உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியைக் காப்பாற்ற வாட்ஸ்அப் வழங்கும் புது அப்டேட்!

பேட்டரியை தக்க வைக்க ஏதுவாக “set by battery saver option” என்னும் ஆப்ஷன் அறிமுகம் ஆக உள்ளது.

உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியைக் காப்பாற்ற வாட்ஸ்அப் வழங்கும் புது அப்டேட்!
வாட்ஸ்அப்
  • News18
  • Last Updated: December 4, 2019, 3:15 PM IST
  • Share this:
வாட்ஸ்அப் சார்பில் ஸ்மார்ட்போனின் பேட்டரியைக் காப்பாற்ற புதியதொரு அப்டேட் அறிமுகம் ஆக உள்ளது.

வாட்ஸ்அப் டார்க் மோட் அப்டேட் விரைவில் வெளியாகிவிடும். நீண்ட எதிர்பார்ப்பில் உள்ள டார்க் மோட் அப்டேட் உடன் கூடுதலாக போனுக்கும் பயனுள்ள சில அப்டேட்களையும் வாட்ஸ்அப் தர உள்ளது. பேட்டரியை தக்க வைக்க ஏதுவாக “set by battery saver option” என்னும் ஆப்ஷன் அறிமுகம் ஆக உள்ளது.

இதுபோக வாய்ஸ் கால் திரையில் லைட் மற்றும் டார்க் தீம் அடிப்படையில் தெரியும் வகையிலான அப்டேட் கிடைக்க உள்ளது. வாட்ஸ்அப் டார்க் மோட் மூன்று ஆப்ஷன்களைக் கொண்டிருக்கும். பேட்டரி சேவர், லைட் தீம், டார்க் தீம் ஆகியன கொடுக்கப்பட உள்ள 3 ஆப்ஷன்கள் ஆகும். ஆண்ட்ராய்டு 9 மற்றும் குறிப்பிட்ட சில சாதனங்களில் மட்டுமே இது கிடைக்கும் வகையில் உள்ளது.


இந்த லைட் மற்றும் டார்க் அம்சம் என்பது ட்விட்டரில் உள்ள ‘டிம்’ மற்றும் ‘லைட்ஸ் அவுட்’ அம்சங்களை ஒத்திருப்பது போல் தெரிகிறது. இன்னும் டார்க் மோட் அப்டேட் வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்படவில்லை. ஆனால், கூடிய விரைவில் முதற்கட்டப் பயன்பாடு ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க: வாட்ஸ்அப் செயலியில் வெளியாகும் அடுத்தடுத்த அப்டேட்ஸ்!
First published: December 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...