Home /News /technology /

ரூ.30,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த குரோம்புக் லேப்டாப்களின் பட்டியல்...!

ரூ.30,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த குரோம்புக் லேப்டாப்களின் பட்டியல்...!

கோப்புப் படம்

கோப்புப் படம்

இந்த ஹெச்பி குரோம்புக் லேப்டாப்பானது டூ-இன்-ஒன் குரோம்புக் லேப்டாப் ஆகும், இதன் விலை ரூ.29,990 மற்றும் Amazon-ல் வாங்க கிடைக்கிறது.

குரோம்புக்ஸ் (chromebooks) என்பது கூகுளின் Chrome OS-ல் இயங்கும் டோன்ட்-டவுன்ட் (toned-down) லேப்டாப்கள் ஆகும். இது லேப்டாப் செட்டப்பில் Android போன்ற அனுபவத்தை வழங்குகிறது. கூகுளின் Chrome OS மற்றும் Chrome வெப் பிரவுசரை கொண்டு இயங்கும் லேப்டாப்கள் கடந்த 2011-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. விண்டோஸ் அல்லது மேக்-ஐ விட பாதுகாப்பான அமைப்பை வழங்கும் இணைய சாதனமாக குரோம்புக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் டேட்டா கூகுள் கிளவுட்டில் சேமிக்கப்படுகிறது. அதே சமயம் இவை கேமிங் அல்லது வீடியோ எடிட்டிங் போன்ற செயல்திறன் மற்றும் கடுமையான பணிகளை உள்ளடக்காத மிகவும் வரையறுக்கப்பட்ட அனுபவத்தை வழங்குகின்றன. இந்தியாவில் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சில சிறந்த Chromebook லேப்டாப்களை இங்கே பாருங்கள்..

ஆசஸ் குரோம்புக் சிஎக்ஸ்1 (Asus Chromebook CX1)

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த Asus Chromebook CX1101 (CX1) இந்தியாவில் ரூ.18,990 என்ற விலையில் கிடைக்கிறது. பிரபல ஈ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டில் விற்கப்பட்டு வருகிறது. இந்த குரோம்புக் லேப்டாப் 11.6-இன்ச் HD டிஸ்ப்ளே, 4GB ரேம் மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்ட Intel Celeron N4020 CPU ப்ராசஸர் மூலம் இயங்குகிறது. மேலும் microSD கார்டு ஸ்லாட் மூலம்1TB வரை ஸ்டோரேஜை விரிவாக்கி கொள்ளலாம். மேலும் இந்த குரோம்புக் மிலிட்டரி-கிரேட் பொருட்களால் ஆனது, ஸ்லிம் மற்றும் லைட்வெயிட்டானது.

ஹெச்பி குரோம்புக் எக்ஸ்360 14-இன்ச் (HP Chromebook x360 14-inch)

இந்த ஹெச்பி குரோம்புக் லேப்டாப்பானது டூ-இன்-ஒன் குரோம்புக் லேப்டாப் ஆகும், இதன் விலை ரூ.29,990 மற்றும் Amazon-ல் வாங்க கிடைக்கிறது. இந்த லேப்டாப் 14-இன்ச் டச் சென்சிட்டிவ் HD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. AMD 3015Ce ப்ராசஸர் கொண்டு இயக்கப்படும் இந்த குரோம்புக் லேப்டாப் 4GB ரேம் மற்றும் 64GB இன்டர்னல் மெமரி ஸ்டோரேஜை கொண்டுள்ளது. மேலும் ergonomic டிசைனுடன் வரும் இந்த குரோம்புக் வெறும் 1.49 கிலோ எடை கொண்டது.

லெனோவா ஐடியாபேட் டூயட் 3ஐ (lenovo IdeaPad Duet 3i)

இந்த Lenovo IdeaPad Duet 3i-ன் விலை ரூ.29,999 மற்றும் Lenovo-வின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் வாங்குவதற்கு கிடைக்கிறது. இதுவும் 2-in-1 லேப்டாப் ஆகும். இந்த குரோம்புக் லேப்டாப் 10.3-இன்ச் WUXGA டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே மற்றும் 340nits பீக் பிரைட்னஸுடன் வருகிறது. இது Intel Celeron N4020 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, மேலும் 4GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த லேப்டாப் Intel UHD Graphics 600 உடன் வருகிறது மற்றும் 9 மணிநேர பேட்டரி லைஃப் தரும் என கூறப்படுகிறது.

ஹெச்பி குரோம்புக் 14 (HP Chromebook 14):

இந்தியாவில் ஹெச்பி குரோம்புக் 14-ன் விலை ரூ.27,990-ஆக உள்ளது, அமேசானில் வாங்க முடியும். 14-இன்ச் டிஸ்ப்ளே, 4GB ரேம் மற்றும் 64GB eMMC ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்டல் UHD கிராபிக்ஸ் 600 GPU-வை கொண்டுள்ளது. இன்டெல்லின் Celeron N4020 CPU மூலம் இயக்கப்படுகிறது.

ஏசர் குரோம்புக் ஸ்பின் 13 (Acer Chromebook Spin 13):

இது 2256×1504 ரெசல்யூஷன் மற்றும் 13.5-இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் இந்த லேப்டாப் 1.7GHz 8-th ஜென் இன்டல் கோர் ப்ராசஸருடன் 16GB வரை ரேம் மற்றும் Intel UHD கிராபிக்ஸ் செயலியுடன் வருகிறது.

Also read... உடனடியாக அப்டேட் செய்யுங்கள்... ஐஃபோன், மேக்புக் யூஸர்களுக்கு அரசு எச்சரிக்கை

ஆசஸ் குரோம்புக் சி432 (Asus Chromebook C432):

இதன் விலை ரூ.21,499 மற்றும் Flipkart-ல் கிடைக்கிறது. 14-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்ட இன்டெல் செலரான் ப்ராசர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது இது இரண்டு USB Gen 3.2 போர்ட்ஸ் , ஒரு USB-A போர்ட், இரண்டு USB டைப்-C போர்ட்ஸ் மற்றும் ஒரு microSD கார்டு ரீடர் ஆகியவற்றுடன் வருகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Budget laptop, Laptop, Technology

அடுத்த செய்தி