• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • 5G ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?இதோ ரூ.20,000க்குள் கிடைக்கும் போன்கள் விவரம்!

5G ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?இதோ ரூ.20,000க்குள் கிடைக்கும் போன்கள் விவரம்!

5G smartphones

5G smartphones

ரூ. 20,000க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

  • Share this:
தற்போது 5ஜி சேவை பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இன்னும் 5ஜி சேவை மக்களுக்கு வணிகரீதியாக வழங்கவில்லை. எனினும் பல்வேறு ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய போன்களை விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். இந்தியாவில் மிக விரைவில் 5ஜி வழங்க வாய்ப்புகள் இருப்பதால் மொபைல் வாங்க நினைப்பவர்கள் தற்போதே 5ஜி-யுடன் கூடிய ஸ்மார்ட்போனை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். அந்தவகையில் ரூ .20,000க்குள் ஒரு 5ஜி சேவையுடன் கூடிய ஸ்மார்ட்போனை வாங்க நீங்கள் நினைத்தால் இந்த பதிவு உங்களுக்குத்தான், ரூ. 20,000க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

ரெட்மி நோட் 10T 5ஜி (Redmi Note 10T 5G) :

ரெட்மி சமீபத்தில் தனது முதல் 5ஜி போனான ரெட்மி நோட் 10T-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனம் மீடியா டெக் டைமென்ன்ஸிட்டி 700 SoC ஐ கொண்டுள்ளது. இது 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி வரை நீட்டிக்கக்கூடிய ஸ்டாரேஜூடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நோட் 10T, 6.5 அங்குல FHD + IPS LCD பேனலை 90Hz ரெஃப்ரஷ் வீதத்துடன் கொண்டுள்ளது மற்றும் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. 5,000 எம்ஏஎச் பேட்டரி, 18W சார்ஜிங் அம்சம் உள்ளது. இந்த போனின் பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் மூன்று வண்ணங்களில் வருகிறது. 6GB RAM வேரியண்ட் விலை ரூ. 6,999 ஆகும்.

போகோ எம்3 ப்ரோ 5ஜி (Poco M3 Pro 5G) :

ரெட்மி நோட் 10T 5ஜி மற்றும் போக்கோ M3 ப்ரோ இரண்டும் அதிகளவிலான ஒரே அம்சங்களை கொண்டுள்ளன. போக்கோ M3 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் ஃபுல்-எச்டி+ டிஸ்பிளே மற்றும் 90 Hz ரெஃப்ரஷ் விகிதத்துடன் கொண்டுள்ளது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 48 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அம்சங்கள் உள்ளன. 8 எம்பி முன்பக்க செல்பி கேமராவும் உள்ளது. இதில் யூசர்கள் பயனர்கள் 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியையும் பெறுவார்கள். குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 662 ப்ராசெஸ்சார் உள்ளது. இந்த போனில் விலை ரூ.15,999 ஆகும்.

Also Read:  ஆண்களுடன் இனி செக்ஸ் இல்லை – பெண்கள் புதுமையான போராட்டம்!

iQoo Z3 5G :

IQoo Z3 5G 6.58-inch Full-HD+ LCD டிஸ்ப்ளே மற்றும் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 768G SoC உடன் ஒருங்கிணைந்த அட்ரினோ 620 GPU-ஆல் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஓஎஸ்-ல் இயங்குகிறது. மேலும் இந்த போன் இரண்டு 5ஜி சிம் கார்டுகளை ஆதரிக்கிறது. இதில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவும், 16 எம்பி செல்பி கேமராவும் உள்ளது. இதன் விலை ரூ.19,999 ஆகும்.

ரியல்மி 8 5ஜி (realme 8 5G) :

நீங்கள் ரூ .15,000 க்கும் குறைவான 5ஜி ஸ்மார்ட்போனை தேடுகிறீர்களானால் ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் மீடியாடெக் டைமென்சிட்டி 700 ப்ராசெஸ்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 அங்குல முழு எச்டி+ (1,080 × 2,400 பிக்சல்கள்) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதில் டிஸ்ப்ளே விகிதம் 20: 9 ஆகும் மற்றும் 90 Hz ரெஃப்ரஷ் வீதத்துடன் கொண்டுள்ளது. இது மீடியாடெக் டைமென்சிட்டி 700 SoCஐ கொண்டுள்ளது, 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவும், 16 எம்பி செல்பி கேமராவும் உள்ளது, 18W பாஸ்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5,000mAh பேட்டரியும் உள்ளது. இதன் விலை ரூ.15,999 ஆகும்.

Also Read:    7 மணி நேரத்தில் 101 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்த அரசு மருத்துவருக்கு சிக்கல்!

சாம்சங் கேலக்ஸி எம் 32 5ஜி (Samsung Galaxy M32 5G)

சாம்சங் கேலக்ஸி M32 5ஜி இந்தியாவில் ரூ. 20,999 என்ற விலையில் அறிமுகமானது, எனினும் வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ.2,000 குறைத்து ரூ .18,999க்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி+ டிஎஃப்டி இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே மற்றும் 60 Hz ரெஃப்ரஷ் வீதத்துடன் வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 720 SoC அம்சத்துடன் 8 ஜிபி ரேம்-ஐ கொண்டுள்ளது. இந்த போனில் 48 மெகாபிக்சல் கேமரா மற்றும் 20 எம்பி செல்பி கேமராவும் உள்ளது. மேலும் 15W சார்ஜிங்கை அம்சத்துடன் 5,000mAh பேட்டரி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: