• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • பட்ஜெட் விலையில் இந்தியாவில் விற்பனையாகும் சிறந்த 5G ஸ்மார்ட்போன்களின் பட்டியல்!

பட்ஜெட் விலையில் இந்தியாவில் விற்பனையாகும் சிறந்த 5G ஸ்மார்ட்போன்களின் பட்டியல்!

மாதிரி படம்

மாதிரி படம்

அதன்படி ரூ.16,000 ரூபாய்க்கு கீழ் 5G தொழில்நுட்பம் கொண்ட முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை நீங்கள் வாங்க விரும்பினால், பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

  • Share this:
உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் பல நிறுவனங்கள் தற்போது பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு 5G இணைப்பை அறிமுகப்படுத்தி வருகின்றன. 5G தொழில்நுட்பத்தை இந்தியா இன்னும் வணிகரீதியாக அறிமுகப்படுத்தவில்லை என்றாலும், சில முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகள் ஏற்கனவே அந்த தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அதன்படி ரூ.16,000 ரூபாய்க்கு கீழ் 5G தொழில்நுட்பம் கொண்ட முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை நீங்கள் வாங்க விரும்பினால், பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். கீழ்காணும் அனைத்து போன்களும் 5G தொழில்நுட்பத்தை வழங்குகின்றன.

1. ரியல்மீ 8 5ஜி (Realme 8 5G):

ரியல்மி 8 5 ஜி ஸ்மார்ட்போனின் 6.5 இன்ச் ஃபுல்-எச்டி+ (1,080 × 2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளே, 20: 9 விகிதம் மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் விகிதத்துடன் வருகிறது. ஹூட்டின் கீழ், இது மீடியாடெக் டைமென்சிட்டி 700 SoC ப்ராசசரை கொண்டுள்ளது. போனின் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உள்ளது. இதில், 18W குயிக் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5,000mAh பேட்டரியும் உள்ளது. இந்த தொலைபேசி பல வண்ண விருப்பங்களில் வருகிறது. இதன் விலை தோராயமாக ரூ.15,499 இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2. ரெட்மி நோட் 10 டி 5 ஜி (Redmi Note 10T 5G):

சியோமியின் துணை பிராண்ட் நிறுவனமான ரெட்மி சமீபத்தில் தனது முதல் 5G போனை மிகவும் பிரபலமான நோட் சீரிஸின் வரிசையில் அறிமுகப்படுத்தியது. ரெட்மி நோட் 10 டி 5 ஜி போன், 6.5 இன்ச் ஃபுல்-எச்டி+ டிஸ்பிளே மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷிங் வீதத்துடன் வருகிறது. இதில் மீடியாடெக் டைமென்சிட்டி 700 SoC ப்ராசசர் மற்றும் 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உள்ளது. இது 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 18W சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் பயோமெட்ரிக் பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனரைக் கொண்டுள்ளது. இதன் விலை தோராயமாக ரூ .14,999 இருக்கும்.

3. போகோ எம் 3 ப்ரோ 5 ஜி (Poco M3 Pro 5G):

போக்கோ எம் 3 ப்ரோ 5 ஜி, 6.53 இன்ச் ஃபுல்-எச்டி+ டிஸ்ப்ளே மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷிங் வீதத்தைக் கொண்டுள்ளது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 48 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இணைந்த அதே டைமென்சிட்டி 700 SoC ப்ராசசரைக் கொண்டுள்ளது. இதை வாங்கும் யூசர்கள் 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியையும் பெறுவார்கள். இதன் விலை தோராயமாக ரூ .14,499 இருக்கும்.

Also read... பிளிப்கார்ட்டில் ஐபோன் 12 சீரிஸ் ஃபோன்களுக்கு மாபெரும் தள்ளுபடி... விலைப்பட்டியல் இங்கே!

4. ஒப்போ ஏ 53 எஸ் 5 ஜி (Oppo A53s 5G):

மீடியாடெக் டைமென்சிட்டி 700 ப்ராசசர் மற்றும் 6.52 இன்ச் எச்டி+ (720 × 1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளே கொண்ட மற்றொரு மொபைல் சாதனம் தான் ஒப்போ ஏ 53 எஸ். Oppo A53s 5G-யின் கேமரா அமைப்பை பொறுத்தவரை, 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் ஷூட்டர்கள் இருக்கும். மேலும் இந்த தொலைபேசியில் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 17.74 மணிநேரம் தொடர்ச்சியாக வீடியோ பார்க்கும் அளவுக்கு பேட்டரி திறனை தக்க வைக்கிறது. முக்கியமாக இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் வருகின்றன. இதன் விலை ரூ.15,990 ஆகும்.

5. ரியல்மி நர்சோ 30 5ஜி (Realme Narzo 30 5G):

இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது ரியல்மி நிறுவனத்தின் மற்றொரு 5G சாதனம். வடிவமைப்பைத் தவிர நர்சோ 30 5ஜி மற்றும் ரியல்மி 8 5ஜி இடையே வித்தியாசம் பெரிதாக இருக்காது. இந்த தொலைபேசி 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷிங் வீதத்துடன் 6.5 இன்ச் டிஸ்ப்ளேவை பேக் செய்கிறது. ஹூட்டின் கீழ், இது 6 ஜிபி ரேம் + 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமென்சிட்டி 700 SoC ப்ரோசசரை பெற்றுள்ளது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதன் விலை ரூ .14,999 ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: