அனைத்து மெசேஜ் ஆப்-களும் ஒரே இடத்தில் இணைக்கும் Beeper செயலி பற்றி உங்களுக்கு தெரியுமா?

அனைத்து மெசேஜ் ஆப்-களும் ஒரே இடத்தில் இணைக்கும் Beeper செயலி பற்றி உங்களுக்கு தெரியுமா?

பீப்பர் செயலி

அனைத்து மெசேஜ் ஆப்களையும் ஒரே இடத்தில் கொடுக்கும் வகையில் பீப்பர் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

  • Share this:
மக்களின் தேவைகளை எளிமையாக்கும் வகையில் நாளுக்கு நாள் புதுப்புது கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு காலத்தில் மெசேஜ் செய்ய ஒரே ஒரு செயலி இருந்த மட்டும் நிலையில், தற்போது ஏராளமான செயலிகள் உள்ளன. ட்விட்டர், பேஸ்புக், மெசஞ்சர், கூகுள் ஹேங்கவுட்ஸ் உள்ளிட்ட செயலிகளை செல்போன் யூசர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு செயலியையும் செல்போனில் ஒவ்வொரு பக்கத்தில் இருப்பதால், அதனை தேடுவதற்கு சிரமப்பட்டு தங்களுக்கு பிடித்த ஒரே ஒரு செயலியை பெருமளவில் பயன்படுத்துகிறார்கள். 

இதனை புரிந்து கொண்ட பெபல் ஸ்மார்ட்வாட்ச் நிறுவனம், Beeper App என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளது. 15 மெசேஜ் செயலிகள் இந்த ஒரே செயலியில் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பீப்பர் செயலியின் நிறுவனர் எரிக் மிகிகோவ்ஸ்கி, மெசேஜ் செயலிகளின் HUB -ஆக பீப்பர் செயலி இருக்கும் என தெரிவித்துள்ளார். ஒரே செயலியில் டிவிட்டர், பேஸ்புக், மெசஞ்சர், டெலிகிராம், சிக்னல், ஸ்கைப், கூகுள் ஹேங்கவுட்ஸ், ஐ.ஆர்.சி, எஸ்.எம்.எஸ் உள்ளிட்ட 15 செயலிகள் பீப்பர் செயலியில் இருக்கும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த செயலி மற்ற செயலிகளைப்போல் இலவசம் கிடையாது. ஒவ்வொரு மாதம் 10 டாலரை யூசர்கள் கட்டணமாக செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் யூசர்களுக்கு மட்டுமே அனைத்து செயலிகளையும் ஒரே இடத்தில், அதாவது பீப்பர் செயலியில் கிடைக்கும். ஆன்ட்ராய்டு, லினக்ஸ், விண்டோஸ் ஆகியவற்றிலும் பீப்பர் செயலியை பயன்படுத்தலாம் என நிறுவனர் மிகிகோவ்ஸ்கி தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் NovaChat என்ற பெயரில் செயல்பட்டு வந்த இந்த செயலி Beeper என தற்போது மாற்றப்பட்டுள்ளது. எந்த மெசேஜ் செயலியில் நோட்டிபிகேஷன் வந்தாலும், பீப்பர் செயலியில் இருந்தவாறு அந்த ஆப்களில் பதில் அளிக்கலாம்.

பீப்பர் செயலியின் வலைதளத்தில், iMessages எப்படி ஆன்ட்ராய்டு மற்றும் விண்டோஸில் செயல்படும் என அதிகப்படியான கேள்விகள் கேட்கப்படுகின்றன. பீப்பர் செயலியின் மூலம் விண்டோஸ், ஆன்ட்ராய்டு, லினக்ஸ் -ல்  iMessages-ஐ இரண்டு வழிகளில் ஆக்டிவேட் செய்யலாம். பீப்பர் செயலி ஒரு இணைப்பு பாலமாக மட்டுமே செயல்படுகிறது. உதராணமாக, இணைய தொடர்புடன் இருக்கும் Mac கம்பயூட்டரை பயன்படுத்தினால், பீப்பர் Mac செயலி துணையுடன்  iMessage-ஐ பயன்படுத்தலாம். 

ஐபோன் வாடிக்கயாளர்கள் Jailbroken  லிங்க் மூலம் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். பழைய ஐபோன்களில் பீப்பர் செயலியை பயன்படுத்துவதற்கு ஏதுவாக தங்களது நிறுவனம் முயன்று வருவதாக மிகிகோவ்ஸ்கி தெரிவித்துள்ளார். புதிய தளங்கள் மிகவும் நன்றாகத் தெரிந்தாலும், பீப்பர் வலைத்தளம் பற்றிய எந்த தகவல் பிரபலமாக தெரியவில்லை. என்கிரிப்ஷன் பற்றிய தகவல்கள் பீப்பர் இணையதளத்தில் இல்லை. இருப்பினும், இந்த செயலி தொடக்க நிலையில் இருப்பதால் படிப்படியாக அந்த செயலியின் சிறப்பு அம்சங்களை இணையதளத்தில் அப்டேட் செய்து வருகின்றனர்.

 

 
Published by:Tamilmalar Natarajan
First published: