Home /News /technology /

சீன மொபைல்கள் இந்தியாவில் தடையா.? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசாங்கம்.!

சீன மொபைல்கள் இந்தியாவில் தடையா.? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசாங்கம்.!

சீன மொபைல்

சீன மொபைல்

Chinese Phones Ban | 12,000 ரூபாய்க்கும் குறைவாக இந்தியாவில் விற்கப்படும் பெரும்பாலான முறைகள் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன. விலை மலிவான சீன தயாரிப்புகள் இந்தியாவில் தடை செய்யப்படுகிறது பட இருக்கிறது என்ற செய்தி வெளியானது. இதற்கு தற்போது அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் சீன மொபைல் தடை செய்யப்படும் என்ற செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எவ்வளவு விலை உயர்ந்த மாடலாக இருந்தாலும் சரி, தனக்கு பிடித்திருந்தால் அந்த மொபைல் போனை வாங்குவேன் என்று பல்லாயிரம் ரூபாய்களில் விற்பனை செய்யப்படும் மொபைல்களை வாங்குபவர்களும் இருக்கிறார்கள். அதே நேரத்தில், அதே அம்சங்களுடன் விலை மலிவான எல்லோரும் வாங்கக்கூடிய பட்ஜெட்டிலும் மொபைல் ஃபோன்கள் கிடைக்கின்றன. 12,000 ரூபாய்க்கும் குறைவாக இந்தியாவில் விற்கப்படும் பெரும்பாலான முறைகள் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன. விலை மலிவான சீன தயாரிப்புகள் இந்தியாவில் தடை செய்யப்படுகிறது பட இருக்கிறது என்ற செய்தி வெளியானது. இதற்கு தற்போது அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் விலை குறைவான மொபைல்களுக்கான சந்தை மிகப்பெரிய அளவில் இருக்கின்றது. எனவே உள்நாட்டு தயாரிப்பாளர்களுக்கு உற்பத்தி வாய்ப்பு கிடைக்கும்பொழுது இந்தியாவின் பொருளாதாரம் மேம்படும். எனவே, சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மொபைல்கள் இந்தியாவில் விற்பனைக்கு தடை செய்யப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது. சியோமி, ரியல்மீ, ஓப்போ, விவோ என்று பெரும்பாலான நிறுவனங்களின் பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன்கள் தடை செய்யப்பட்டால், அதற்கான டிமாண்ட்டை இந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள் உற்பத்தி செய்து பூர்த்தி செய்ய முடியுமா என்ற கேள்வியும் மற்றொரு பக்கம் எழுந்த வண்ணம் இருக்கிறது.

சீன மொபைல் இந்தியாவில் தடை செய்யப்படுமா அல்லது தொடருமா என்பது பற்றி அரசு தரப்பில் எப்போது தகவல் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. தற்போது அந்த கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, 12 ஆயிரத்துக்கும் குறைவான ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தடை செய்யப்படுமா என்பதற்கு அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.



 

மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை யூனியன் மினிஸ்டர்ரான ராஜீவ் சந்திரசேகர் இதைப் பற்றி கூறுகையில் ‘இதுவரை அப்படி ஒரு ப்ரோபோசல் வரவில்லை. இந்திய பிராண்டுகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பது அரசாங்கத்தின் கடமை மற்றும் பொறுப்பாகும். முறைகேடான வியாபாரத்தின் மூலமாக இந்திய பிராண்டுகள் சந்தையில் ஒதுக்கப்பட்டால், உடனடியாக அரசாங்கம் தலையிட்டு அதனை நிவர்த்தி செய்யும்’ என்று தெரிவித்தார்.

Also Read : பாதுகாப்பை பலப்படுத்திய வாட்ஸ்அப்... இனி இதை செய்ய முடியாது.!

ஏற்கனவே ப்ளூம்பெர்க் வெளியிட்ட ஒரு அறிக்கையில் சீன பிராண்டுகளை இந்தியாவில் தடை செய்வது மூலம் இந்தியா தனது உள்ளூர் பிராண்டுகளின் சந்தையை மேம்படுத்த முடியும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் அமைச்சர் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தவற்றை மறுத்து, இந்தியா சீன பிராண்டுகளை தடை செய்யும் எண்ணத்தில் இல்லை என்பதை உறுதிசெய்துள்ளார். அது மட்டுமல்லாமல் சீன பிராண்டுகள் இந்தியாவில் ஷாப்களை வைத்து, அதன் மூலம் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பும் திட்டமும் இருக்கிறது என்பதையும் கூறினார்.



உலகளாவிய மொபைல் சந்தைகளுக்கு இந்தியா ஒரு மையப்புள்ளியாக இருக்குமென்பதால் வெளிநாட்டு பிராண்டுகள் இந்தியாவை தேர்வு செய்யமாறு கூறப்பட்டு வருகிறது. இந்தியாவில் தயாரிக்கக்கூடிய பிராண்டுகள் மற்றும் வெளிநாடுகளின் முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் அளவுக்கு மின்னணு துறையில் ஈகோ சிஸ்டம் உருவாக்குவது தான் பிரதம மந்திரியின் குறிக்கோள் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Also Read : பழைய எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை வாங்கி உபயோகிப்பது நல்லதா?

அமைச்சகத்தின் இந்த கூற்றுகளின் மூலம் சீன பிராண்டுகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதில் எந்த விதமான பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை என்பது தெளிவாக இருக்கிறது. ஆனால் ஏற்கனவே ஒரு சில சீன நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்த காரணமாக இந்த நிறுவனங்களின் பரிவர்த்தனைகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Central government, China, Mobile phone, Technology

அடுத்த செய்தி