டி.எஸ்.எல்.ஆர் பிரியர்களா நீங்கள்? குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த கேமராக்கள் இதோ...

சினிமாக்கள் மீது ஆர்வம் கொண்ட கலைஞர்களைப் போலவே புகைப்படம் மீதும் தீராத ஆர்வமும் நேசிப்பும் கொண்ட புகைப்படக் கலைஞர்கள் உண்டு. அவர்கள் அனைவரிடமும் பெரும்பாலும் டி.எஸ்.எல்.ஆர் கேமரா தான் இருக்கும். ஆனால், டி.எஸ்.எல்.ஆர் கேமராக்கள் குறைவான விலையில் கிடைப்பதில்லை. கேமராவின் சிறப்பம்சத்தையும் வகையையும் பொறுத்து பல்வேறு விலைகளில் அவை கிடைக்கின்றன. ரூ.50,000-க்குக் கீழுள்ள டி.எஸ்.எல்.ஆர் கேமராக்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 5:27 PM IST
  • Share this:
1. நிகான் டி 5600

நிகான் டி 5600 கேமராவானது 23.5 x 15.6 மி.மீ, 24 மெகா பிக்சல், ஏபிஎஸ்-சி சிஎம்ஓஎஸ் சென்சார் மற்றும் 39 ஆட்டோ ஃபோகஸ் புள்ளிகளுடன் வருகிறது. கேமராவில் டச் ஸ்கிரீன் கண்ட்ரோல், அதிக நேரம் நீடிக்கும் பேட்டரி உள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 850 ஷாட்களைக் எடுக்க முடியும். இது வைஃபை, என்.எப்.சி மற்றும் மைக்ரோஃபோன் உள்ளமைக்கப்பட்ட அம்சத்துடன் வருகிறது. இதன் விலை ரூ.41,999 மட்டுமே.

2. கேனான் ஈஓஎஸ் 200 டி

கேனான் ஈஓஎஸ் 200 டி என்பது தரத்தில் சமரசம் செய்துகொள்ள விரும்பாதவர்களுக்கு விலை மலிவான, மிகச் சிறந்த கேமராவாகும். பயன்பாட்டிற்கு எளிதானது. இதுவொரு செல்ஃபி-பிரெண்ட்லி டிஸ்ப்ளே உடன் வருகிறது. பின்புற திரையை எந்தக் கோணத்திலும் ரொட்டேட் செய்து பயன்படுத்த முடியும். புதிய டிஜிக் 8 ப்ராசசர் இருப்பதால் கேமராவின் வெளிச்ச அளவு உள்ளிட்டவற்றை நேர்த்தியாக சரிசெய்துகொள்ள ஏதுவாக உள்ளது. இந்த கேமரா ரூ.49,999 விலையில் கிடைக்கிறது.

3. சோனி ஆல்பா ஏ 68

சோனி ஆல்பா ஏ 68, 24.2 மெகாபிக்சல் எக்ஸ்மோர் சி.எம்.ஓ.எஸ் சென்சார் மற்றும் ஆல்பா ஏ68 ஒரு பி.ஐ.யோ.என்.ஷு எக்ஸ் ப்ராசசரைக் கொண்டுள்ளது. இதே ரகத்தில் முன்பு வெளியான கேமராக்களை விடவும் மூன்று மடங்கு வேகமாக இது செயல்படுகிறது. இந்த விலை வரம்பில் உள்ள மற்ற கேமராக்கள் 3 டி சப்ஜெக்ட் டிராக்கிங்கை வழங்கும்போது, ஆல்பா ஏ 68 2 டி, 3 டி மற்றும் 4 டி என்று மூன்று வகையான டிராக்கிங்கையும் வழங்குகிறது. இத்தனை அம்சங்களும் ரூ.42,500 விலையில் கிடைக்கின்றது.Also read: முதல்முறையாக பணத்தை முதலீடு செய்யப் போறீங்களா? இதைப் படியுங்க..4. நிகான் டி 3500

நிகான் டி 3500 ஒரு ஆரம்ப நிலை டி.எஸ்.எல்.ஆர் கேமராவாகும். இது டி 3400-க்கு அடுத்த மாடலாகும். இந்த கேமராவில் டச் ஸ்கிரீன் ஆப்ஷன் இல்லை. இருப்பினும், புளூடூத் வசதியைக் கொண்டுள்ளது. இந்த நிகான் டி 3500, ஒரு ஸ்மார்ட்போனை அல்லது சந்தையில் விலை குறைவாகக் கிடைக்கும் மற்ற கேமராக்களுடன் ஒப்பிடுகையில் நல்ல செயல்திறன், தரமான க்ளேரிட்டி உள்ளிட்டவற்றை வழங்குகிறது. இந்த கேமராவின் விலை ரூ.30,999 ஆகும்.

5. கேனான் ஈஓஎஸ் 1500 டி

ஈ.ஓ.எஸ் 1500 டி என்பது கேனானின் ஆரம்ப நிலை. 1300D மாடலுடன் ஒப்பிடும்போது 1500D-க்கு இடையிலான முக்கிய வேறுபாடு சென்சாரை 18MP இலிருந்து 24.1MP ஆக மேம்படுத்தியிருப்பதாகும். கேனான் ஈஓஎஸ் 1500 டி 3 இன்ச் வேரி-ஆங்கிள் டச்ஸ்கிரீனுடன் போதுமான பேட்டரி அம்சத்துடன் வருகிறது. இதன் விலை ரூ.31,490 ஆகும்.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading