இந்த ஓராண்டில் மட்டும் உங்கள் இன்டெர்நெட் வேகம் எவ்வளவு அதிகரித்திருக்கிறது தெரியுமா?

இந்தியாவில் 4ஜி தொழில்நுட்பம் 87.9 சதவிகிதம் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஓராண்டில் மட்டும் உங்கள் இன்டெர்நெட் வேகம் எவ்வளவு அதிகரித்திருக்கிறது தெரியுமா?
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: October 25, 2019, 7:12 PM IST
  • Share this:
இந்தியாவில் ஒருவருடைய சராசரி இன்டெர்நெட் வேகம் என்பது பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த ஓராண்டில் மட்டும் ஒரு பயனாளரின் இன்டெர்நெட் வேகம் என்பது 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சுமார் 21 மில்லியன் சோதனை முயற்சிகள் 2.4 மில்லியன் நபர்களிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வை இன்டெர்நெட் வேக ஆய்வு நிறுவனமான ஊக்லா மேற்கொண்டது.

ஏப்ரல் 2019- செப்டம்பர் 2019 என்ற காலகட்டத்தில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் காலத்தில் மட்டும் ப்ராட்பேண்ட் வேகம் சுமார் 16.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாத முடிவில் இன்டெர்நெட் வேகம் சராசரியாக 34.07Mbps ஆக இருந்துள்ளது.


இதேகாலத்தில், மொபைல் இன்டெர்நெட் வேகம் 10.63 மற்றும் 11.18Mbps என்ற சராசியைக் கொண்டு இருந்தது. இந்தியாவிலேயே சென்னை தான் அதிவேக இன்டெர்நெட் சேவையைக் கொண்ட நகரமாகும். சென்னையில் சராசரி இன்டெர்நெட் வேகம் 51.07Mbps ஆகும்.

இந்தியாவில் 4ஜி தொழில்நுட்பம் 87.9 சதவிகிதம் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: இன்று முதல் வெளியானது ஃபேஸ்புக் நியூஸ்..!ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது
First published: October 25, 2019, 7:12 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading