• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • பெஸ்ட் 2 ஜிபி திட்டங்கள் - ஜியோ vs ஏர்டெல் vs வோடா ஃபோன் ஐடியா vs பி.எஸ்.என்.எல்

பெஸ்ட் 2 ஜிபி திட்டங்கள் - ஜியோ vs ஏர்டெல் vs வோடா ஃபோன் ஐடியா vs பி.எஸ்.என்.எல்

மொபைல் போன்

மொபைல் போன்

600 ரூபாய்க்கும் குறைவாக 2 ஜிபி டேட்டா மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பெஸ்ட் ப்ரிப்பெய்ட் திட்டங்களை இங்கு காணலாம்.

  • Share this:
தொலைத்தொடர்பு துறையில் நாள்தோறும் நிலவும் போட்டியை சமாளிக்க இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களாக உள்ள ஜியோ, வோடோபோன் ஐடியா, ஏர்டெல் மற்றும் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் ஆகிய நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றன. நாள்தோறும் 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் அழைப்பு, மெசேஜ் வசதியுடன் ஓடிடி (OTT) சேவையையும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்குகின்றன. 2 ஜிபி வழங்கும் பெஸ்ட் ப்ரீப்பெய்ட் திட்டத்தை தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், நீங்கள் இங்கு தெளிவான விளக்கத்தை பெற்றுக்கொள்ளலாம். பி.எஸ்.என்.எல் நிறுவனம் மட்டும் ஓடிடி சேவையை கொடுக்கவில்லை.

600 ரூபாய்க்கும் குறைவாக 2 ஜிபி டேட்டா மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பெஸ்ட் ப்ரிப்பெய்ட் திட்டங்களை இங்கு காணலாம்.

ஜியோ ப்ரீபெய்ட் பிளான்

ஜியோ நிறுவனத்தின் 444 ரூபாய் ப்ரீப்பெய்ட் திட்டத்தில் நாள்தோறும் 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் மொத்தம் 112 ஜிபி டேட்டா உங்களுக்கு கிடைக்கும். அனைத்து நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகளை மேற்கொள்வதுடன், JioCinema, JioTV சேவைகளை கூடுதலாக பெற்றுக்கொள்ளலாம்.

599 ரூபாய் ஜியோ ப்ரீப்பெய்ட் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. 444 ரூபாய் திட்டத்தில் வழங்குவதுபோல் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், மெசேஜ் மற்றும் ஜியோ சினிமா உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் கிடைக்கும். இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வேலிடிட்டி காலம் கூடுதலாக இருக்கும். 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 598 ரூபாய் ஜியோ ப்ரீப்பெய்ட் திட்டத்தை தேர்தெடுத்தால் சில கூடுதல் அம்சங்களை பெற்று மகிழலாம். அதாவது, இந்த திட்டத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டார் விஐபி-ஐ கூடுதலாக பயன்படுத்திக்கொள்ளலாம். நாள்தோறும் 100 எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொள்ளலாம்.

ஏர்டெல் ப்ரீபெய்ட் பிளான்

ஏர்டெல் நிறுவனத்தின் 449 ரூபாய் ப்ரீப்பெய்ட் திட்டத்தில் நாள்தோறும் 2 ஜிபி டேட்டா மற்றும் அமேசான் பிரை சந்தாவை 30 நாட்களுக்கு பெற்றுக்கொள்ளலாம். 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படும். அனைத்து நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கும் அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். கூடுதலாக, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தா, விங்க் மியூசிக் மற்றும் ஷா அகாடமி ஆகியவையும் வழங்கப்படுகிறது. இலவச ஹலோ டியூன்ஸ் மற்றும் ஃபாஸ்டேக்கில் ரூ.150 கேஷ்பேக் ஆகியவற்றையும் பெறலாம்.

வோடாஃபோன் ஐடியா பிளான்

595 ரூபாய் தொகையில் வோடாஃபோன் ஐடியா வழங்கும் ப்ரீப்பெய்ட் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் ஜீ 5 ப்ரீமியம், வி திரைப்படங்களை பார்த்து ரசித்துக்கொள்ளலாம். ஒருமுறை இந்ததிட்டத்தை தேர்தெடுத்தால் வருட முழுவதும் தொலைக்காட்சி வழியாகவும் திரைப்படங்களை பார்த்து ரசிக்கும் வாய்ப்பை கொடுக்கிறது. 56 நாட்கள் வேலிடிட்டி. அன்லிமிட்டெட் அழைப்புகள், 100 எஸ்.எம்.எஸ் கொடுப்பதுடன், வார இறுதி டேட்டா ரோல் ஓவரையும் கொண்டுள்ளன.

பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் பிளான்

பிஎஸ்என்எல் ரூ.187 ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, 100 தினசரி எஸ்எம்எஸ் மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் (லோக்கல் / எஸ்டிடி) கால்களை வழங்குகிறது. இந்த பட்ஜெட் பிஎஸ்என்எல் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியில் கொடுக்கப்படுகிறது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: