நாட்டின் முன்னணி டெலிகாம் ஆப்ரேட்டர்கள் இந்தியாவில் 5G நெட்வொர்க்ஸ்களை மிக விரைவில் வெளியிட தயாராகி வருகின்றன. தற்போது வரை பெரும்பாலான ஸ்மார்ட் போன் யூஸர்கள் 4G நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும் மொபைல்களை வைத்திருக்கின்றனர்.
நீங்கள் புதிய மொபைல் வாங்கும் யோசனையில் இருந்தால் விரைவில் 5G நெட்வொர்க் ரிலீஸ் செய்யப்படும் என்பதை கருத்தில் கொண்டு, 5G நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும் மொபைல்களை வாங்குவது சிறந்தது. ரூ.15,000 பட்ஜெட்டிற்குள் ஒரு புதிய 5G ஃபோனை வாங்க விரும்பினால், கீழ்க்காணும் மொபைல்களின் உங்களுக்கு உதவும்.
இந்தியாவில் தற்போது ரூ.15,000 விலை வரம்பில் கிடைக்கும் சிறந்த 5G போன்களின் பட்டியல் இங்கே...
ரெட்மி நோட் 10டி 5ஜி (Redmi Note 10T 5G):
இந்த மொபைல் 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ், 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் உள்ளிட்ட 2 வேரியன்ட்களில் வருகிறது. இவற்றின் விலைகள் முறையே ரூ.11,999 மற்றும் ரூ.13,999 ஆகும். இந்த ஸ்மார்ட் போன் கிராஃபைட் பிளாக், குரோமியம் ஒயிட், மின்ட் கிரீன் மற்றும் மெட்டாலிக் ப்ளூஉள்ளிட்ட 4 கலர்களில் வருகிறது. 48 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமராக்கள், 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 700 SoC, 90 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன் ரெஃப்ரெஷ் ரேட், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் கூடிய 5000mah பேட்டரி உட்பட பல அம்சங்களுடன் வருகிறது.
சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி (Samsung Galaxy F23 5G):
சாம்சங்கின் சமீபத்திய இந்த 5G ஸ்மார்ட்போன் 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் உள்ளிட்ட 2 வேரியன்ட்களில் வருகிறது. இவற்றின் விலை முறையே ரூ.14,999 மற்றும் சேமிப்பு ரூ.15,999 ஆகும். இந்த டிவைஸ் காப்பர் ப்ளஷ், அக்வா ப்ளூ மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் உள்ளிட்ட 3 கலர் ஆப்ஷன்களில் வருகிறது. இந்த மொபைல் 6.6 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 750G SoC ப்ராசஸர், 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா செட்டப், 5000mAh பேட்டரி மற்றும் பல அம்சங்களுடன் வருகிறது.
Also Read : 5G... BSNL வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்
போகோ எம்4 ப்ரோ 5ஜி (Poco M4 Pro 5G):
இந்த மொபைல் ரூ.15,000-க்கு கீழ் உள்ள சிறந்த போன்களில் ஒன்றாகும். இந்த ஸ்மார்ட் போன் 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ், 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் உள்ளிட்ட 3 வேரியன்ட்கள் முறையே ரூ.15,049, ரூ.17,069 மற்றும் ரூ.19,109 ஆகிய விலைகளில் கிடைக்கிறது. இந்த மொபைல் 6.6-இன்ச் ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளே, 5000mah பேட்டரி, மீடியாடெக் டைமன்சிட்டி 810 பிராசஸர், 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமராக்கள், 1TB வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் மற்றும் பல அம்சங்களை உள்ளடக்கியது.
ரியல்மி நார்சோ 30 5ஜி (Realme Narzo 30 5G):
இந்த மொபைல் 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் மற்றும் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் முறையே ரூ.14,999 மற்றும் ரூ.16,999 என்ற விலைகளில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போன் 90hz ஸ்கிரீன் ரெஃப்ரஷ் ரேட் , மீடியாடெக் டைமன்சிட்டி 700 5G ப்ராசஸர், 5000mAh பேட்டரி, 48 மெகாபிக்சல் பிரைமாரி ரியர் கேமரா மற்றும் பல அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இது ரேசிங் ப்ளூ மற்றும் ரேசிங் சில்வர் என 2 கலர்களில் வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 5G technology, Smart Phone