ரூ.30,0000 பட்ஜெட்டில் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு தரமான மற்றும் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்க வேண்டும் என்கிற தேடலில் நீங்கள் உள்ளீர்கள் என்றால்.. கவலையை விடுங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். ரூ.30,000 பட்ஜெட்டில் நீங்கள் கவனிக்க வேண்டிய டாப் 10 ஸ்மார்ட்போன்க்ளின் லிஸ்ட் இதோ:
மோட்டோரோலா எட்ஜ் 30 (ரூ.27,999)
உலகின் மெலிதான 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகமாகி உள்ள இது எச்டிஆர்10+, 144ஹெர்ட்ஸ் எஃப்எச்டி+ ஓஎல்இடி உடனான டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 778G+ எஸ்ஓசி, 33W சார்ஜிங் ஆதரவு, 4020 எம்ஏஎச் பேட்டரி, 50 எம்பி மெயின் சென்சார் (ஓஐஎஸ்) + 50 MP அல்ட்ராவைட் கேமரா போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.
ஐக்யூ 7 5ஜி (ரூ.29,990)
இது ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி, கேமிங்கின் போது ஃபிரேம் ரேட்களை மேம்படுத்த உதவும் இரண்டாம் நிலை டிஸ்ப்ளே சிப், எச்டிஆர்10+ ஆதரவுடன் 120ஹெர்ட்ஸ் எஃப்எச்டி+ அமோஎல்இடி டிஸ்பிளே, 66W சார்ஜிங் ஆதரவுடன் 4,400 எம்ஏஎச் பேட்டரி, 48 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.
ஒப்போ ரெனோ 7 5ஜி (ரூ.28,999)
இது மீடியாடெக் டைமன்சிட்டி 900 எஸ்ஓசி, எச்டிஆர்10+ ஆதரவுடன் 90ஹெர்ட்ஸ் எஃப்எச்டி+ ஓஎல்இடி டிஸ்ப்ளே, 65W பாஸ்ட்-சார்ஜிங் ஆதரவுடன் 4,500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 64 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
Also Read : குறைந்த பட்ஜெட் விலையில் வாங்க கூடிய தரமான டாப் 5 ஸ்கூட்டர்கள்..!
சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி (ரூ.26,499)
இது மீடியாடெக் டைமென்சிட்டி 900 எஸ்ஓசி, 25W சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி 108 எம்பி குவாட்-கேமரா செட்டப் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
விவோ வி23 5ஜி (ரூ.29,990)
இது 50 எம்பி செல்பீ கேமரா, 64 எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், மீடியா டெக் டைமன்சிட்டி 920 சிப்செட், எச்டிஆர்10+ ஆதரவுடன் 90ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, 44W சார்ஜிங் கொண்ட 4,200 எம்ஏஎச் பேட்டரி ஆகிய முக்கிய அம்சங்களை பெற்றுள்ளது.
சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி (ரூ.26,999)
இது மீடியாடெக் டைமன்சிட்டி 920 எஸ்ஓசி, 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, 108 எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், சூப்பர்-ஃபாஸ்ட் 120W சார்ஜிங் ஆதரவுடன் 4,500 எம்ஏஎச் பேட்டரி போன்ற பிரதான அம்சங்களுடன் வருகிறது.
டெக்னோ ஃபாண்டம் எக்ஸ் (ரூ.25,999)
இந்த பட்டியலில் உள்ள ஒரே 4ஜி இதுவாகும். இது 90ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, மீடிடாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட், ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ், 33W சார்ஜிங் ஆதரவுடன் 4,700 எம்ஏஎச் பேட்டரி, 108 எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 48 எம்பி டூயல் செல்பீ கேமரா போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் (ரூ.25,999)
இது ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி, 120 ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, 65W சார்ஜிங் கொண்ட 4,300 எம்ஏச் பேட்டரி, 64 எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.
சியோமி 11 லைட் என்இ 5ஜி (ரூ.26,999)
இது ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி, டால்பி விஷன் மற்றும் எச்டிஆர்10+, 90 ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, 33W சார்ஜிங் கொண்ட 4,250 எம்ஏஎச் பேட்டரி, 64 எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் 2 (ரூ.27,999)
இது மீடியாடெக் டைமன்சிட்டி 1200 எஸ்ஓசி, 90 ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, 50 எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 65W சார்ஜிங் ஆதரவுடன் 4,500 எம்ஏஎச் பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Smart Phone