கிரிப்டோ கரன்சி மீது உங்களுக்கு ஆர்வமா? இதைக் கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்

க்ரிப்டோ கரன்ஸி

கிரிப்டோ கரன்சியின் மீது தற்போது பொதுமக்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.

 • Share this:
  ZEBPAY மற்றும் NETWORK18 இணைந்து கிரிப்டோகரன்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியை தொடங்கியுள்ளன. இதன் மூலம் கிரிப்டோ கரன்சியின் பல்வேறு அம்சங்களை நம்மால் புரிந்து கொள்ளமுடியும். அதன்படி இன்று, கிரிப்டோ கரன்சி என்றால் என்ன, பிரபலமான சொத்தாக அது கருதப்படுவது ஏன் என்பதை அறிந்துகொள்ளலாம்.

  மெய்நிகர் நாணயம் எனப்படும் கிரிப்டோ கரன்சியானது, என்கிரிப்டெட் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது ஆகும். டிஜிட்டல் பணம் என்றும் அழைக்கப்படும் இதனை, அமெரிக்காவின் டாலர் மற்றும் இந்தியாவின் ரூபாயை போன்றே, குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

  கிரிப்டோகரன்சி ஒரு பரவலாக்கப்பட்ட அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொரு பரிவர்த்தனையும் டிஜிட்டல் கையொப்பத்தால் சரிபார்க்கப்படுவதுடன், அதற்கான ஆவணங்கள் கிரிப்டோகிராபியின் உதவியுடன் சேமித்து வைக்கப்படுகிறது. அதாவது பிளாக் செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கிரிப்டோ கரன்சியானது, அதனை வழங்குபவர் மற்றும் பெறுபவரால் மட்டுமே அணுகக் கூடிய விவரங்களுடன் பாதுகாப்பாக சேமிக்கப்படுகிறது.

  டிஜிட்டல் பணம் என்பதால் இதனை நோட்டுக்களாகவோ, நாணயமாகவோ அச்சடிக்க முடியாது.  எனவே, கிரிப்டோகரன்சியை அதன் அடிப்படை வடிவத்தில், இணைய வாயிலாக மட்டுமே பயன்படுத்த முடியும்.

  முதலீடு செய்வதற்கு ஏற்றதாக கிரிப்டோகரன்சி மாறியுள்ள சூழலில், அதன் மீது ஆர்வம் காட்டுவதற்கு பல்வேறு காரணங்களை மக்கள் குறிப்பிடுகின்றனர்.

  கிரிப்டோகரன்சியை சொத்தாக பார்ப்பதே முக்கிய காரணமாக உள்ளது. வங்கிகளால் அல்லாமல் பரவலாக்கப்பட்ட அமைப்பால், நிர்வகிக்கப்படுவது முதலீட்டாளர்களை கவர்ந்துள்ளது.

  பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் சேகரிக்கப்படும் பரிவர்த்தனை தகவல்களை ஹேக் செய்யவோ, ஏமாற்றவோ முடியாது என்பதால்,  முதலீட்டாளர்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. வருடத்தின் 365 நாட்களிலும் 24 மணி நேரமும் கிரிப்டோகரன்சியை பயன்படுத்த முடியும் என்பதும், வாடிக்கையாளர்களை கவர்ந்த மற்றொரு அம்சமாகும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கிரிப்டோகரன்சி டிஜிட்டல் பணமாக உள்ளதால், அதனை எந்த நாட்டிலும் பயன்படுத்த முடியும் என்பது முக்கிய பலனாக உள்ளது. எந்த நாட்டின் அரசாலும் கட்டுப்படுத்தப்படாததால், கிரிப்டோகரன்சியின் மதிப்பு என்பது எங்கும் மாறாது. எந்தவொரு அரசிலும் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படாததால், கிரிப்டோகரன்சி எந்த நாட்டின் பொருளாதார நிலையிலும் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Karthick S
  First published: