New Gadgets : இந்த வாரம் அறிமுகமான அட்டகாசமான புதிய கேட்ஜெட்ஸ்.. ஸ்மார்ட்போன் முதல் வாட்ச் வரை..

காட்சிப் படம்

ஓப்போ நிறுவனம் ஓப்போ பைன்ட் எக்ஸ்-3 புரோவில் புதிய வேரியண்டை இந்த வாரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

  • Share this:
ஒவ்வொரு வாரமும் டெக் உலகில் ஏராளமான புதிய கேட்ஜெட்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இந்த வாரமும் நீண்ட நாள் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஸ்மார்ட்போன்கள், உதிரி பாகங்கள், ஸ்மார்ட்போன் சிப்கள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக, ரெட்மி 10 எஸ், Asus Zen Fone 8 Series, Intel’s latest 11th ஜெனரேஷன் கோர் H Tiger Lake சீரிஸ் ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள், அவற்றில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களை தெரிந்து கொண்டால், புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேஜெட்டுகளை தேர்ந்தெடுக்க வசதியாக இருக்கும்.

1. ஓப்போ FIND X3 PRO MARS

ஓப்போ நிறுவனம் ஓப்போ பைன்ட் எக்ஸ்3 புரோ -வில் புதிய வேரியண்டை இந்த வாரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. மார்ஸ் எக்ஸ்புளேரேஷன் எடிசனான இந்த வேரியண்ட் ஸ்கை ராக்கி கிரே கலரில் உள்ளது. ஓ.எஸ் தீம் மேம்படுத்தப்பட்டுள்ளது. குவால்கம் ஸ்நாப்டிராகன் சிப் 888 Pair - உடன், 16 ஜிபி ரேம் மற்றும் 512 இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. கேமரா பிரைமரி, 50 மெகா பிக்சல் ஷூட்டர் மற்றும் வைட் ஆங்கில் கேமரா ஷூட்டர் 50 மெகா பிக்சல் உள்ளது. ஓப்போ Find எக்ஸ் 3 -ன் முன் பக்க கேமரா 32 மெகா பிக்சல் கொடுக்கப்பட்டுள்ளது.

2. ZTE AXON 30 ULTRA

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ZTE, அந்நாட்டில் ZTE Axon 30 Ultra என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. குவால்கம் ஸ்நாப்டிராகன் 888 சிப்செட் Pair -உடன் 12 ஜிபி ரேம், அதிகபட்சமாக 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜையும் வழங்குகிறது. 6.67 இன்ஞ் full-HD+ AMOLED டிஸ்பிளே, 144Hz ரெப்பிரஸ் ரேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. கேமரா 64 மெகாபிக்சல். அதில் ஒன்று பெரிஸ்கோப் லென்ஸ் 8 மெகாபிக்சல் ஆகும். செல்பி எடுக்க பயன்படும் முன்பக்க கேமரா 16 மெகாபிக்சலாக உள்ளது.

3. டூயல் சென்ஸ் கன்ட்ரோலர்கள்

சோனி நிறுவனம் இரண்டு வகையான கலர்களில் டூயல் சென்ஸ் கன்ட்ரோலர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. காஸ்மிக் ரெட் மற்றும் மிட்நைட் பிளாக் கலர்களில் இருக்கும் அந்த இரு கன்ட்ரோலர்களும் அடுத்த மாதம் உலகம் முழுவதும் விற்பனைக்கு வர உள்ளன. கேலக்ஸி வடிவமைப்பு அடிப்படையாகக் கொண்டு டூயல் சென்ஸ் கன்ட்ரோலர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வெள்ளை நிறத்தில் உள்ள டூயல் சென்ஸ் கன்ட்ரோலர்களுக்கு மாற்றாக, இந்த புதிய கன்ட்ரோலர்களை சோனி அறிமுகப்படுத்துகிறது.

4. REDMI NOTE 10S

சியோமி நிறுவனம், ரெட்மி 10 சீரிஸில் நியூ ரெட்மி நோட் 10S என புதிய வரவை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 6.43-இன்ஞ் full-HD+ (1,080×2,400 pixels) AMOLED டிஸ்பிளேவை நியூ ரெட்மி நோட் 10S பெற்றுள்ளது. டூயல் சிம்கார்டு வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் பிரைமரி கேமரா 64 மெகாபிக்சலைக் கொண்டுள்ளது. அல்ட்ரா வைட் கேமரா 8 மெகாபிக்சலையும் மேக்ரோ சென்சார் மற்றும் டெப்த் சென்சார் ஆகியவையும் 2 மெகாபிக்சலையும் கொண்டுள்ளன. செல்பி கேமரா 13 மெகாபிக்சல். தற்போது சந்தையில் உள்ள இந்த ஸ்மார்ட்போனை அமேசான், எம்.ஐ.ஹோம், எம்.ஐ ஸ்டூடியோ ஆகியவற்றில் மே 18 ஆம் தேதி முதல் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். விலை ரூ.14,999 (6GB + 64GB storage variant), 15,999 ரூபாய் விலையில் உள்ள ஸ்மார்ட் போன் 6GB + 128GB ஸ்டோரேஜ் வசதி கொண்டது.

5. நியூ சிப்

தைவான் நாட்டைச் சேர்ந்த மீடியா டெக் சிப் மேக்கர் 5ஜி சிப் செட்டை MediaTek Dimensity ரெட்900 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. டைமென்சிட்டி 1100, 1200 ஆகிய மாடல்களைப் போன்று 6nm புரோசஸில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய SoC குவாட் கொண்ட மூன்றாவது தலைமுறை மீடியா டெக் ஏ.பி.யூ இதுவாகும். மீடியா டெக் நிறுவனத்தின் டைமென்ஸிட்டி 820 எஸ்.ஓ.சி வெற்றிப்பெற்றதை தொடர்ந்து இந்த மாடலை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்போன் தயாரிப்பிலும் மீடியா டெக் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

6. ஆசஸ் ஜென்போன் 8 சீரிஸ்

ஆசஸ் நிறுவனம் இந்த வாரம் Zen Fone 8 சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைவரும் வாங்குவதற்கு ஏற்ற வகையில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. காம்பாக்ட் டிசைனில் உள்ள 5.9 இன்ஞ் டிஸ்பிளே, டிரிப்பிள் கேமரா செட்டப் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஆசஸ் சென்போன் 7 புரோவின் புதுபிக்கப்பட்ட மாடலாகும். Asus Zen Fone 8 மாடல் ரூ.44,100, Asus Zen Fone 8 Flip ரூ.71,000 விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மே 12ம் தேதி இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனை வெளியிட ஆசஸ் திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது

புதிய வரவுகளில் மேலும் சில..

ரியல்மீ C20A, இன்பைனிக்ஸ் Hot 10, டெக்னோ Camon 17 புரோ, லாவா Z2 மேக்ஸ் ஆகியவை இந்த வாரம் வெளியிடப்பட்டுள்ள மேலும் சில ஸ்மார்ட்போன்கள். லேப்டாப் பொறுத்தவரையில், ஆசஸ் நிறுவனத்தின் Zephyrus M16 மற்றும் Zephyrus S17 ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. டெல் XPS 15 மற்றும் XPS 17, லெனோவோ Legion 5i ஆகிய லேப்டாப்கள் விற்பனைக்கு வந்துள்ளன. ரெட்மி வாட்ச், Flipbuds Pro பிரேக் கவர் ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளன.

 
Published by:Tamilmalar Natarajan
First published: