Home /News /technology /

ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமா? ரூ.20,000க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் விவரம்!

ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமா? ரூ.20,000க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் விவரம்!

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

இந்திய சந்தையில் ரூ.20,000க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து இங்கு காண்போம்.,

ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பது, வங்கி பணிகள் மேற்கொள்வது வரைஅனைத்து முக்கிய பணிகளுக்கும் ஸ்மார்ட்போன்கள் தேவைப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நாள்தோறும் எண்ணற்ற ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள், ஒன்பிளஸ், சியோமி, ரெட்மீ, மற்றும், ரியல்மீ, மோட்டோரோலா போன்ற நிறுவனங்கள் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. இந்தநிலையில் இந்திய சந்தையில் ரூ.20,000க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து இங்கு காண்போம்.,

1. Realme 8s 5G :



Realme 8s 5G இந்தியாவில் ரூ. 17,999 முதல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 90Hz புதுப்பிப்பு ரேட்டுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 810 5G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் MediaTekன் Dimensity 810 ப்ராசெஸ்சார் இருக்கும் முதல் ஸ்மார்ட்போனாகவும் இது இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டருடன் மூன்று பின்புற கேமரா, 16 எம்பி செல்பி கேமராவும் உள்ளது. மேலும் 5,000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ரியல்மீ இணையதளம் மற்றும் பிளிப்கார்ட்டில் இந்த போனை வாங்கலாம்.

2. Moto G60 :

Moto G60

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி60 இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது பிளிப்கார்ட்டில் இந்த போன் ரூ.16,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் HDR10 டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு ரேட்டுடன் வருகிறது. குவால்காமின் ஸ்னாப்டிராகன் 732G ப்ராசெஸ்சார் மூலம் இயக்கப்படுகிறதுஇந்த போன் 6GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் கூடுதல் சிறப்பம்சம் 108 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டரைக் கொண்ட மூன்று பின்புற கேமரா, 32 எம்பி செல்பி கேமரா உள்ளது. மேலும் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

3. iQoo Z3 :

iQoo Z3

iQoo Z3 5G ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் FHD+ டிஸ்ப்ளேவுடன் 120Hz புதுப்பிப்பு ரேட்டுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 768ஜி 5ஜி ப்ராசெஸ்சார் மூலம் இயக்கப்படுகிறது. 8ஜிபி வரை ரேம் மற்றும் 128, 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கிறது. மேலும் 64 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர் பின்புற கேமரா, 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமராவு, 16 எம்பி செல்பி கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. மேலும் 4,400mAh பேட்டரி, 55W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. iQoo Z3 ஸ்மார்ட்போன் அமேசானில்
ரூ. 19,999 முதல் கிடைக்கிறது.

4. Realme 8 Pro :

Realme 8 Pro

Realme 8 Pro ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் FHD+ Super AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. 8ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி UFS 2.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட Qualcomm 720G ப்ராசெஸ்சார் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் 108 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் B&W லென்ஸ் உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய கேமரா அம்சம் உள்ளது. 4,500mAh பேட்டரி, 65W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ரியல்மீ இணையதளம் மற்றும் பிளிப்கார்ட்டில்இந்த போனை ரூ. 17,999க்கு வாங்கலாம்.

5. Poco X3 Pro :



Poco X3 Pro ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் டிஸ்ப்ளேவுடன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு ரேட்டுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 ப்ராசெஸ்சார் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. Poco X3 Proல் குவாட் ரியர் கேமரா உள்ளது, அதில் 48 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் ஷூட்டர், 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் 5,160mAh பேட்டரியுடன் வருகிறது மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.18,999க்கு கிடைக்கிறது.

6. Redmi Note 10 Pro Max :



சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான Redmi Note 10 Pro Max சியோமியின் அதிகாரப்பூர்வ இணையதளம், அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் ரூ. 19,999க்கு கிடைக்கிறது. Redmi Note 10 Pro Max ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு ரேட்டுடன் வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 732G ப்ராசெஸ்சார் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. மேலும் 108 மெகாபிக்சல் குவாட் ரியர் கேமரா அம்சம் உள்ளது. 5 மெகாபிக்சல் சூப்பர் மேக்ரோ லென்ஸ், 8 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை இதில் அடங்கும். 5,020mAh பேட்டரியுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

7. Realme Narzo 30 Pro : (ரூ. 16,999) -

Realme Narzo 30 Pro

 

Realme Narzo 30 Pro ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் FHD+ டிஸ்ப்ளேவுடன் 120Hz புதுப்பிப்பு ரேட்டுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமன்சிட்டி 800U ப்ராசெஸ்சார் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது. கேமராவை பொறுத்தவரை 48 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் அமைப்புடன் வருகிறது. மேலும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. Realme Narzo 30 Pro போனின் விலை ரூ. 16,999 ஆகும்.

8. Samsung Galaxy M51 :



Samsung Galaxy M51 சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ. 19,999க்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது மற்றும் Qualcomm Snapdragon 730G ப்ராசெஸ்சார் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 8GB வரை ரேம் மற்றும் 128GB வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. Samsung Galaxy M51 ஆனது குவாட் ரியர் கேமராவுடன் வருகிறது, இதில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் ஷூட்டர் மற்றும் இரண்டு 5 மெகாபிக்சல் கேமராக்கள் உள்ளன. 25W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் இந்த போனில் 7,000mAh பேட்டரி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Smartphone, Xiaomi

அடுத்த செய்தி