Home /News /technology /

BHASHINI | பிராந்திய மொழிகளின் புரிதலுக்கான சிக்கலை தீர்த்து வைக்கும் அரசின் புதிய தளம்

BHASHINI | பிராந்திய மொழிகளின் புரிதலுக்கான சிக்கலை தீர்த்து வைக்கும் அரசின் புதிய தளம்

bhashini

bhashini

Digital India BHASHINI | டிஜிட்டல் உலகில் மொழி சார்ந்த தடைகளை நீக்க, செயற்கை நுண்ணறிவு (ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ்) மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் (நேச்சுரல் லேங்குவேஜ் பிராசசிங்) ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய அரசு பாஷிணி என்ற புதிய தளத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
கடந்த சில ஆண்டுகளை விட, சமீபமாக பிராந்திய மொழிகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இணையம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில், உலகம் முழுவதும் பல தளங்கள் உள்ளூர் மற்றும் பிராந்திய மொழிகளிலும் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. இணையத்தளம் என்றாலே ஆங்கிலத்தில் மட்டும் தான் அணுக முடியும் என்ற நிலை மாறி, அந்தந்த நாட்டின், பிராந்தியத்தின் தாய்மொழியில் உலகின் எந்த மூலையிலும் பயன்படுத்த வசதியாக டிஜிட்டல் உலகம் மாறி வருகிறது.

மேலும், டிஜிட்டல் உலகில் மொழி சார்ந்த தடைகளை நீக்க, செயற்கை நுண்ணறிவு (ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ்) மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் (நேச்சுரல் லேங்குவேஜ் பிராசசிங்) ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய அரசு பாஷிணி என்ற புதிய தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த தளம், தொழில்முனைவோர் முதல், தனிநபர்கள் வரை பொது தளத்தில் எளிதாக அணுகலாம்.

நாட்டின் டிஜிட்டல் முன்னெடுப்புகளை, முயற்சிகளை மற்றும் திட்டங்களை நாட்டு மக்களோடு அவரவர்களின் தாய் மொழியில் பகிர்ந்து கொள்ள, பாஷிணி உதவும். அனைவரும் தங்கள் தாய் மொழியில், பிராந்திய மொழியில் புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல், இதன் மூலம், டிஜிட்டல் ஈகோசிஸ்டமும் ஒருங்கிணைந்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதுமட்டுமில்லாமல், ஏற்கனவே கூறியது போல நாட்டின் இணையதளம் பயன்படுத்தும் ஒவ்வொரு நபரும் அவருடைய சொந்த மொழியிலேயே அதாவது தாய்மொழியிலேயே இணையதளத்தை பயன்படுத்தலாம். இதன் மூலம் மக்கள் விரும்பும் விஷயங்கள் அனைத்துமே இந்திய மொழிகளில் கிடைக்கும். அரசாங்கம் வெளியிடும் விவரங்கள் தவிர்த்து அறிவியல் தொழில்நுட்பம் என்று அனைத்து உள்ளடக்கங்களும் பிராந்திய மொழிகளில் எளிதாக கிடைப்பதற்கு வழிவகுக்கும்.

Also Read : தமிழ் தலைப்புகளை அறிமுகம் செய்யும் டிவிட்டர் - இது எப்படி இயங்கும்?

மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் “இந்திய மொழிகளில் தனித்துவமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு செயல்பட்டு வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், மத்திய மற்றும் மாநில அரசு ஏஜென்சிகள் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு இந்த ஈகோ சிஸ்டம் உதவும்” என்று தெரிவித்தது.

ஒரு மொழியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது மாறி பல மொழிகளில் ஒரே இடத்தில் இணையும் பொழுது, வணிகம் மற்றும் சேவை நிறுவனங்களுக்கு பல விதங்களில் சாதகமாக இருக்கும். நாட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும், அவர் எந்த மொழி பேசினாலும், தங்களுடைய சேவைகளும் பொருட்களும் கொண்டு சேர்ப்பது மிக எளிதாக இருக்கும். எனவே அரசாங்கத்தை பொறுத்தவரை, மக்கள் விரும்பும் அனைத்து தகவல்களும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது டிஜிட்டல் இந்தியாவின் குறிக்கோளாக இருக்கிறது.

Also Read : லொக்கேஷன் டேட்டா அணுக யூஸர்களின் ஒப்புதலை பெறுவது கட்டாயம்.. UPI ஆப்ஸ்களுக்கு NPCI அதிரடி உத்தரவு.!

டிஜிட்டல் இந்தியா வாரம் 2022 சந்திப்பின்போது, அமைச்சர் அஸ்வினி வார்ஸா கூறுகையில் “ஒரு மொழி மட்டுமே பேசும் ஒரு நபர் இன்னொரு மொழி பேசும் நபர் உடன் எளிதாக இணைவதற்குத்தான் பாஷிணி உருவாக்கப்பட்டது” என்று தெரிவித்தார். “இன்று இந்திய மொழிகளுக்காக உருவாக்கப்பட்ட பாஷிணி, நாளை உலகலாவிய மொழி சார்ந்த தளமாக இயங்கும்” என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறினார்.அது மட்டுமல்லாமல் பாஷினி எப்படி இருக்கிறது என்று நீங்கள் பயன்படுத்தி பாருங்கள் அதில் உங்களுக்கு தேவையான புதிய தீர்வுகளை கண்டுபிடித்து, பாஷிணியின் அனுபவத்தை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வது நம் அனைவரின் கடமை என்று சந்திப்புக்கு வந்திருந்த பார்வையாளரிடம் அவர் தெரிவித்தார்.

மின்னணு மற்றும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி துறையின் அமைச்சரான ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில் “தொழில்நுட்ப துறையில் ஏற்படக்கூடிய அனைத்து துறை சார்ந்த கண்டுபிடிப்பும், வளர்ச்சியும் முன்னேற்றமும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்கு இல்லாமல் ஏற்படவில்லை என்பதை எளிதாக காண முடிகிறது. எனவே டிஜிட்டல் ஈகோ சிஸ்டத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஒரு முக்கியமான பங்கை வகிக்கின்றன.

Also Read : அதிகரித்து வரும் சைபர் தாக்குதலும், புதிய VPN விதிகளும் - யூசர்களின் டேட்டா பாதுகாப்பாக இருக்குமா.?

மிஷன் டிஜிட்டல் இந்தியா பாஷிணி மூலம் ஐடி சேவைகளை பயன்படுத்தி இந்திய மொழிகள் இந்த தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே இது வருங்காலத்தில் AI அல்லது மொழி சம்பந்தப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கும் என்று தெரிவித்தார். பாஷிணி செயலி கூகுள் பிளேஸ்டோரில் கிடைக்கிறது.
Published by:Selvi M
First published:

Tags: Digital India, India

அடுத்த செய்தி