டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

18 வயதுக்கு குறைந்தவர்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது. பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது. ஆபாச வீடியோக்களை பதிவேற்றினால் டிக் டாக் செயலி தானாக செயலிழந்துவிடும்

news18
Updated: April 24, 2019, 6:40 PM IST
டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
டிக் டாக்
news18
Updated: April 24, 2019, 6:40 PM IST
டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை மதுரை உயர் நீதிமன்றம் நிபத்தனையுடன் நீக்கியது.

டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்யவும் அதன் வீடியோக்களை ஊடகங்களில் ஒளிப்பரப்பவும் மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவைத் தொடர்ந்து டிக் டாக் செயலி, ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டாரிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது.

அதனை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தொடரப்பட்டது. அந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.


டிக் டாக் சார்பில், ‘உயர் நீதிமன்றத்தின் தடைக்குப் பிறகு, டிக் டாக் செயலியில் இருந்து 6 மில்லியன் வீடியோக்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. 18 வயதுக்கு குறைந்தவர்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது. பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது. ஆபாச வீடியோக்களை பதிவேற்றினால் டிக் டாக் செயலி தானாக செயலிழந்துவிடும்’ என்று உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதனையடுத்து, உயர் நீதிமன்ற நீதிபதிகள், ‘சிறுவர், சிறுமியர், பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. டிக் டாக் நிறுவனம் கொடுத்த வாக்குறுதியை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும். சமூக சீர்கேட்டை உருவாக்கும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது’ என்று நிபந்தனையுடன் டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

Also see:

Loading...

First published: April 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...