முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஆசியாவில் சிறந்த தொழில்நுட்ப மையங்களின் பட்டியலில் பெங்களூரு இரண்டாவது இடம்!

ஆசியாவில் சிறந்த தொழில்நுட்ப மையங்களின் பட்டியலில் பெங்களூரு இரண்டாவது இடம்!

டெக் நகரம்

டெக் நகரம்

நகரங்களை மதிப்பீடு செய்வதற்கு நகரத்தின் திறன், ரியல் எஸ்டேட் மற்றும் வணிகச் சூழல் போன்ற காரணிகளை ஆய்வு செய்கிறது.

  • Last Updated :
  • Chennai, India

குஷ்மேன் மற்றும் வேக்ஃபீல்டின் அறிக்கையின்படி, ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் சிறந்த தொழில்நுட்ப மையங்களின் பட்டியலில் பெங்களூரு இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனாவின் பெய்ஜிங் முதல் இடத்தில உள்ளது.

குஷ்மேன் மற்றும் வேக்ஃபீல்டின் எனும் தனியார் நிறுவனம் , ' டெக் சிட்டிஸ்: தி குளோபல் இன்டர்செக்ஷன் ஆஃப் டேலண்ட் அண்ட் ரியல் எஸ்டேட் ' என்று அழைக்கப்படும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் உள்ள 115 வெவ்வேறு 'டெக் நகரங்களை' ஆய்வு செய்து பட்டியலிட்டுள்ளது.

இந்திய நகரங்கள்:

தொழில்நுட்ப நகரங்கள் பட்டியலில் பெய்ஜிங் மற்றும் பெங்களூருக்குப் பிறகு,  சென்னை, டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று இந்திய நகரங்கள் உள்ளன. மும்பை மற்றும் புனே ஆகியவை ஆசிய பசுபிக் பகுதியின் சிறந்த 14 நகரங்களின் பட்டியலில் எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடங்கள் பெற்றுள்ளது.

அளவீடுகள்:

நகரங்களை மதிப்பீடு செய்வதற்கு நகரத்தின் திறன், ரியல் எஸ்டேட் மற்றும் வணிகச் சூழல் போன்ற காரணிகளை ஆய்வு செய்கிறது. பெங்களூரு இந்தியாவின் மிகப்பெரிய கிரேடு A அலுவலக சந்தையின் தாயகமாக இருப்பதாகக் கூறியது.

பெங்களூரு: 

பெங்களூரு அலுவலக சந்தையில் வருடாந்திர குத்தகை நடவடிக்கையில் (2017-2021) தொழில்நுட்பத் துறை சராசரியாக 38-40% பங்கைக் கொண்டுள்ளது, இது தேசிய சராசரியான 35% ஐ விட அதிகமாகும் என்று அறிக்கை கூறியது. அலுவலக இடத்தை குத்தகைக்கு வழங்குவதில் பெங்களூரு மிகப்பெரிய பங்களிப்பாளர்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது.

முகேஷ் அம்பானியின் மகனுக்காக துபாயில் வாங்கப்பட்ட பிரமாண்ட வீடு!

குஷ்மேன் மற்றும் வேக்ஃபீல்ட் நகரம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களின் விநியோகத்தை ஆய்வு செய்து, அவுட்டர் ரிங் ரோடு (ORR) மற்றும் பெரிஃபெரல் ஈஸ்ட் (வைட்ஃபீல்ட்) ஆகியவற்றில் தொழில்நுட்ப ரியல் எஸ்டேட் சாதகமாக இருப்பதாகக் கூறி, அவற்றை நகரின் முக்கிய தொழில்நுட்ப மைய சந்தைகளாக மாற்றியதை குறிப்பிட்டுள்ளது.

பல்துறை வளர்ச்சி:

top videos

    பாதுகாப்பு நிறுவனங்கள், பொதுத்துறை தொழில்கள், விண்வெளி, உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்ற பல்வேறு துறைகளில் குடிலாக பெங்களூரு திகழ்வதாக பாராட்டியது. நகரத்தில் குடியிருப்போர் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் வாழ்க்கை வசதிக் குறியீடு 2020 இல் மில்லியன்+ மக்கள்தொகை பிரிவின் கீழ் பெங்களூரு முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

    First published:

    Tags: Bengaluru, Technology