Pubg : குதூகலத்தில் பப்ஜி பிரியர்கள்- பி.ஜி.எம்.ஐ. விளையாட்டுக்கு முன்பதிவு தொடங்கியது!: முன்பதிவு செய்வது எப்படி?

பப்ஜி விளையாட்டின் இந்திய வெர்சனுக்கான முன்பதிவு தொடங்கியதையடுத்து, பலரும் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

பப்ஜி விளையாட்டின் இந்திய வெர்சனுக்கான முன்பதிவு தொடங்கியதையடுத்து, பலரும் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

  • Share this:
    பப்ஜி விளையாட்டின் இந்திய வெர்சனுக்கான முன்பதிவு தொடங்கியதையடுத்து, பலரும் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்ட ஒரு மொபைல் விளையாட்டு தான் பப்ஜி. நேரம் காலம் தெரியாமல் அனைவரும் பப்ஜி விளையாட்டில் மூழ்கி கிடந்தனர் என்றால் அது மிகையாகாது. இந்நிலையில், இந்தியா- சீனா எல்லை விவகாரம் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், சீன நாட்டு செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இதனால் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டன.

    இதேபோல், பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் இந்த தடை விதிக்கப்பட்டது. பப்ஜிக்கு விதிக்கப்பட்ட தடையால்  ஆன்லைன் விளையாட்டு பிரியர்கள் வேதனை அடைந்தனர்.  பப்ஜி லைட் மூலம் சிலர் அந்த விளையாட்டை விளையாட்டி வந்த நிலையில், இந்த சேவையும் கடந்த மாதத்தோடு நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் பப்ஜி பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக  பப்ஜி கேம்-ஐ உருவாக்கிய தென் கொரியாவின் கிராஃப்டன் நிறுவனம் இந்தியாவுக்கான பிரத்யேக பப்ஜி விளையாட்டை புதிய பெயரில் உருவாக்கியுள்ளது.

    பாட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா (Battlegrounds Mobile India) என்ற புதிய பெயரில் அறிமுகமாகவுள்ள இந்த விளையாட்டுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கியது முதல் ஏராளமாள பப்ஜி பிரியர்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர். விரைவில் இந்த விளையாட்டு செயலி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எப்படி முன்பதிவு செய்வது

    ஆண்ட்ராய்டு வெர்சன் 5.1.1 மற்றும் அதற்கு மேலுள்ள  , குறைந்தபட்சம் 2 ஜிபி ரேம் உடைய மொபைல் மூலம் இந்த விளையாட்டை விளையாட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கூகுள் ப்ளே செயலி உள்ளே சென்று Battlegrounds Mobile India என உள்ளீடு செய்தால் கிராஃப்டன் நிறுவனத்தின்  இந்திய வெர்சன் பப்ஜிக்கான முன்பதிவு பக்கத்துக்கு நம்மை இட்டுச்செல்லும். அதில் சென்று ‘ரிஜிட்டர்’ என்பதை கிளிக் செய்தால் முன்பதிவாகி விடும்.

    Must Read : மளிகை கட கூட மூடி கிடக்கு ஆனா எங்க கம்பெனி மட்டும் மூடல தம்பி" - இணையத்தில் வைரலாகும் லாக்டவுன் மீம்ஸ்

     

    இந்த செயலியை முன் பதிவு செய்வோருக்கு ரீகான் மாஸ்க், ரீகான் டிரஸ் உள்பட பல்வேறு பரிசுகள் காத்திருப்பதாகவும் க்ராஃப்டன் நிறுவனம் அறிவித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: