ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

பப்ஜி பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்... புதிய பெயரில் பப்ஜி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பப்ஜி பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்... புதிய பெயரில் பப்ஜி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

புதிய பெயரில் பப்ஜி

புதிய பெயரில் பப்ஜி

திடீரென இந்தியாவில் இந்த கேம் தடை செய்யப்பட்டது பப்ஜி கேம் பிரியர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

பப்ஜி கேம் இந்தியாவில் பேட்டில்கிரவுண்ட் மொபைல் (BATTLEGROUND MOBILE) என்ற பெயரில் விரைவில் வெளியாகும் என கிராப்டன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் பிரபலமாக இருந்த பப்ஜி கேம், சீனாவின் மோதல் போக்கின் காரணமாக தடை செய்யப்பட்டது. பப்ஜி கேம் தென்கொரியாவைச் சேர்ந்த கிராப்டன் நிறுவனத்துடையது என்றாலும், சீனா பெருமளவு அந்த நிறுவனத்தின் முதலீடு செய்திருந்தது. திடீரென இந்தியாவில் இந்த கேம் தடை செய்யப்பட்டது பப்ஜி கேம் பிரியர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. மீண்டும் எப்போது இந்தியாவுக்கு வரும் என ஆவலாக காத்துக்கிடந்தனர்.

கிராப்டன் நிறுவனமும் இந்தியாவில் பப்ஜி வீடியோ கேமை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான அனைத்து வேலைகளையும் முன்னெடுத்து வந்தது. தனிநபர் தகவல் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் ஏற்று, இந்தியாவுக்காக பிரத்யேகமாக இந்த புதிய கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த பப்ஜி என்ற பெயர் மாற்றப்பட்டு பேட்டில்கிரவுண்ட் மொபைல் (Battleground mobile) என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகமாகிறது. இதனால், யூ டியூப்பில் இருந்த பப்ஜி தொடர்பான சேனலை நீக்கியுள்ள கிராப்டன் நிறுவனம், பேட்டிக்கிரவுண்ட் என்ற சேனலை நிறுவி, அதில் பேட்டில்கிரவுண்ட் மொபைல் விளையாட்டுக்கான அறிவிப்பையும் டீசரையும் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய அறிவிப்பு பப்ஜி பிரியர்களுக்கும், இந்தியாவில் தடை செய்யப்பட்டாலும் புதிய வி.பி.என் (VPN)-ஐ பயன்படுத்தி விளையாடி வந்தவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெயர் மாற்றப்பட்டாலும் பேட்டில்கிரவுண்ட் மொபைல் பப்ஜியில் கிடைத்த விறுவிறுப்பை கண்டிப்பாக கொடுக்கும் என கிராப்டன் நிறுவனம் கூறியுள்ளது. 8 மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட பப்ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதால், அந்த நாளை கேம் பிரியர்கள் எதிர்நோக்கியுள்ளனர். கூகுள் பிளே ஸ்டோரில் Battleground mobile கேம் இன்னும் இடம்பெறவில்லை.

இதுகுறித்து 8bit Creative கேம் நிறுவனத்தை நடத்தி வரும் அனிமேஷ் அகர்வால் பேசும்போது, "கிராப்டன் நிறுவனம் தற்போதும் பப்ஜி கேமை சீனாவில் நடத்தி வருகிறது. Esports தொடர்களையும் நடத்தி வருகிறது. அந்த நிறுவனம் இந்தியாவுக்காக மட்டும் பப்ஜி கேமை பேட்டில்கிரவுண்ட் என்ற புதிய பெயரில் அறிமுகப்படுத்துவது தேவையில்லை. இது பன்னாட்டு போட்டியாளர்களிடம் இருந்து இந்தியா போட்டியாளர்களை பிரிக்கும்" என தெரிவித்தார்.

Also read... ஐரோப்பாவின் முதல் 3D பிரிண்டட் வீடு - ரூ.71,000-க்கு வாடகைக்கு எடுத்துள்ள டச்சு தம்பதி!

ESFI இயக்குநர் லோகேஷ் சுஜி பேசும்போது, "இந்தியாவுக்காக மட்டும் பேட்டில் கிரவுண்ட் மொபைல் கேமை கிராப்டன் நிறுவனம் உருவாக்கியது என்பது தவறான விஷயம் ஒன்றும் அல்ல. பப்ஜி மொபைல் கேமுக்கு உலகளவில் இரண்டாவது மிகப்பெரிய மார்க்கெட்டாக இந்தியா உள்ளது. அதன்படி, புதிதாக இந்தியாவில் அறிமுகப்படுத்தும் கேம், தொழில்முறை முதலீட்டாளர்களையும் வாடிக்கையாளர்களையும் ஈர்க்கும்" எனக் கூறினார். இந்தியாவுக்காக மட்டும் பேட்டில்கிரவுண்ட் உருவாக்கியிருப்பது உலகளவிலான அனுபவம் இந்திய பப்ஜி பிரியர்களுக்கு கிடைக்காது என்று ஒரு தரப்பினரும், உலகம் முழுவதும் ஒரே மாதிரியான பப்ஜி விளையாட்டு இல்லை, பல்வேறு வகையான பப்ஜி வெர்சன்கள் இருக்கிறது என மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: PUBG