குரூப்களில் தேவையில்லாத கருத்துகளால் சிக்காமல் இருக்க உஷாரான வாட்ஸ் அப் அட்மின்கள் !

குரூப்களில் தேவையில்லாத கருத்துகளால் சிக்காமல் இருக்க உஷாரான வாட்ஸ் அப் அட்மின்கள் !
மாதிரி படம்
  • Share this:
குரூப்களில் தேவையில்லாத கருத்துகளால் சிக்காமல் இருக்க வாட்ஸ் அப் அட்மின்கள் உஷாரான  நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

சமூக வலைதளங்களில் தேவையில்லாத கருத்துகள், வதந்திகள் பரவுவதை தடுக்க காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்தது. சில இடங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.


இந்நிலையில், வாட்ஸ் அப் குரூப்களில் பதிவுகளால் தேவையில்லாத கருத்துகளால் சர்ச்சையில் சிக்காமல் இருக்க குரூப் அட்மின்கள் அட்மின் ஒன்லி மோடில் குரூப்களை மாற்றிவிட்டனர். அதாவது, குரூப் யார் வேண்டுமானாலும் கருத்து இடுவதற்கு பதில் அட்மின் மட்டுமே கருத்துகளை பதிவிடும் வகையில் Admin Only நிலைக்கு மாற்றிவிட்டனர்.

முன்னதாக இது தொடர்பான அறிவுறுத்தல் வாட்ஸ் அப்பில் பரவ தொடங்கியது. தமிழக உட்பட நாடு முழுவது மாநில அரசுகள் சமூக வலைதள பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக பதிவிடுமாறு கேட்டுக்கொண்டனர். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
First published: November 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்