறந்ததே, அப்படி இலவசம் என்ற பெயரில் வழங்கினாலும் கூட அவற்றால் விளம்பரங்களை கொடுக்கலாம், அல்லது உங்களது தகவலை திருடலாம். இருப்பினும், இலவச திட்டங்களை வழங்கும் சில நம்பகமான VPN வழங்குநர்கள் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு சில வரம்புகள் உள்ளன. அவற்றில் 2021ம் ஆண்டில் சிறந்த இலவச வி.பி.என் சேவைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

புரோட்டான் VPN

புரோட்டான் VPN சிறந்த இலவச VPN பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இதில் லிமிட் இல்லை, என்பதால் தனித்து நிற்கிறது. நீங்கள் விரும்பும் வரை ஆன்லைனில் உலாவலாம், ஆனால் உங்கள் வேகம் குறையலாம். நீங்கள் இதில் ஒரு கணக்கை தொடங்க விரும்பினாலும் எளிதானது. நீங்கள் புரோட்டான் VPN சேவைக்கு பதிவுசெய்ததும், ஏழு நாள் சோதனையை இலவசமாகப் பெறுவீர்கள். நீங்கள் இலவச அல்லது கட்டண திட்டத்தில் இணைந்திருந்தாலும் Android பயன்பாட்டில் எந்த விளம்பரங்களும் இருக்காது. இதில் இலவச திட்டத்தில் இணைந்த பயனர்களால் ஒரே நேரத்தில் ஒரு சாதனத்தால் மட்டுமே பயன்படுத்த முடியும்.

விண்ட்ஸ்கிரைப்

சிறப்பம்சங்கள் :

சர்வர்ஸ் எண்ணிக்கை: 10+
டிவைஸ் சப்போர்ட்டர் : 1
டேட்டா லிமிட் - 10 ஜிபி
24/7 லைவ் சாட் : இல்லை
சிறந்த தனியுரிமை
இலவச டேட்டா லிமிட் - மாதத்திற்கு 10 ஜிபி வரை
R.O.B.E.R.T. மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

விண்ட்ஸ்கிரைப்பின் பிரீமியம் சேவை சிறந்தது, மற்றும் இலவசமாகவும் கிடைக்கிறது. நீங்கள் இந்த VPN சேவைக்கு பதிவுபெறும் போது, ​​எந்த தகவலையும் ஒப்படைக்காமல் ஒரு மாதத்திற்கு 2 ஜிபி பெறலாம் அல்லது ஒரு மின்னஞ்சல் முகவரியை வழங்கினால் 10 ஜிபி வரை டேட்டாவை பெறலாம். வட அமெரிக்கா, ஐரோப்பா, ஹாங்காங், துருக்கி உள்ளிட்ட பல சேவையகங்களிலிருந்து நீங்கள் சேவையை பெற்று கொள்ளலாம்.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், விண்ட்ஸ்கிரைப்பின் இலவச VPN-ல் நெட்ஃபிக்ஸ் சேவையை அணுக முடியும் என்று அறியப்பட்டுள்ளது. மேலும் கட்டண அல்லது இலவச பதிப்புகள் 24/7 ஆதரவைப் பெறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. ஒட்டுமொத்தமாக, விண்ட்ஸ்கிரைப் என்பது எளிய மற்றும் பயனுள்ள இலவச வி.பி.என் சேவையாகும்.

Hide.me

இந்த இலவச வி.பி.என்  மாதத்திற்கு 2 ஜிபி வழங்குகிறது. இது மிகச் சிறந்ததல்ல, என்றாலும் இப்போதெல்லாம் சாதாரண உலாவலுக்கு இது போதுமானது. இதனை தேர்வு செய்ய நெதர்லாந்து, கனடா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா என ஐந்து சேவையக இடங்கள் உள்ளன. Hide.me இது உங்கள் செயல்பாடுகளை பதிவு செய்யாது, இதனால் உங்கள் தகவல் விற்கப்படுமோ என்ற கவலை வேண்டாம். உங்கள் கிரெடிட் கார்டு தகவலைப் பகிர வேண்டிய அவசியம் இல்லை, இதனால் இது சிறந்த இலவச விபிஎன் சேவைகளில் ஒன்றாகும். உங்களுக்கு கூடுதல் டேட்டா தேவைப்பட்டால், சில கட்டண திட்டங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஹாட்ஸ்பாட் ஷீல்ட் VPN

ஹாட்ஸ்பாட் ஷீல்ட் VPN நீங்கள் பெறக்கூடிய சிறந்த இலவச VPN சேவைகளில் ஒன்றாகும். இது ஒரு நாளைக்கு 500MB தரவை அல்லது மாதத்திற்கு 15 ஜிபி தரவை வழங்குகிறது. அதிக பயன்பாட்டிற்கு இது போதாது, ஆனால் இது மற்ற இலவச VPN சேவைகளுடன் நீங்கள் பெறுவதை விட இதில் அதிகம். உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது கிரெடிட் கார்டு தகவலை வழங்குநருடன் பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை என்பதால், இதில் கணக்கை தொடங்குவது மிகவும் எளிதானது. Android பயன்பாட்டில் விளம்பரங்களும் உள்ளன, இது உங்களை எரிச்சலூட்ட வாய்ப்புகள் உள்ளது.

டன்னல்பியர் VPN

சர்வர்ஸ் எண்ணிக்கை: 1000
சர்வர் லொகேஷன் : 20+
டிவைஸ் சப்போர்ட்டர் : 5
டேட்டா லிமிட் - 500MB per month
24/7 லைவ் சாட் : ஆம்
சிறந்த தனியுரிமை கொண்டது
இலவச டேட்டா லிமிட் - மாதத்திற்கு 10 ஜிபி வரை

மெக்காஃபிக்குச் சொந்தமான டன்னல்பியர் இலவச VPN மாதத்திற்கு 500MB தரவைப் பெறுகிறது. இது பயன்படுத்த மிகவும் எளிதானது மற்றும் பதிவுபெற கிரெடிட் கார்டு தேவையில்லை. யு.எஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட 22 நாடுகளில் உள்ள சேவையகங்களில் இருந்து VPN-ஐ நீங்கள் தேர்வு செய்யலாம். டன்னல்பியர் இலவசமாக இருந்தாலும் விளம்பரங்கள் தோன்றாது. மேலும் கூடுதல் இலவச தரவை வழங்குகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: